Saturday, May 21, 2022

பலாப்பழம்..

 பலாப்பழம் முக்கனிகளுள் இரண்டாவது கனியாகும். இந்த பழம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது. பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.

பலா பழத்தின் மருத்துவ குணங்கள் :
===============================
🌿பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.
🌿கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.
🌿அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.
🌿பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பலாக்காயை சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.
🌿பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.
🌿பலாக்காயை சமைத்து சாப்பிட்டால் பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவைகள் குணமாகும்.
பழுத்த பலாச்சுளையில் பழ சர்க்கரை சத்து அதிகளவு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் பலாச்சுளைகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.
🌿பலாவிலிருந்து தயாரித்த உணவுகளை அல்லது பலாச்சுளையினை ஒரு கிலோ சாப்பிட்டால்கூட எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
இருப்பினும் பழுத்த பலாச்சுளை மலச்சிக்கலை குணப்படுத்தும் என்பதால் பழக்கமில்லாமல் அதிகம் சாப்பிடும்போது வழக்கத்திற்கு மாறாக வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
🌿சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொண்டால் நோய் தீரும்.
🌿பலாவிலுள்ள தாவர உயிர்ச்சத்துகள் புற்றுநோய் உருவாகாமல் தடுப்பதற்கும், அணுக்களுக்கு உயிரூட்டம் கொடுத்து என்றும் இளமையான தோற்றத்தையும் கொடுக்கும்.
🌿பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது சுக்கு அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது.
🌿வெறும் பலாப்பலத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு வலிமை தரும்.
பலாவில் உள்ள சத்துக்கள்
=======================
🌿பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம்
காணப்படுகின்றன.
🌿வைட்டமின் ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.
🌿நரம்புகளை உறுதியாக்கும்
வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும்.
🌿மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும்,
நரம்புகளுக்கு உறுதி தரும்.
🌿ரத்தத்தை விருத்தியாக்கும்.
பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
🌿தொற்றுக்கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும். உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.
May be an image of fruit

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...