Sunday, May 28, 2023

தமிழகத்தில் பலருக்கு குபீரென திப்பு சுல்தான் மேல் பெரும் பாசம் பொங்குகின்றது அதுதான் ஏன் என தெரியவில்லை.

 திப்பு சுல்தானின் முன்னோர்கள் இந்தியர்கள் அல்ல, ஆப்கானில் இருந்து பெர்ஷியாவில் இருந்து குடியேறிய வம்சத்தில் வந்தவன் அந்த ஹைதர் அலி, ஷியா பிரிவு இனம் அது

13 முதல் 17ம் நூற்றாண்டு வரை அலை அலையாக இந்துஸ்தானத்தில் புகுந்த வம்சசங்களில் அதுவும் ஒன்று
அவன் தந்தை பெயர் பதே முகமது, பிழைப்புக்காக பாமினி சுல்தானியமான பிஜப்பூருக்கு வந்த குடும்பம் அது, அது கோலார் பக்கம் குடியிருந்தது
16ம் நூற்றாண்டில் வீரசிவாஜி பிஜப்பூரை ஒடுக்கி போட்டிருந்தான், கிட்டதட்ட அது அழிந்து கிடந்தது, அந்த பாமினி சுல்தானியம் முடிந்திருந்தது
ஆனால் சிவாஜிக்கு பின் அதனை அவுரங்கசீப் கைபற்றினான், ஐதரபாத் நிஜாம், ஆற்காடு நவாப் என அவன் ஆட்கள் நிர்வாகிகளாக அமர்ந்தார்கள்
எனினும் மராட்டிய பெண்புலியும் சிவாஜியின் மருமகளுமான தாரபாய் மராட்டிய பக்கம் சிம்மமென மீள எழுந்து மொகலாயரை அடித்து விரட்டினாள், மறுபடி மொகலாயம் அடிவாங்க ஆரம்பித்தது
தன் நோக்கம் நிறைவேறாமலே இறந்தான் அவுரங்கசீப், அவனுக்கு பின் பெரும் சாம்ராஜ்யமாக இருந்த மொகலாயத்தில் குழப்பம் வந்தது
தாரபாய் அடித்த அடியில் அவுரங்கசீப் நிம்மதி இல்லாமலே மறைந்தான், சிவாஜியோடு எல்லாம் முடிந்ததுஎன சாம்பாஜியினையும் கொன்று சிவாஜி பேரன் சாகுவினை ஆக்ராவிலே அவன் சிறைக்குள் வளர்த்தபோது தன் கை பொம்மையாக வளர்த்தபோது தாராபாய் எழுந்து அணலாக ஆடினாள்
அவளின் எழுச்சியினை சற்றும் எதிர்பாரா அவுரங்கசீப் கண்ணீருடனே மறைந்தான்
அவனுக்கு பின் மராட்டியரின் கவனம் வடக்கு நோக்கி செல்வதிலே இருந்தது, தெற்கே அவ்வளவுக்கு கவனம் செலுத்தவில்லை, வடக்கே கடும் போர் நடந்த நிலையில் தெற்கே மொகலாயரிடம் இருந்த அடியாட்களெல்லாம் அரசகோலம் பூண்டார்கள் , இதனால் ஆற்காடு நவாபும் ஐதரபாத் நிஜாமும் குபீர் சுல்தான் என்றானார்கள்
இந்த குபீர் சுல்தான் ஆற்காடு நவாபிடம் வேலை செய்தவர் அந்த பெர்ஷியர் பதேகான், அவருக்கு 1720ல் பிறந்தான் ஐதர் அலி, அவன் தாய் தஞ்சாவூரை சேர்ந்த இஸ்லாமிய பெண்
அவுரங்கசீப்புக்கு பின் 14 ஆண்டு கழித்து அவன் பிறந்தான், சிவாஜி தான் மறையும்போது பல இந்து ராஜ்ஜியங்களை உருவாக்கியிருந்தான் அதில் ஒன்று மைசூர் உடையார் ராஜ்ஜியம்
இந்த ராஜ்ஜியத்தில் வேலைக்கு சேர்ந்தான் ஐதர் அலி, இயல்பிலே தந்திரமும் வாய்ப்பு கிடைத்தால் எதையும்தட்டிபறிக்கும் இயல்புடைய அவன் தன் அண்ணன் ஷபாஸ் ஷாஹிப்போடு சேர்ந்து அந்த மன்னனின் குதிரைபடை தலைவனான்
