Tuesday, May 23, 2023

காயத்ரி மந்திரம் என்றால் என்ன...?

 நாம் பல மந்திரங்களை கேட்டும், செபித்தும், தியானித்தும் வந்துள்ளோம். ஆயினும் "காயத்ரி" என்னும் மந்திரம் மட்டும் தலையாய மந்திரம் என்றும் மூத்த மந்திரம் என்றும் கூறுகின்றனர்...

கீதையில் கண்ணன், மந்திரங்களில் நான் காயத்ரி என்கிறார்... ஏன் மற்ற மந்திரங்கள் காயத்ரி மந்திரத்தை விட சக்தி குறைவா என்ற எண்ணம் எழுகின்றது...
காயத்ரி மந்திரம்
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
அப்படி என்ன ஓர் விஷயம் அடங்கி உள்ளது இம்மந்திரத்தில்... ஓர் சிறு விளக்கம் இணையத்தில் இருந்து எடுத்தது...
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...