Friday, May 20, 2022

சம்பளமாக எடுத்து வந்த பணத்தை இந்த டப்பாவில் வைத்து செலவு செய்து பாருங்கள். செலவு செய்த பணம் மீண்டும் இரட்டிப்பாக உங்களிடமே வரும்.

 நம் கைக்கு வரக்கூடிய பணம் என்பது செலவு செய்வதற்காகத் தான். செலவுக்கு ஏற்ப வருமானம் வருகிறதே என்று சந்தோஷப்படுங்கள். அதை விடுத்து அச்சச்சோ, பணம் நம் கையை விட்டு வெளியே செல்கிறது, என்று ஒருபோதும் நாம் கவலைப் படவே கூடாது. சந்தோஷமாக நல்ல விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்யச் செய்யத்தான், அந்த பணம் இரட்டிப்பாக மீண்டும் நம்முடைய கைக்கு வரும். இது நிதர்சனமான உண்மை. இதை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும். மேல் சொன்ன விஷயத்தை நீங்களும் பின்பற்றி பாருங்கள். உங்களுக்கே இதில் உள்ள சூட்சமம் ஒரு சில நாட்களில் நன்றாக புரிய தொடங்கிவிடும். நான் சம்பாதித்த பணமாக இருந்தாலும் சரி, அல்லது கணவர் சம்பாதித்து மனைவி கையில் கொடுக்கும் பணமாக இருந்தாலும் சரி, மனைவி சம்பாதித்து அவர்களே செலவு செய்யக்கூடிய பணமாக இருந்தாலும் சரி, அதை இந்த டப்பாவில் வைத்து செலவு செய்து பாருங்கள். அதாவது மொத்தமாக இப்போது நம் கைக்கு சம்பளம் வருவது கிடையாது. அவரவர் வங்கிக் கணக்கில் தான் சம்பளம் சேர்க்கப்படுகிறது அல்லவா. தேவைக்கு ஏற்ப தான் நம்முடைய வீட்டிற்கு பணத்தை கொண்டு வருகின்றோம்.  அப்படி வீட்டுச் செலவுக்காக கொண்டுவரக்கூடிய பணத்தை உங்களுடைய வீட்டில் வெந்தய டப்பாவில் போட்டு வைத்து, செலவு பண்ணுங்கள். ஒரு சிறிய கவரில் பணத்தை போட்டு சுருட்டி வெந்தய டப்பாவில் வைத்து விடுங்கள். வீட்டில் யாராவது செலவுக்கு காசு கேட்டால் வீட்டில் இருக்கும் பெண்மணி அந்த வெந்தய டப்பாவில் இருந்து காசை சந்தோஷமாக எடுத்து செலவு செய்வதற்காக கொடுக்க வேண்டும். அனாவசிய செலவை பற்றி சொல்லவில்லை. அத்தியாவசியமாக காய் வாங்க, பால் வாங்க வேண்டும். மளிகை சாமான்கள் வாங்க வேண்டுமென்ற செலவு இருக்கும் அல்லவா. அந்த செலவுக்கு கூட இந்த வெந்தய டப்பாவில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்யும்போது, மீண்டும் வேறு ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு ஒரு வருமானம் செலவுக்காக வந்து கொண்டே இருக்கும். பணம் இல்லை. வீட்டில் பணத்தட்டுப்பாடு, வறுமை என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...