Monday, May 22, 2023

ஒன்று வந்தால் மற்றொன்று போய்விடுமாம். எது வந்தால் எது போகும்?

 1.முதுமை வந்தால் அழகு போகும்...

2.பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும்...
3.கோபம் வந்தால் செல்வம் போய்விடும்...
4.பேராசை வந்தால் தைரியம் போய்விடும்...
5.கெட்டவர்கள் சவகாசம் வந்தால் நமது ஒழுக்கம் போகும்...
1.முதுமை வந்தால்
அழகு போகும்...
இளமையில் இருக்கும் உடல் அழகு முதுமை வந்து விட்டால் போய்விடும். இது இயற்கை.
2. பொறாமை வந்தால்
தர்ம மார்க்கம் போய்விடும்.
நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம் தர்ம மார்கத்தில் இருப்போம்.எப்போது பொறாமை வருகிறதோ, உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அவ்வாறு இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம் . எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்து விடும்.
3.கோபம் வந்தால்
செல்வம் போய்விடும்.
விசுவா மித்திரருக்கு அவரது தவ வலிமையே செல்வமாகும்.அவருக்கு கோபம் வந்தவுடன் எவ்வாறு அவர் தவவலிமை குறைந்து விட்டதோ, அது போல நமக்கு கோபம் வந்தால் நம்மிடம் உள்ள செல்வம் சென்று விடும்._
4.பேராசை வந்தால்
தைரியம் போய்விடும்.
நம்மிடம் அளவுக்கு அதிக பணமோ பொருளோ நகையோ இருந்து, அதன் மீது ஆசையும் இருந்தால், பகைவரோ பங்காளியோ, கள்வரோ, அரசோ ( அரசு என்றால் வரியாக சொத்துக் குவிப்பாக) அபகரித்து விடுவார்களோ என்ற எண்ணம் வரும். அந்த எண்ணமே நமது தைரியத்தை பறித்துவிடும்.
5. கெட்டவர்கள் சவகாசம் வந்தால்
நமது ஒழுக்கம் போகும்.
சுய லாபத்திற்காக ஒரு கெட்டவனுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கம் பறி போய்விடும்.
மேல் சொன்னவைகள் எதாவது ஒன்று வந்தால் ஒன்று போய் விடும். ...
ஆனால் அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்துபோகும்....!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...