Wednesday, May 18, 2022

Possessiveness கலந்த காதல் .

 *** #காதலித்து திருமணம் செய்த அன்பான ஒருவனின் டைரியில் ஒரு பக்கம் ***

திருமணம் முடிந்து 2 மாதங்கள் வேகமாக நகர்ந்து விட்டது,
கல்யாணத்திற்காக, அதன் பின் தேன்நிலவிற்காக என ஏகப்பட்ட விடுமுறை எடுத்ததின் விளைவு, இப்போது ஆபீஸ் வேலை அதிகமாகிவிட்டது.
அதிலும் கடந்த இரண்டு வாரமாக ஆன்சைட் க்ளைய்ண்ட் கால் முடித்து உறங்க போவதிற்கு இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்றும் அதுபோல் இரவு லேட்டாக எங்கள் ரூமிற்க்குள் தூங்க சென்றேன்.
அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியை டிஸ்டர்ப் பண்ணாமல் குட் நைட் சொல்ல அருகில் குனிந்தபோது கவனித்தேன், அவள் கன்னங்களில் கண்ணீர், கன்னத்தை தொட்டுப் பார்த்தேன். அதிலே கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.
சற்றுநேரத்துக்கு முன்னர்தான் அவள் தூங்கியிருந்தாள் என்று நினைக்கிறேன். ஆனால் கண்ணீர் தூங்கவில்லை. "அவளுக்கு கண்ணீர் விடும் அளவிற்கு என்ன துயரம்?
சொந்தகாரங்க யாராவது ஏதும் திட்டியிருப்பார்களா??
அவளோட friends கூட ஏதும் பிரச்சனையா???
என்மேல் ஏதும் கோபமாக இருக்குமோ???"
கேள்விகளுடனும்,குழப்பத்துடனும் உறங்காமல் உறங்கி போனேன்.
வழக்கம்போல் காலையில் 'பெட் காபி'யுடன் என்னை எழுப்பினாள்.
புன்னகை பூத்த முகம்,
இரவில் அழுதத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை .....
காபி அருந்தியபடியே அவளிடம் கேட்டேன் ஏன் இரவில் அழுதிருந்தாய் என்று....
'அப்படி ஒன்றும் இல்லை,அழவே இல்லை' என்று சாதித்துவிட்டாள். (அழுத்தக்காரி...!)
என் காதல் மனைவிக்கு என்னிடம் கூட பகிர்ந்துக்கொள்ள முடியாத துயரம் அவளை வாட்டுகிறது என்பது என் நெஞ்சை பிசைந்தது.
இருவருடைய குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன்
விமர்சையாக எங்கள் திருமணம் நடந்தது, நாங்க ஆசைப்பட்ட மணவாழ்க்கை அழகாக ஆரம்பித்திருக்கும் போது, அவளுக்கு கண்ணீர் விடும் அளவிற்கு என்ன மனக்கஷ்டம்????
யோசனையுடன் குளியல் அறைக்குள் சென்றேன்,
அவள் பெட்ரூம் கண்ணாடி ஜன்னலில் இரவு பெய்த மழை துளியின் ஈரத்தில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தாள் விரல் நுனியால். நான் குளியல் அறையில் இருந்து வெளியில் வரும்போது, நான் குடித்து முடித்திருந்த காபி கப்புடன்
அறையைவிட்டு வெளியேறி இருந்தாள்.
எதேச்சையாக ஜன்னல் பக்கம் என் பார்வை சென்றது,
மழை துளியின் ஈரத்தில் "அப்பா " என்று எழுதியிருந்தாள்,
வெயிலின் உஷ்ணத்தில் மெது மெதுவாக எழுத்துக்கள் மறைந்து அவள் கண்ணீருக்கான காரணத்தை எனக்கு உணர்த்திக்கொண்டிருந்தது!
அவளுக்கு பிடித்த பாடலை முணு முணுத்தபடி காலை டிபன் பரிமாறினாள், நாங்கள் காதலித்த நாட்களில் விளையாட்டாக
அவள் பாடுவதை கிண்டல் அடித்து விட்டேன், அதிலிருந்து நான் எவ்வளவு கெஞ்சினாலும் என் முன் சத்தமாக பாடவே மாட்டாள், ரோஷக்காரி !
Office க்கு செல்லும் என்னை வழியனுப்ப வாசல்வரை
என் laptop bag யை தூக்கிக்கொண்டு வந்தவளிடம்,
"ஒரு வாரத்திற்கு தேவையான ட்ரஸ் நம்ம இரண்டு பேருக்கும் பேக் பண்ணி வைச்சுடு ..... இன்னைக்கு நைட் நாம கிளம்பறோம் "
"ஒரு வாரமா?.....எங்க போறோம்?"
"அது evening office ல இருந்து வந்து சொல்றேன் "
"Office trip ஆ?.....என்னையும் உங்க கூட கூட்டிட்டு போறீங்களா??"
"இல்ல...."
"அப்போ எங்க போறோம் நாம ......"
"ஏன் இவ்வளவு கேள்வி கேட்கிறே ?"
"இல்ல ஹனி மூனும் போய்ட்டு வந்துட்டோம்..... உங்க ஆபீஸ்'ல வேற உங்களுக்கு ரொம்ப வொர்க் ,அதான் எங்கே திடீர்னு travel பண்றோம்னு ...."
"அதான் evening சொல்றேன்னு சொல்றேன் ல "
(Suspense ஓடவே இரு ........என்கிட்ட கூட சொல்லாம தனியா அழு அழுன்னு அழுவியா நீ ? -> My Mind Voice)
"புஜ்ஜு evening சொல்றதை இப்பவே சொன்னாதான் என்னவாம்??"
(அடிப்பாவி புஜ்ஜு ன்னு செல்லம் கொஞ்சி நைஸா கேட்கிறியா?)
"Evening வரைக்கும் வெயிட் பண்ணுமா பட்டு குட்டி"
நான் பதிலுக்கு கொஞ்சினதும், ஹையோ நம்ம try வேஸ்ட் ஆ போச்சுதேன்னு அவ மனசுல நினைக்கிறது அவ கண்ணுல தெரிஞ்சுது,
அதை ரசித்துக்கொண்டே அவள் நெற்றி உச்சியில் முத்தமிட்டு நகர்ந்த என்னை என் ஷர்ட் காலர் பிடித்திழுத்து நிறுத்தினாள்.
அவள் விழி ஓரத்தில் கண்ணீர் ததும்பி நின்றது.
நா தழு தழுக்க.....சின்ன விசும்பலுடன்...."தேங்க்ஸ் ......." என்றபடி என் தோளில் சாய்ந்தாள்.
"எதுக்குடி பட்டு ...."
"ஹும் ......நாம..........இன்னைக்கு நைட் எங்கப்பா வீட்டுக்குத்தான போறோம்??"
"எப்படி...........எப்படி தெரியும்டி பட்டுமா "
" Possessiveness கலந்த காதலை 2 மாதத்திற்கு அப்பறமா இப்போ உங்க கண்ணுல பார்த்தேன்......கண்டிப்பா அதுக்கு என் அப்பா மட்டும் தான் காரணம்னு எனக்கு தெரியுமே "
"அடிகள்ளி........."
'இறைவா !
அப்பா மேல் பாசம் பொழியும் மகளை
எனக்கும் சீக்கிரம் வரமாக கொடு' என்ற வேண்டுதலோடு
இனிதே அன்றைய நாளை துவங்கினேன் !!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...