ஜனநாயகத்தின் குரல் வலையை நெரித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை சீர் குலைத்த பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியையே சாரும் என்பது ஊரரரிந்த விடயம்தான் ,இருந்தாலும் அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு இந்திய நாடளுமன்றத்தில் எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் நாடாளுமன்றத்தின் ஓர் மூலையில் அமர்ந்து கொண்டு பெருத்த ஊழையிட்டுக்கொண்டுள்ளது
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, May 25, 2023
சென்ட்ரல் விஸ்டா புதிய நாடளுமன்ற கட்டிட திறப்புவிழா வெற்று கூச்சலிடும் பொறுப்பற்ற எதிர் கட்சிகள் .
,,நாட்டின் வளர்ச்சி என்று வந்துவிட்டாலே காங்கிரஸ் கட்சிக்கு நவதுவாரங்களில் எல்லாம் எரிச்சல் வந்துவிடும் ,,,,வாரிசு அடிப்படையில் நாட்டை ஆண்டு வாரி சுருட்டிய கயவர்களுக்கு கடந்த இரண்டு நாடளுமன்ற தேர்தலில் மக்கள் பலத்த மரண அடி தந்துள்ளனர் ,
,400 க்கும் மேற்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்களை கொண்டு நாட்டை 60 வருடங்களுக்கு மேல் ஆண்ட காங்கிரஸ் கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டு வெறும் 40 இடங்களில் மட்டும் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து சுருங்கிப்போனதால் ஏற்பட்டுள்ள விரக்தியில் தேச நலனையும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
,,கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் போற்றுகின்ற ஒப்பற்ற தலைவன் மோடி அவர்களின் தலைமையிலான பாரதியஜனதா அரசு இந்திய தேசத்தை முன் எப்போதும் இல்லாத அளவில் பெரும் வளர்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளது
,,கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் உட்பட எந்த அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகவில்லை ,,மோடி அவர்களின் பொற்கால ஆட்சியில் தேசம் அணைத்து துறைகளிலும் வெளிப்படையாக செயல்படுகின்றது ,,
மக்களுக்காக தீட்ட படுகின்ற திட்டங்களின் பலன்கள் 100 சதவிகிதம் எந்த விதமான இடை தரகர்கள் இன்றி நேரடியாக மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கபடுகின்றது
,,முந்தைய ஊழல் காங்கிரஸ் வாரிசு ஆட்சியில் அரசு நிர்வாகத்திலிருந்த அலங்கோலங்கள் குளறுபடிகள் புரையோடிப்போயிருந்த ஊழல் நடைமுறைகள் முட்டுக்கட்டகள் முற்றிலும் களையப்பட்டு மோடி அவர்களின் தலைமையிலான அரசு வல்லரசு இந்தியாவை புதிய இந்தியாவை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது
,,எந்தவொரு துறையை எடுத்துக்கொண்டாலும் இந்த நாடு மிகப்பெரிய வளர்ச்சியை தனதாக்கிக் கொண்டு வருகிறது ,,,உள்நாட்டில் தேச விரோத சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளனர் ,காஷ்மீர் பிராந்தியம் முழுமையும் அமைதி திரும்பியுள்ளது ,வடகிழக்கு பிராந்தியங்களில் உள்ள தீவிரவாத குழுக்கள் ஜனநாயக பாதைக்கு திருப்பப்பட்டு நீடித்த வளர்ச்சியை கண்டுவருகின்றது
,,பாகிஸ்தானில் இருந்து தினம் தோறும் எல்லையில் ஊடுருவி இந்த தேசத்தில் குண்டு வெடிப்புகளை நடத்தி வெறியாட்டம் ஆடி மக்களின் உயிரை குடித்த தீவீரவாதிகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுள்ளனர்
,வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் அவர்களுக்கு அடைக்கலம் மற்றும் பொருளாதார உதவிகள் செய்யும் தொண்டு நிறுவனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முடக்கப்பட்டுள்ளனர்
