Sunday, May 28, 2023

புதிய பாராளுமன்ற கட்டிடம் சிறப்பு அம்சங்கள் .

 புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:- 

* புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி. 

* குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த எச்.பி.சி. நிறுவனத்தை சேர்ந்த பிமல் படேல் என்பவர் இந்த பாராளுமன்ற கட்டிடத்துக்கான வடிவமைப்பை செய்து கொடுத்து உள்ளார். 

* டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி உள்ளது. 

* 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. 

* பாராளுமன்ற மக்களவையில் ஒரு மேஜையின் முன் உள்ள இருக்கைகளில் 2 எம்.பி.க்கள் அமர முடியும். 

* எம்.பி.க்கள் தங்களின் முன்பு உள்ள டிஜிட்டல் தொடுதிரை மூலம் பார்த்து வாசிக்கலாம். தேவையான வற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம். 

* அரசியல் சாசன காட்சியகம், கூட்டரங்கம், 6 கமிட்டி அறைகளுக்கான 92 அறைகள் இடம்பெற்று உள்ளன. 

* ஆடியோ, வீடியோ சார்ந்த உபகரணங்கள் மேம்பட்டதாக உள்ளன. 

* அலுவலக அறையில் மத்திய மந்திரிகளுக்காக 92 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

* மின்சக்தி பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில அம்சங்கள் உள்ளன. 

* மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. 

* ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து மறுபடியும் பயன்படுத்தும் அம்சங்களும் உள்ளன. 

* மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், அதிகாரிகள் இளைப்பாறுவதற்காக இளைப்பாறும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இது உணவோடு சேர்ந்து உரையாடக்கூடிய இடமாக உள்ளது. 

* பசுமை நாடாளுமன்றம் என்ற முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது. 

* 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 

* இந்த கட்டிடத்தின் ஆயுள் காலம் 150 ஆண்டுகள். 

* கட்டிடக் கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. 

* 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது.

 * மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என மொத்தம் 1272 எம்.பி.க்கள் அமர முடியும். 

* மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

* சிவப்பு-வெள்ளை மார்பிள் ராஜஸ்தானில் இருந்தும், கேஷரியா பச்சை நிற கற்கள் உதய்பூரில் இருந்தும், சிவப்பு நிற கிரானைட் கற்கள் அஜ்மீரில் இருந்தும், வெள்ளை நிற மார்பிள் கற்கள் ராஜஸ்தானில் இருந்தும், ஜல்லிக் கற்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் இருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன. 

* மேற்கூரைக்கான எக்கு டாமன் டையூவில் இருந்து வரவழைக்கப்பட்டது. 

* பித்தளை வேலைகள் குஜராத்திலும், மேசை, இருக்கைகள் செய்யும் பணி மும்பையிலும் நடந்தது. 

* அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன. 

* அரியானாவில் தயாரிக் கப்பட்ட எம்-சானட் மணல் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டது. சிமெண்ட் கற்கள் அரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து வர வழைக்கப்பட்டன. 

* 2020 டிசம்பர் 10-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 2½ ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. * மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. 

* செங்கோல் நிறுவிய நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்கள் பங்கேற்றனர். 

* செங்கோலை பூஜையில் வைத்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வழிபட்டனர். 

* மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 

* பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 

* வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார். 

* திருவாவடுதுறை, தருமபுரம், மதுரை உள்ளிட்ட 20 ஆதீனங்களிடம் பிரதமர் மோடி தனித்தனியாக ஆசி பெற்றார். 

* பாராளுமன்ற திறப்பையொட்டி இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் உள்ளிட்ட அனைத்து மத பிரார்த்தனை நடந்தது. இதில் சங்கராச்சாரியார்கள், பாதிரியார்கள், மதகுருமார்கள் பங்கேற்ற னர். 

* பாராளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார். 

* செங்கோலை உருவாக்கிய உம்மிடி ஜுவல்லர்ஸ் அதிபர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார். 

* புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

* சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடிபெட்டிக் குள் சோழர் காலத்து செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். அதன்பிறகு குத்துவிளக்கு ஏற்றினார். 

* அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்னும் தேவார பாடல் ஒலிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...