Sunday, May 22, 2022

*# தெரிந்தது சில..!*

 

♦பெரும்பாலும் யார் உதவியும் நாடாதே.! அப்படி தவிர்க்க முடியாத
காரணத்தில் ஒருவரின் உதவியை
பெற்றால், நேரிடையாகவோ, அல்லது
மறைமுகமாகவோ அவர்களுக்கு
உதவி விடு.
♦நாளை நீ மகானாக வரவில்லை
என்றாலும், மனிதனாக வரும்போது
இவர்கள் நான்தான் காரணகர்த்தா
என்று சொல்லிக் காட்டும்போது
நீ பட்டபாடு எல்லாம் வீணாய் போய்விடும்.
♦ஒருவனிடம் ஒரு டீ அருந்தியிருந்தால்
அவனுக்கு மூன்று முறை தண்ணீராவது
கொடுக்கமுடியும் என்றால் அந்த டீயை
அருந்து... இல்லாவிட்டால் வேண்டாம்!
♦இலவசங்களாக வரும் எதுவும் உனக்கு சொல் கடன்களே! உன்னைப்
பெற்ற தாய் தகப்பனோட சொத்துக்களில் வாழ்வதைவிட, உன் உழைப்பில் வரும் ஒரு ரூபாய் வாடகை வீடு மிகவும் கௌரவமானது!
♦பிறரின் வறுமையோடு என்றும்
விளையாடாதே..! முடிந்தால் முடியும்
என்று சொல்... முடியாது என்றால்
முடியாது என்று சொல்... பார்க்கிறேன்
ஆகட்டும் என்ற போலியான வாக்குறுதிகளை கொடுக்காதே!
♦ஒரு சபையில் உரையாற்றும் ஒவ்வொரு சொல்லுக்கும் நீயே
பொறுப்பாளி... தகுதிக்கு மீறிய
வாக்குறுதிகளையும்,வார்த்தைகளையும்
பயன்படுத்தாதே!
♦முடிந்ததை செய்... முடியாததை செய்ய முயற்சி செய்... தவறெனில் மாற்று... சரியென்றால் இன்னும் நேர்த்தியாக செய்ய முயற்சி செய்..!
♦முதலில் உனக்கு நீ, ராஜா என்பதை நம்பு... பிறர்போல் இருக்க
எண்ணாதே... பிறர்போல் இருந்தால்
நீ பத்தோடு பதினொன்றே!
தனித்து நில்! இங்கு 11 என்பதைவிட
1 என்பதற்கே மதிப்பு அதிகம்!
♦அடுத்தவனின் முன்னேற்றத்தை
பற்றி திரும்பிகூட பார்க்காதே..!
அதே நேரம் அவன் முன்னேறிய கதை
அறிந்தால், அதை வாழ்க்கை பாடமாக
எடுக்க மறக்காதே!
♦இரக்ககுணம் உன் பெரிய சொத்து!
அதை பயன்படுத்துகிறார்கள் என நீ
அறியும்போது, நீ வடிக்கும் கண்ணீர்
ஒவ்வொரு துளியும், இயற்கையின் கண்ணில் வடிந்த உதிரத்திற்கு சமம் என்பதை நினைவில் கொள்!
♦உன்னை ஏளனம் செய்வோர்
எல்லோரிடமும் போய், உன்னை
நியாயப்படுத்தி பேசி, விளக்கம்
அளித்துக் கொண்டு நிற்காதே!
நீ கடக்க வேண்டிய தூரம் நிறைய
உள்ளது! ஓடு... உன் வெற்றி அந்த
பக்கத்து தெருவில் கூட இருக்கலாம்..!!உன்னால் உயர்ந்தவர்கள், ஆபத்தில் நீ கைகொடுத்தவர்கள் நன்றியற்றவர்களை மனித கழிவாக நினைந்து அவர்களை எளிதாக கடந்து செல்….

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...