Thursday, May 19, 2022

இது உங்கள் இடம் மரண தண்டனை சட்டத்தை நீக்கலாம்!

 முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதை, நாட்டிற்கு மீண்டும் ஒரு சுதந்திரம் கிடைத்தது போன்றும், மறுபடியும் ஒரு மஹாத்மா காந்தி வந்து விட்டது போன்றும், ஒருதரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

மரண தண்டனை சட்டத்தை நீக்கலாம்!



உண்மையில், பேரறிவாளன் விடுதலை தவறான முடிவு என்பது, அரசியலுக்கு அப்பாற்பட்ட சாமானியர்களின் எண்ணம். தகவல் தொழில்நுட்பத்தில், இந்தியா இன்று சிறந்து விளங்குகின்றது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் முன்னாள் பிரதமர் ராஜிவ்; இதை மனசாட்சி உள்ள அனைவரும் அறிவர்.



'இந்தியாவை, 21ம் நுாற்றாண்டுக்கு அழைத்துச் செல்வேன்' என்று அறைகூவல் விடுத்து செயல்பட்டவர் அவர். அவரது உடலை, தற்கொலைப் படை தாக்குதல் வாயிலாக, சின்னாபின்னமாக்கியவர்கள் விடுதலை புலிகள். ராஜிவ் கொலை குற்றவாளிகளுக்கு, உச்ச நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை உடனே நிறைவேற்றாமல், மத்திய அரசும், ஜனாதிபதியும் காலம் தாழ்த்திய செயலே, தற்போதைய நிலைமைக்கு காரணம். உலகையே உலுக்கிய கொடூர கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவர்களை, விடுதலை செய்வது என்பது தவறானது.



இப்படியே போனால், இந்தியாவில் யாரும் யாரையும், எத்தனை பேரையும் கொலை செய்யலாம்; யாராவது எதிர்த்தால், அது மனித உரிமை என்று சொல்லி மிரட்டலாம் என்ற எண்ணம், பயங்கரவாதிகளுக்கும், தேசவிரோத சக்திகளுக்கும் வந்து விடும்; அவர்களுக்காக போராட அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் துணை நிற்கும். இப்படிப்பட்ட கொடுமைகளை பார்க்காமல் இருக்க வேண்டும் எனில், கொடூர கொலைகளுக்கு துாக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தையே இனிமேல் நீக்கி விடலாம். பயன்படாத அந்தச் சட்டம் இருந்தால் என்ன... இல்லாவிட்டால் என்ன?



***

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...