அப்போது ஆற்காடு நவாப் குடும்பத்தில் குழப்பம் வந்தது ஒரு கோஷ்டியினை பிரெஞ்சுக்காரரும் ஒரு கோஷ்டியினை பிரிட்டிசாரும் ஆதரித்தனர்
அதாவது ஐதராபாத் நிஜாமின் மருகமகனும் ஆற்காடு நவாபின் மகனுமான‌ சாந்தா சாஹிப் ஆற்காடு நவாபிற்கு தானே வாரிசு என கிளம்பினான், அவனை எதிர்த்தான் அன்வர்தீன்கான்
இங்கே சாந்தா சாஹிபை பிரெஞ்சுகாரரும் , அன்வர்தீர்கானை பிரிட்டிசாரும் ஆதரித்தனர்
இது நட்பு ஆபத்து உதவி என்பதல்ல மாறாக பணம், பெரும் கூலிக்கு படை எனும் வியாபார சண்டை
இந்த சண்டை எப்போது தொடங்கியது என்றால், இந்த பிரான்ஸ் பிரிட்டிஷ் கோஷ்டி எப்போது கூலிக்கு சண்டையிட்டது என்றால் அதுவும் சுவாரஸ்யம்
வீரசிவாஜி வலுவாக இருந்த மேற்கு பக்கம், மலையாள மன்னர்கள் இருந்த மேற்குபக்கம் இவர்கள் செல்லமுடியாது, அப்படியே மொகலாயர் இருந்த வங்கம் கராச்சி பக்கமும் இவர்கள் செல்லமுடியாது
பலவீனமாக இருந்த இடம் தமிழகம்
வீரசிவாஜி பிஜப்பூரை புரட்டி எடுத்த அந்த 1675ளில் வேலூர் செஞ்சி திருச்சி பெரம்பலூர் பக்கம் வரை பிஜப்பூர் ஆட்சியே இருந்தது, பிஜப்பூர் வீழும் போது இங்கே இருந்த ஆப்ரிக்க தளபதிகள், ஆப்கானிய தளபதிகள் தனி அரசை ஸ்தாபிக்க முயன்றனர்
நர்மஸ்கான், ஷெர்கான் என இந்த கோஷ்டிகள் வேலூர் செஞ்சி விழுப்புரம் திண்டிவனம் பெரம்பலூர் பக்கம் தங்களுக்குள் மோதின‌
இவர்களுக்குள்தான் முதன் முதலாக பிரான்ஸ்படை கூலிபடையாக வந்தது அதை தொடர்ந்து டச்சுபடை வந்தது கடைசியாக வந்ததுதான் பிரிட்டிஷ்படை
சிவாஜி இந்த சண்டையினை கண்டு அஞ்சிதான் தமிழகத்துக்கு வந்து எல்லோரையும் முழங்காலில் நிறுத்திவிட்டு சென்றான் ஆனால் உடனே மரித்தான்
அவன் மரித்தபின் அவுரங்கசீப் மறுபடி தமிழகத்தை கைபற்றினான் ஆற்காடு நவாப் பதவி உருவானது, மறுபடியும் ஐரோப்பிய கூலிபடை உள்ளே வந்தது
இப்படி ஆற்காடு நவாப் குடும்ப சண்டையில் மைசூர் சமஸ்தான உதவி கோரபட்டது, அவர் ஐத்ரபாத் நிஜாமுக்கு எதிராக களமிறங்கினார்
1750களில்நடந்த இந்த சண்டையில்தான் ஐதர் அலி களம் கண்டான், அதில்தான் அவன் வெற்றி வந்தது மைசூர் மன்னரும் அவனை கொண்டாடி திண்டுக்கல் பக்கம் தளபதியாக அனுப்பினார்
ஆனால் விதி வேறுவகையில் வந்தது
பிரெஞ்சுக்காரர்கள் பெரும் பணம் கூலியாக கோர மைசூரில் நிதிநெருக்கடி வந்தது ஆட்சி தத்தளித்தது மக்கள் போராட்டம் வெடித்தது
இங்கேதான் கலவரங்களை மிக கொடியவகையில் அடக்கினான் ஐதர் அலி இதனால் மைசூர் மன்னன் அவனை கொண்டாடினான் பெரும் இடத்துக்கு வந்தவன் மன்னரையே மிரட்டினான்
