Wednesday, May 24, 2023

இசை சாமியை பற்றி நடிகர் ,இயக்குநர் நாசர் அவர்களின் சிறப்பு கட்டுரை :-

 “நான் ஞான சூனியம்.. ஞானியை டெம்போ ஏற்ற சொன்னேன்” - இளையராஜா குறித்த நினைவலைகளை பகிர்ந்த நடிகர் நாசர்

==================================


`தென்றல் வந்து’ பாடலின் மேக்கிங் குறித்து நடிகர் நாசர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் இளையராஜா முன்னிலையில் இந்தப் பாடலின் மேக்கிங் குறித்து பேசியுள்ளார். 


“நான் ஞான சூனியம்.. ஞானியை டெம்போ ஏற்ற சொன்னேன்” - இளையராஜா குறித்த நினைவலைகளை பகிர்ந்த நடிகர் நாசர்


இளையராஜா ரசிகர்களுக்கு அவர் இசைத்ததில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்த பாடல் `தென்றல் வந்து தீண்டும் போது’. இந்தப் பாடலுக்கு எப்போதும் இளையராஜாவின் ரசிகர்களின் மனதில் ஒரு ஸ்பெஷலான இடம் இருக்கும். `தென்றல் வந்து’ பாடல் நடிகர் நாசர் இயக்கிய `அவதாரம்’ படத்தில் இடம்பெற்றது. 


இந்தப் பாடலின் மேக்கிங் குறித்து நடிகர் நாசர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பிரகாஷ்ராஜ் நடித்த `தோனி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாசர், இளையராஜா முன்னிலையில் இந்தப் பாடலின் மேக்கிங் குறித்து பேசியுள்ளார். 


`1994ஆம் ஆண்டு ஒரு கிராமத்துக் கதையை, தெருக்கூத்து அடிப்படையில் கதையாக முயன்று கொண்டிருந்தேன். இதுகுறித்து இளையராஜாவிடம் சொன்ன போது, `பார்க்கலாம்’ என்றார். நானும் படத்தை இயக்கத் தொடங்கினேன். படம் முழுவதுமாக முடிவடைந்த பிறகு, அவரிடம் படத்தை முடித்து விட்டதாகவும் அவர் பார்க்க வேண்டும் என்றும் கூறினேன். 


படம் பார்த்த பிறகு, காரில் ஏறி, `வீட்டுக்கு வா’ என்று கூறி சென்றுவிட்டார். படம் எப்படி வந்திருக்கிறது என்று பயந்தபடியே அவரைப் பார்க்க போனேன். எதுவும் சொல்லாமல், `நாளைக்கு ரெக்கார்டிங்’ என்றார். 


நானோ `தயாரிப்பாளர் அமெரிக்காவில் இருக்கிறார்’ என்றேன். முன்பணம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் உணர்த்தியபடி, மறுநாள் வர சொன்னார். மறுநாள் அவரது அலுவலகத்திற்குச் சென்ற போது, நீண்ட நேரம் என்னைக் காத்திருக்க செய்து ஏதோ ஒரு கடிதத்தை எழுதிக் கொண்டிருந்தார். 


அவரது சொந்த வேலை செய்வதற்காக நீண்ட நேரமாக என்னைக் காத்திருக்க செய்கிறாரா என்றே கோபமாக இருந்தேன். சிறிது நேரத்தில் தன்னுடைய உதவியாளரை அழைத்தார் இளையராஜா. அவரிடம் தான் எழுதிக் கொண்டிருந்த பேப்பரைக் கொடுத்து அனுப்பினார். அதன்பிறகு, `சார், நாம் ஆரம்பிக்கலாமா’ என்றேன்.


 `அதைத் தான் எழுதிக் கொடுத்துவிட்டேனே.. உன் படம் சொல்லிடுச்சு.. எங்கே என்ன இசை வைக்கணும்னு’ என்றார்’ என்று கூறியபடி `தென்றல் வந்து’ பாட்டின் மெட்டை உச்சரித்துக் காட்டினார். நான் ஒரு ஞான சூனியம். 


`பாடலின் டெம்போ குறைகிறது’ என்று ஞானியிடம் கூறினேன். இளையராஜா சிரித்துவிட்டு, நான் என் எடிட்டிங் வேலைகளை செய்வதற்கு அனுப்பினார். பாடல் பதிவின் போது, கல்யாண வீட்டிற்குச் சென்ற உணர்வு ஏற்பட்டது. அத்தனை பேரும் என் பாடலுக்காக வேலை செய்து கொண்டிருந்தனர். 


அமைதியாக `தென்றல் வந்து’ பாடலின் பெண்கள் உச்சரிக்கும் கோரஸ் பாடப்பட்டதும், நான் அழத் தொடங்கினேன். அருகில் இளையராஜா நின்றுகொண்டிருந்தார். அவரிடம் அதிகமாக சந்தேகம் கேட்டதற்கு மன்னிப்பு கேட்டேன். `முழு பாட்டையும் கேளுய்யா’ என்றார். 


அவரின் வேகத்திற்கு யாரும் ஈடுகொடுக்க முடியாது. அவர் இதனை எப்படி செய்தார் என்பது இன்றும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார் நாசர்.


`அவதாரம்’ படத்தின் ஐந்து பாடல்களும் வெறும் இரண்டரை நாள்களில் பதிவு செய்து முடித்ததையும் நாசர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...