Sunday, February 13, 2022

முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு மேற்கு வங்க கவர்னர் கண்டனம்.

 மேற்கு வங்க சட்டசபையை முடக்கி வைத்துள்ளது தொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் கடுமையாக இருப்பதாக, மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.



latest tamil news



மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. 'கவர்னர் ஜக்தீப் தன்கரை திரும்பப் பெற வேண்டும்' என, திரிணமுல் காங்., தொடர்ந்து கூறி வருகிறது.இந்நிலையில் மேற்கு வங்க சட்டசபையை முடக்கி வைப்பதாக, கவர்னர் ஜக்தீப் தன்கர் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பான தகவலை சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக திரிணமுல் காங்., எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் வேறு சில கட்சிகள் கவர்னரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

கவர்னர் ஜக்தீப் தன்கரின் முதல் பதிவை அடிப்படையாக வைத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'இதுவரையிலான மரபு மற்றும் நடைமுறைகளில் இல்லாத ஒன்றை மேற்கு வங்க கவர்னர் உருவாக்கியுள்ளார். 'மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் சாசனத்தை மதித்து நடந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பதில்அளித்து, கவர்னர் தன்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:மேற்கு வங்க அரசின் பரிந்துரையை ஏற்றே, அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, சட்டசபையை முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கள் மிகவும் கடுமையாக உள்ளன. உண்மையை புரிந்து கொள்ளாமல், விபரங்கள் தெரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news


சட்டசபையை முடக்குவதற்கான உத்தரவில் கவர்னர் கூறியுள்ளதாவது: மேற்கு வங்க சட்டசபையை முடக்கவும், வரும் மார்ச் 2ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த அழைப்பு விடுத்தும் மாநில அரசிடம் இருந்து கடிதம் வந்தது. அதன்படி சட்டசபை முடக்கப்படுகிறது.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் சந்தித்து பேச திட்டம்மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலினை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: மம்தா பானர்ஜி, என்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். பா.ஜ., அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், கவர்னர்களின் அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைகள் பற்றியும், அவர்கள் அதிகாரத்தை அப்பட்டமாக தவறாக பயன்படுத்தும் போக்கு பற்றியும், தன் கவலையையும், ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டார்.

இதுதொடர்பாக, எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்கள் ஒன்றாக சந்திக்கலாம் எனவும் பரிந்துரைத்தார். மாநில சுயாட்சியை உயர்த்தி பிடிப்பதில், தி.மு.க.,விற்கு உள்ள உறுதிப்பாட்டை அவரிடம் வெளிப்படுத்தினேன். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களின் சந்திப்பு விரைவில் டில்லிக்கு வெளியே நடக்கும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...