Friday, February 25, 2022

உளவியல் சிந்தனை ..

 பெண் குழந்தை பிறந்த உடன்

அந்த குழந்தையை கைகளில்
வாங்க கூட முடியாமல்
கண்ணில் நிறைந்த
ஆனந்த கண்ணீரோடு அந்த குழந்தையை பார்த்தவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி...
காலையில் அலாரம் வச்சு
பள்ளிக்கூடத்துக்கு செல்ல
எழுப்பி விட கிட்ட வந்து
வாஞ்சையோடு தலையை
தடவி கொடுப்பவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி..
இன்னும் ஒரு தோசை வச்சிக்க
இல்லைனா லஞ்ச் வரதுக்குள்ள
பசிக்கும்மா ன்னு தட்டுல ஒரு
தோசையை வைத்தவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி...
எந்த அலுவல் வேலையாக
இருந்தாலும் கரெக்ட் டைம்க்கு
பொண்ணு வீட்டுக்கு வந்துட்டாளானு
அக்கறையோடு போன் பண்ணுபவனுக்கு
தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி..
ராத்திரி தூங்கும்போது
ஒரு சின்ன இருமல் சத்தம்
வந்தாலும் ஓடிச்சென்று
சிரப் கொடுப்பவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி...
ஸ்கூல் டூர் போறாங்க
நானும் போகாட்டாப்பானு
போனதும் அந்த இரண்டு நாளும்
அதே நினைப்பா இருப்பவனுக்கு
தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி...
பொண்ணு பெரிய மனுஷி ஆயிட்டானு
கேள்விப்பட்டதும் தன்னாலே
கண்ல இருந்து வந்த ஆனந்த கண்ணீரை
துடைச்சவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி...
திருமண ஆன அன்று அத்தனை
பேரும் கடமை முடிந்துவிட்டது என
இருக்கையில் பார்த்துக்கும்மா
நான் இருக்கேன்னு கரம் பற்றி
ஆறுதல் சொன்னவனுக்கு தான் தெரியும்
பெண் குழந்தை அருமை பற்றி....
பிரிக்க முடியாத பந்தம்
தந்தை மகள் உறவு..
அத்தனை உறவுகளை விட
ஒரு படி மேல் அந்த உறவுக்கு..
அப்பா என்று குரல் வந்தவுடன்
அன்பாய் மகளை பார்க்கும் அந்த
ஒற்றைப் பார்வை இருக்கே
சொர்க்கம் சார் பொண்ணுங்களுக்கு.
பெண் குழந்தை என்றாலே அப்பாவுக்கு சந்தோஷம் தான் பின் காலத்தில் மருமகள் எப்போது சோறு போடுவா என்று அவலநிலை இல்லை...
எனக்கு தெரிந்த வரையில் பெற்றோர்களை வயதான காலத்தில் கவனித்து கொள்வது பெண் குழந்தை தான்......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...