Sunday, May 28, 2023

Pondicherry அன்னையின் அருள் அவர்களுக்கு உள்ளது.

 பாண்டிச்சேரி அன்னை ஆசிரமம். பல மாநில சுற்றுலாவாசிகள், பக்தர்கள் குவியும் இடம். ஆசிரமத்திற்கு மிக அருகில் இளநீர் கடை. ஒரு நிமிடத்திற்கு நாலு பேர் “ம்மா தண்ணியா ஒன்னு வெட்டு” என்கிறார்கள். நொடியில் இளநியை எடுத்து, ஒரு தேர்ந்த கூடைப்பந்து வீரரைப் போல இடது உள்ளங்கையில் லாவகமாக சுழலவிட்டபடியே வலப்புறமிருந்து அரிவாள் கொண்டு சுற்றிச் சீவுகிறார். இளநீர் முடிந்ததும் இரண்டே வெட்டில் அதைப் பிளந்து, சில் வழித்து தேங்காய் தருகிறார். கைகள் சிறியது தான், ஆனால் கணப் பொழுதும் தாழவில்லை. அடுத்த இளநி, பிளவு, தேங்காய் என ஓய்வின்றி நாள் முழுவதும் உழைத்திருக்கிறது.

பெயர் மல்லிகாவதி, 11ம் வகுப்பு படிக்கிறார். அருகில் லெமன் சோடா கடை வைத்திருக்கும் தன் அம்மாவிற்கு துணையாக இளநி சீவுகிறார்.
புகைப்படம் எடுத்துக் கொள்ளட்டுமா என்ற போது, கண்களில் சிறு வெட்கம். சிரிப்பு நிற்கவில்லை.
“என்னயான்ணா”
“ஆமா ! ஒரு சின்னப் பெண் இவ்வளவு வேகமாக இளநீர் சீவிப் பார்த்ததில்லை, அதுவும் அம்மாவிற்கு உதவும் உன் குணம், வேலய சிரிச்சுட்டே செய்யும் உன் ஸ்டைல் மாஸ் ” என்றதும்
‘தேங்க்ஸ்னா’ என சிரிப்பு பெரிதாகிறது. அடுத்த இளநி கைகளில் வேகமாகச் சுற்றி சுழலத் துவங்குகிறது.
2K குழுந்தைகள் பெற்றோரைக் கண்டு கொள்வதில்லை, சீன் போடுகிறார்கள், பொருளின் மதிப்பு தெரிவதில்லை என பூமரான்கள் நாம் தான் புலம்பித் தள்ளுகிறோம். ஆனால் தன் குடும்பத்திற்காக சாலையில் இறங்கி வேலை பார்க்கும் மல்லிகாவதியைப் போல தேவதைகளும் 2K மகள்கள் தான். தங்கம் எங்கும் மின்னும் !!!
May be an image of 2 people and coconut
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...