ஒரு கட்டத்தில் மன்னர் ஐதர் அலிக்கு அஞ்சி மராட்டிய படை உதவியினை நாடினார், ஆனால் மராட்டியரை விரட்டிய ஐதர் அலி 1762ல் மைசூரை கைபற்றி சுல்தானாக அமர்ந்தான், இங்கே பிரெஞ்சுக்காரர் உதவி இருந்தது
இப்படித்தான் சுல்தான் ஆனான் ஐதர் அலி
சுல்தான் ஆனபின் அவனின் ஆசைகள் விரிந்தன , அந்த பழைய பிஜப்பூர் சுல்தானியத்தை ஸ்தாபிக்க எண்ணினான்
ஆம், அவுரங்கசீப் செய்தது அவனுக்குமுன் துக்ளக் செய்தது என எல்லா அந்நியர்களும் செய்த அந்த இஸ்லாமிய அரசை அவன் ஸ்தாபிக்க எண்ணினான்
அவனுக்கு பல உதவிகள் வந்தன, இந்துஸ்தானில் தெற்கே அழிந்து போயிருந்த அல்லது மாராட்டியர்களால் தரைமட்டமாகியிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அவன் மீள எழுப்புகின்றான் என்பதில் பல உதவிகள் கிடைத்தன‌
பெரும் சக்தியாக எழும்பினான் ஐதர் அலி, ஆனால் மராட்டிய இந்துசேனை விடவில்லை, சிவாஜி எழுப்பிய அந்த வீரப்போர் தொடர்ந்தது இதனால் வடக்கே நகரமுடியாதவன் தெற்கே சென்னபட்டினம் திண்டுக்கல் என தன் ராஜ்யத்தை விரிக்க தொடங்கினான்
அவனின் எழுச்சியினை தென்னக மக்களும் விரும்பவில்லை ஆர்காடு நவாபும் பலரும் பிரிட்டிசாரோடு இணைந்து தடுக்கபார்த்தனர்
முதல் இரு போர்களில் அவன் கட்டுபடுத்தபட்டான் அத்தோடு 1762ல் இறந்தான்
அவனுக்கு பின் வந்தவனே திப்பு
அதாவது மொகலயாரை இந்துஸ்தான படை ஒடுக்க்கி இந்து ராஜ்யம் அமைத்தபின் திடீரென எழும்பி தெற்கே சுல்தானியம் அமைத்த ஐதர் வீழ்ந்து திப்பு வந்தான்
அவன் தந்தை வழியிலே தொடர்ந்தான், அதே பிஜப்பூர் சுல்தானிய கனவு அவனுக்கும் இருந்தது
ஆனால் பிரிட்டிசார் அதற்குள் ஆற்காடு நவாபின் ஆட்சியினை கைபற்றி வலுவாகி இருந்தார்கள், வங்கம் வரை அவர்கள் ஆட்சி வந்திருந்தது
தமிழகத்தில் வலுவான பிரிட்டிசார் மேல் பாய்ந்தான் திப்பு அதே நேரம் வடக்கே இருந்த சீக்கியரும் மராட்டியரும் இன்னும் மலையாள மன்னர்களும் திப்புவினை எதிரியாகத்தான் கண்டார்கள்
மராத்திய படைகள் வடக்கே வலுவாக இருந்தன ,இன்னும் பல இந்துபடைகள் அவனுக்கு எதிராகவே இருந்தன‌
இதனால் சில இந்துதுவேஷங்களை அவனும் செய்தான் அது வரலாற்றில் உண்டு
பின் பெரும் மோதலில் பிரிட்டிசார் அவனை கொன்றார்கள், அந்த பிஜப்பூர் சுல்தானிய கனவு நிறைவேறாமலே போனது
இந்திய சுதந்திரபோர் பிரிட்டிசார் காலத்தில் இருந்து தொடங்கியது என நம்புவோர்க்கு அவன் சுதந்திர வீரனாக இருக்கலாம்
ஆனால் ஆயிரமாண்டு போராட்டத்தில் அவன் அப்படி தெரிவதில்லை அவன் பழைய ஆப்கானிய பெர்ஷிய ஆட்சிபடி ஒன்றை நிறுவமுயன்றான்
அவ்வகையில் அது அந்நிய ஆட்சியே அதனால் அவன் சுதந்திர வீரன் என்பதை வரலாறு ஏற்காது ஒரு ஆக்கிரமிப்பாளளன் எனும் வகையிலே அவன் வருவான்
