Tuesday, May 17, 2022

மற்ற மாநிலங்களை பின்பற்றுங்களேன்!

 கோவை பாரதியார் பல்கலையில், சமீபத்தில் நடைபெற்ற, 37வது பட்டமளிப்பு விழாவில் பேசிய, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஹிந்தி படிக்க விரும்புவோர் அதை படிக்கட்டும்; ஆனால், கட்டாயமாக்க கூடாது. ஹிந்தி படித்தவர்கள் தமிழகத்தில், 'பானி பூரி' தான் விற்கின்றனர்' என்று தெரிவித்து உள்ளார்.

 மற்ற மாநிலங்களை பின்பற்றுங்களேன்!



உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடிக்கு, நான் விளக்கம் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். பொன்முடி அவர்களே...



* தமிழகத்தில் எத்தனை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்? எத்தனை பேர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்? அந்த விபரங்களை வெளியிடுங்கள்



* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் உயரதிகாரிகளில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள் பார்ப்போம்



* தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான, மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கேரள மாநில முதல்வரிடம் சென்று, முப்படைகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த எத்தனை பேர் அதிகாரிகளாக உள்ளனர் என்று கேட்டறியுங்கள். அதன்பின், தமிழக அதிகாரிகள் விபரங்களை கணக்கெடுங்கள். முப்படைகளில் பணியாற்றும் கேரள மாநில அதிகாரிகளுடன் ஒப்பிட்டால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ௫ சதவீதம் கூட இல்லை



* தமிழகத்திலிருந்து ராணுவ பணிக்கு செல்பவர்களுக்கு ஹிந்தி தெரியாததால், சிப்பாய் மற்றும் நாயக்குகள் என, கீழ்மட்ட அளவில் தான் பணியாற்றுகின்றனர். அவர்கள் ராணுவ பணி முடிந்து திரும்பும் போது, இங்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் நிறுவனங்களில், காவலாளிகளாகவே பணியாற்றுகின்றனர்.



* நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை, ஜெனரல் சுந்தர் ஜி என்ற ஒரே ஒரு தமிழர் மட்டுமே ராணுவ தளபதியாக இருந்துள்ளார். ராணுவத்தில், உயர் பதவி வகித்த தமிழர்களின் எண்ணிக்கையை, மற்ற மாநிலத்தவரோடு ஒப்பிட்டுப் பாருங்கள்; எல்லாவற்றிலும், தமிழர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதற்கு, 'ஹிந்தி வேண்டாம்... போடா...' என, பல ஆண்டுகளாக, திராவிட ஆட்சியாளர்கள் கூறி வருவதே காரணம்.



உங்களின் ஹிந்தி வேண்டாம் என்ற இரட்டை மொழி கொள்கையால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தெருவுக்கு தெரு திறக்கப்பட்டிருக்கும், 'டாஸ்மாக்' கடைகளில் சரக்கு அடித்து விட்டு, பஸ் நிலையங்களிலும், சாலையோரங்களிலும், அரை மயக்கத்தில் விழுந்து கிடக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டன.



இனியும் வீண் பிடிவாதம் செய்யாமல், 'தமிழ், ஆங்கிலத்துடன், மூன்றாவது மொழியாக ஹிந்தியையும், அரசு பள்ளிகள் உட்பட, அனைத்து கல்வி நிறுவனங்களும் கற்றுத் தரலாம்' என அனுமதி கொடுங்கள். இந்த விஷயத்தில் தனி ஆவர்த்தனம் செய்யாமல், மற்ற மாநிலங்களின் பாணியை பின்பற்றுங்கள். மக்கள் முன்னேற்றத்திற்கு தடைபோடாதீங்க!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...