Friday, May 20, 2022

நெஞ்சுக்கு_நீதி ♦♦♦♦

 கனா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ...

உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் நெஞ்சுக்கு நீதி இன்று வெளியாகி உள்ளது.
ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்ட்டிக்கள் 15 படத்தின் ரீமேக்கை நெஞ்சுக்கு நீதி என்கிற பெயரில் தயாரித்துள்ளனர் ..
சாதி பிரச்சனை நிறைந்த ஒரு படத்தை தமிழில் எப்படி உருவாக்கி இருக்கிறார்கள் ..
உதயநிதி ஸ்டாலின் தனது நடிப்பால் மிரட்டி இருக்கிறாரா என்கிற விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..
என்ன கதை
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள், முப்பது ரூபாய் கூலியை உயர்த்த சொல்லிக் கேட்டதற்காக அவர்கள் மூவரும் கூட்டு பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
இரு சிறுமிகள் மரத்தில் தூக்கிலிடப்படுகின்றனர்.
உயர்ந்த சாதியாக நினைத்து கொண்டு தலித் மக்களை ஆட்டுவிக்கும் கூட்டம், ..
எப்படி இவர்கள் உரிமைகளை பெற நினைக்கலாம் என ஒடுக்க நினைக்கும் சாதிய ஆணவத்தை ஆரம்பத்திலேயே படம் எடுத்துரைக்கும்.
அதில், ஒரு சிறுமி மட்டும் மிஸ்சிங். அந்த கிராமத்திற்கு கூடுதல் போலீஸ் அதிகாரியாக வரும் உதயநிதி ஸ்டாலின் ஆணவக் கொலை என முடிக்க நினைக்கும் இந்த வழக்கை எப்படி விசாரிக்கிறார்,
மூன்றாவது சிறுமிக்கு என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.
சாதி பிரச்சனை
கிராமம் பார்க்க அழகா இருக்கே என உதய சூரியனை (பொலிட்டிக்கல் டச்) காரில் இருந்து போட்டோ எடுத்து ரசிக்கும் உதயநிதி ஸ்டாலின்,
அங்கே புரையோடி கிடக்கும் சாதிய அழுக்குகளை கண்டு மனம் வேதனைக் கொள்கிறார்.
பீஸ்ட் படத்தில் வீர ராகவனாக விஜய் வந்த நிலையில், விஜய ராகவனாக இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.
அவருடைய பெயரை வைத்தே காவல் நிலையத்தில் இருக்கும் போலீசார் அவர் என்ன ஜாதி என்பதை அறிந்து கொள்ள காட்டும் ஆர்வத்தை எல்லாம் அருண்ராஜா காமராஜ் ஆழமாக பதிவு செய்துள்ளார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஜாலியான ஹீரோவாக சந்தானத்துடன் காமெடி செய்து வந்த உதயநிதி ஸ்டாலின்,
தனது எதிர்காலத்தை நினைத்து மனிதன், சைக்கோ என கதையின் நாயகனாக மாறி வருகிறார்.
அந்த வரிசையில் நெஞ்சுக்கு நீதி அவரது நடிப்பை இன்னும் சற்று கூடுதலாகவே உயர்த்தி இருக்கிறது.
அதிரடியான போலீஸ் கதாபாத்திரம் எல்லாம் இல்லை.
நிறுத்தி நிதானமாக அதே சமயத்தில் ஆழமாக விசாரிக்கும் போலீஸ் கதாபாத்திர நடிப்பை பக்கவாக செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
ஒரு கட்டத்தில் சக போலீஸ்காரர்களிடம் நீ என்ன சாதி என கேட்டார் விஜய ராகவன் என
அவரை இந்த வழக்கில் இருந்து தூக்க சிபிஐ அதிகாரியாக ஷாயாஜி சிண்டே வருவார்.
சமூகத்தின் விளிம்பு நிலையில் பிறந்து படிப்பு அறிவை கொண்டு உலகத்தை புரிந்து கொள்ளும் இளைஞர்கள்
எப்படி தங்கள் நிலையை உயர்த்த போராட்டக்காரர்களாக உருவெடுக்கிறார்கள் என்கிற அழுத்தமான கதாபாத்திரத்தில் பிக் பாஸ் ஆரி இந்த படத்தில் நடித்துள்ளார்.
ஆரியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசும் ஒரு இடம் படத்தில் ரொம்பவே ஹைலைட்.
அம்பேத்கர் எழுதிய சட்டத்தால் தான் எதையும் சாதிக்கலாம் என உதயநிதி பேச,
தன்னுடைய சட்டத்தால் ஏழைகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் அதை எரிக்கவும் தயங்க மாட்டேன் என அம்பேத்கர் சொன்னதை ஆரி பேசும் இடங்களில் கைதட்டல்களை அள்ளுகிறார்.
ஆர்ட்டிக்கள் 15ஐ விட இங்கே ஆரியின் கதாபாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
பலாத்கார கொலைகள் எப்படி ஆணவக் கொலைகளாக சித்தரிக்கப்படுகின்ற பல மர்ம கொலைகளை
போலீசார் எப்படி தற்கொலையாக சித்தரிக்கின்றனர் என ஏகப்பட்ட விஷயங்கள் படம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இப்படியொரு சிக்கலான கதையை துணிச்சலாக அருண்ராஜா காமராஜ் கையாண்டு இருப்பதே படத்திற்கு பலம் தான்.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் நடிப்பு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
அந்த மூன்றாவது பெண்ணுக்கு என்ன ஆனது? அவளை தேடும் முயற்சியை உதயநிதி ஸ்டாலின் எப்படி செய்தார்,
ஆரியின் பங்களிப்பு, திபு நிணன் தாமஸின் பின்னணி இசை என பல பிளஸ்கள் உள்ளன.
சாக்கடையை சுத்தம் செய்யும் காட்சி, சேற்றுக்குள் இறங்கி தேடும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் மிரட்டி உள்ளார்.
விறுவிறுப்பாக சொல்லப் படாமல் சொல்ல வந்த கருத்துக்களை ரொம்பவே ஸ்லோவாக நகரும் திரைக்கதை மூலமாக சொல்லியிருப்பது படத்திற்கு பலவீனமாக மாறி உள்ளது.
ஆர்ட்டிக்கள் 15 படத்தில் பல சாதிய பெயர்களை ஓப்பனாகவே சொல்லியிருப்பார்கள்.
ஆனால், இங்கே BC, MBC, SC, ST என வசனம் வைத்து சற்றே பூசி மெழுகியிருக்கிறார்கள்.
ஆயுஷ்மான் குரானா மற்றும் மனோஜ் பாவாவின் நடிப்புடன் ஒப்பிடுகையில் உதயநிதி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் நடிப்பு ஓகே ரகம் தான்.
போனிலேயே குடும்பம் நடத்தும் நாயகி தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் படத்திற்கு எந்தவொரு பலனும் கொடுக்கவில்லை.
சாமி, சிங்கம், தெறி படங்களை போல ஆர்ப்பாட்டமான போலீஸ் படம் என நினைத்து சென்றால்,
அவர்களை ஆர அமர உட்கார வைத்து
ஆர்ட்டிக்கள் 15ல் சாதி, மத, பாலினம் உள்ளிட்ட எந்த அடிப்படையிலும் பாகுபாடு பார்க்கக் கூடாது.
அனைவரும் சமம், தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்கிற அடிப்படையான விஷயத்தை தமிழ் ரசிகர்களுக்கு புரியும் படி எடுத்து கூறியதற்கே இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...