Tuesday, May 17, 2022

வசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை!

 நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மே ௧௩ல் காணொலி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார். அதில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, சிவகங்கை நகராட்சி கமிஷனர், ஒரு கேள்விக்கு சரியாக பதில் தராததால், அவரை, 'முட்டாள், மூதேவி' என்று பொன்னையா திட்டியுள்ளார்.


அத்துடன், 'மற்ற நகராட்சி கமிஷனர்கள் முன்னிலையில், இப்படி திட்டாதீர்கள்' என எதிர்ப்பு தெரிவித்த அந்த கமிஷனரை, 'சஸ்பெண்ட்'டும் செய்துள்ளார். இப்போதெல்லாம், பெற்ற பிள்ளைகளை கூட வாய்க்கு வந்தபடி திட்ட முடியாது. அப்படிப்பட்ட நிலையில், தனக்கு கீழே வேலை பார்க்கும் ஒரு அதிகாரியை, 'முட்டாள், மூதேவி' என்று நாட்டுப்புற ஸ்டைலில் பொன்னையா திட்டியிருப்பது சகிக்கவில்லை.



முதல்வன் திரைப்படத்தில், தன் இடுப்பை யார் தொட்டு விட்டாலும், உடனே நடிகர் வடிவேலு அவரை வாய்க்கு வந்தபடி திட்டுவார். அவருக்கு அப்படி ஒரு வியாதி. அந்த மாதிரியான வியாதி, மேலே குறிப்பிட்ட நபருக்கும் இருக்குமோ? அமைச்சரோ, அதிகாரியோ யாராக இருந்தாலும், மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்ட காலம் மலை ஏறி, 50 ஆண்டுகளாச்சு. தவறுகளை சுட்டிக் காட்டுவதை, நாசுக்காக செய்த தலைவர்கள் எல்லாம் மறைந்து விட்டனர்.



பொதுவாக தவறு செய்த பணியாளர்களை, நாலு பேர் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தக் கூடாது என்பது தொழில் தர்மம். ஆனால், உயர் பதவியில் இருப்பவரை, அதிகார போதையில் பகிரங்கமாக கேவலப்படுத்துவது, இந்த ஆட்சியில் ஒன்றும் புதிதில்லை. தற்போதைய முதல்வரின் வாரிசும், அமைச்சராக பதவி வகிக்கும் ஒருவரும், ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, காவல் துறைக்கு விட்ட அதிரடி மிரட்டல்களை, சவால்களை மக்கள் மறக்கவில்லை.



'முட்டாள், மூதேவி, சனியனே, பீடை' என்று கிராமப்புற கிழவி ரேஞ்சுக்கு பொறுப்புள்ள அதிகாரி திட்டுவது துரதிருஷ்டவசமானது. 'நான் ஒரு முட்டாளுங்க...' என, சந்திரபாபு மாதிரி பாடிக் கொண்டு போக, இது 'ரீல்' இல்லை...ரியல். இவர்களின் செயலை பார்த்து, 'வசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை' எனக்கூறி, புலம்புவதை தவிர வேறு வழியில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...