Sunday, May 22, 2022

அறிவை நீ நம்பு.

 

♥ கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும், உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது. அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது - பாடல் மருதகாசி – 1975. ♥
♥ 24 வயது வாலிபனும், அவனது தந்தையும் ஒரு பகல் நேரம் இரயில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் எதிரில் ஒரு இளம் தம்பதியினர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
♥ 24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,.. மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
♥ அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.
♥ ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....
♥ மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள் நம்மோடு வருகின்றன..; என்றான்...
♥ இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"
♥ அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்... "நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்... என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
♥ அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. அதை முழுமையாக தெரிந்துகொள்ளாமல், கண்ணால் காண்பதை வைத்து மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம்.
♥ சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம். ஆகவே 'உருவத்தை பார்த்தோ, கண்முன்னே நடக்கும் காட்சிகளை பார்த்தோ யாரும் யாரையும் எடை போடவேண்டாம்.
கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரித்து தெளிவதே மெய்.
♥ ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைக்கப்பெறும் செய்திகளை முகநூலில் கண்மூடித்தனமாக மற்றவர்களுக்கு அனுப்பாமல் இருந்தால் பாதகங்கள் பல குறையும்.
♥ மற்றவர்களுக்குப் பாடமாகச் சொல் லிக் கொடுக்க முடியாது! அறிவுரை யாகச் சொல்லலாம். ஆனால் அதைச் செவி கொடுத்து கேட்பார்களா என்பது அவரவர் விருப்பு வெறுப்பைப் பொறுத் தது.
♥ இந்தப் பொறுப்புணர்ச்சி அவசியம் என்று புரிந்தவர்கள் , இதை நேர் முகமாக மற்றும் பிறவழி களில் பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
May be an image of text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...