சரி, ஒரு வாதத்துக்கு திப்புவின் சுல்தானியம் நீடித்திருந்தால் என்னாகியிருக்கும்? இப்பிரதேசம் முழுக்க இஸ்லாமியமாகியிருக்கும் பின்னாளில் இங்கே ஒரு பாகிஸ்தான் உருவாகியிருக்கும்
அவன் சாம்ராஜ்யமும் அந்த ஐதரபாத் நிஜாமும் சேர்ந்து தெற்கு பாகிஸ்தானை சாத்தியபடுத்தியிருப்பார்கள்
1947ல் நடந்த ஐதரபாத் இணைப்பு சாத்தியமில்லாமல் போயிருக்கும் மைசூரும் ஐதரபாத்தும் தெற்கு பாகிஸ்தானில் தலமையாய் இருக்கும்
தமிழகம் இப்போது பாகிஸ்தானில் இருக்கும் இந்துசிறுபான்மை பகுதிபோல் மாறி இருக்கும் தஞ்சை ஆலயமோ மதுரை ஆலயமோ எதுவுமோ மிஞ்சியிருக்காது
பரிபூரண இஸ்லாமிய அரசு அமையும் போது அப்படித்தான் ஆகியிருக்கும்
ஆக திப்பு சுதந்திரவீரன் என்பதில் அர்த்தமில்லை, மராட்டிய இந்து அரசு வலிவிழந்தபோது அவன் மொகலாய்ர் போல ஒரு பெரும் அரசை உருவாக்க்க எண்ணினான் அதற்கு பிரிட்டிசாரை மராட்டியரை மலையாளிகளை தடை என கருதினான் , போர் தொடுத்தான் வீழ்ந்தான்
அதுதான் அவன் வரலாறே தவிர வேறோன்றுமில்லை, ஒருவேளை அவன் ஆட்சி நிலைத்திருந்தால் குழப்பமும் அதிகம் தெற்கு பாகிஸ்தானும் சாத்தியமாகியிருக்கும்
திப்புவினை யார் கொண்டாடுகின்றார்கள் என ஆழ கவனித்தால் அவர்களின் உள்நோக்கமும் புரியும்
இதனால் நாம் பிரிட்டிஷ்காரரை ஆதரித்ததாக ஆகாது, இந்த பூமி எப்போதும் எது குறைந்தபட்ச ஆபத்தோ அதை கொண்டு ஆபத்தில் இருந்து தன்னை மீட்கும்
அப்படி செங்கிஸ்கானிடம் இருந்து ஆப்கானியரை கொண்டு தன்னை மீட்டது, தைமுரிடம் இருந்து மீட்டது, மொகலாயரிடம் இருந்து பிரிட்டிஷார் மூலம் மீட்டது
அப்படியே திப்பு எனும் ஒரு ஆக்கிரமிப்பை செய்தவனிடமிருந்து பிரிட்டிசார் மூலம் மீட்டது, பின் பிரிட்டிசாரையும் வெளியேற்றி தன்னை விடுவித்து கொண்டது
அந்த ஞானபூமியின் தன்மை அப்படியானது, அவ்வகையில் மொகலாயர் பாணியில் திப்புவும் ஒரு ஆக்கிரமிப்பாளனே அவனை கொண்டாடுவோரும் அவன் வாளை உயர்த்துவோரும் எப்படியானவர்கள் என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல‌
அப்படியே பிரிட்டிசாரை கொண்டாடும் கூட்டத்தின் உள்மனமும் ஆபத்தானது
பிரிட்டிசாரோ திப்புவோ இருவருமே இந்த மண்ணின் சொந்தம் அல்ல, இருவருமே அந்நியர்கள், வலுவான இந்து அரசு இல்லாத இங்கே, சொந்த மண்ணில் சொந்த அரசு இல்லாத இங்கே யார் ஆள்வது என மோதிகொண்டார்கள்
ஆம், இருவருமே இங்கு ஆக்கிரமிப்பை செய்ய முயன்றார்கள் அதில் பிரிட்டிசார் வென்றாரகள் பின் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை தேசம் விரட்டியது
வரலாற்றில் பிரிட்சாருக்கு என்ன இடமோ அதுதான் திப்புவுக்கும் அதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...