Wednesday, May 18, 2022

இந்த மனிதன் செய்த சாதனை தான் என்ன?

 ஒரு மாநிலத்தின் முதல்வர், சிறையில் இருந்து விடுதலையாகி வந்த ஒரு கொலை குற்றவாளிக்கும் அவனை பெற்ற தாய்க்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்று  சரி சமமாக அமர வைத்து கொண்டாடும் அளவிற்கு இந்த மனிதன் செய்த சாதனை தான் என்ன?


இங்கு கொலை செய்வது தான் சாதனையோ?அதுவும் பெரிய தலைவர்களை கொலை செய்தால் முதல்வரே கொண்டாடுவார் என்று இந்த இளைய சமுதாயம் புரிந்து கொள்ளாதா? 


பேரறிவாளன் என்னும் கொலை குற்றவாளி தண்டனை குறைக்கப்பட்டு தான் விடுதலை செய்யப்பட்டுள்ளானே தவிர இன்றும் அவன் நீதி மன்ற ஆவணங்களில் குற்றம் செய்து தண்டனை அனுபவித்த குற்றவாளி என்றே பதிவு செய்ய பட்டிருப்பான்..


குற்றமற்றவன் என்று இவன் விடுதலை செய்யப்பட்டிருந்தாலாவது ஓரளவிற்கு ஏற்று கொள்ளலாம். 


ஒரு கொலை குற்றவாளியை ஒரு மாநில முதல்வர் இப்படி கொண்டாடுவதன் மூலம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தியை சொல்ல வருகிறார்?


இது சுத்த பைத்தியகாரத்தனமாக தெரியவில்லையா? ஒரு வாழ்த்து செய்தியோடு முடித்திருக்க வேண்டிய ஒன்றை ஏதோ தியாகம் செய்து சிறையில் இருந்து மீண்டு வந்தது போல....


"அவமானத்தின் உச்சம்"....


🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...