,,எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்பு ஊடுருவல் கல்வீச்சு எல்லையில் பதட்டமான நிலை இவற்றை எல்லாம் மிகச்சாதுர்யமாக மோடி அரசு கையாண்டு மிகப்பெரியவெற்றிபெற்றுள்ளது
,,தீவிரவாதிகளின் புகலிடமாகவும் பயிற்சி கூடமாக செயல்பட்ட பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்து உலக அரங்கில் பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்ற உண்மை நிலையை உலகம் புரிந்துகொள்ளும் வகையில் நமது வெளியுறவு கொள்கையில் வெற்றிபெற்றுள்ளோம் ,பாகிஸ்தானின் உள்ளே புகுந்து தீவிர வாத முகாம்களை அழித்துள்ளது மோடி அவர்களின் ஆண்மையுள்ள அரசு என்று நிருபித்துள்ளது
,,கையாலாகாத காங்கிரஸ்காரர்கள் இந்திய தேசத்தை சுரண்டுவதிலே குறியாக இருந்த காரணத்தினால் மக்களின் பாதுகாப்பை கூட உறுதி செய்யாமல் இருந்தனர் ,,மன்மோகன்சிங் பொம்மை ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய அப்துல் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் மும்பை ரயில் நிலையம் மற்றும் தாஜ் ஹோட்டல் மற்றும் மும்பையின் மையப்பகுதியில் கோரத்தாண்டவம் ஆடி 300 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்த போது கையாலாகாத மன்மோகன் அரசு பாகிஸ்தானிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தது ,வெளியுறவு கொள்கையில் பகிரங்கமாக இந்த தேசத்தை தோல்வி அடைய செய்தவர்கள் இந்த காங்கிரஸ் கயவர்கள்
,,,ஆட்சி அதிகாரத்தை இழந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட இதே காங்கிரஸ்காரர்கள் தான் இந்த தேசத்தில் எமர்ஜென்சி அறிவித்து கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சி நடத்தி அரசியல் சாசனத்தின் மாண்பை கெடுத்து நாடளுமன்றத்தை முடக்கியவர்கள் தான் இன்று ஜனநாயகம் ஆபத்தில் இருக்கின்றது என்று வெற்று கூச்சல் இடுகின்றனர் ,
நேற்று அவர்கள் செய்த ஜனநாயக படுகொலைகளை வசதியாக மறந்துவிட்டு இன்று ஜனநாயகத்தை பற்றி மோடி அவர்களுக்கு பாடம் எடுக்கின்றார்கள் ,,,
அண்ணல் அம்பேத்கர் சர்தார் வல்லபாய் காட்டிய வழியில் இந்திய ஜனநாயகத்தையும் அதன் அரசியல் மாண்பையும் அழகுற காத்து வரும் மோடி அவர்களை குறைசொல்ல காங்கிரஸ் உட்பட்ட எந்த எதிர் கட்சிகளுக்கும் அருகதை இல்லை என்பதை இங்கே ஆணித்தரமாக பதிவு செய்ய விரும்புகின்றேன்
,,அரசியல் சாசனத்தை [356]பயன்படுத்தி இந்திரா குடும்பம் எத்தனை முறை மாநில அரசுகளை கலைத்துள்ளது ,,இந்திராகாந்தி படுகொலையின் போதும் இலங்கை யுத்தத்தின்போதும் காங்கிரஸ் எடுத்த நிலைப்பாடுகளை உலகம் அறியும் ,,,லட்சகணக்கான மக்களை கொன்று புதைத்ததை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது
,,நமது தொப்புள்கொடி தமிழ் உறவுகளை லட்சகணக்கில் கொன்று குவித்த இந்த கொடிய காங்கிரஸ் கயவர்களுடன் தமிழ் நாட்டில் உள்ள திரவிட மாடல் கயவர்கள் ,சிறுத்தைகள் ,உண்டியல்கள் அரசியல் கூட்டு சேர்ந்துகொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர்
ஒப்பற்ற தலைவன் மக்களின் நலனிற்காக அரும்பாடு படும் வாழும் மகாத்மா இந்திய பிரதமர் மோடி மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றார்கள்
,, புதிய நாடளுமன்ற கட்டிடத்தை திறக்க மோடியை விட தகுதி உள்ள நபர் வேறு எவருமில்லை ,,இந்த நூற்றாண்டு கண்ட மாமனிதன் மோடிஜியின் புகழை எந்த கொம்பனாலும் தடுத்து விடமுடியாது ,
மீண்டும் ஒருமுறை மோடிஜி தலைமையில் 2026 ல் அமைவதை தேச விரோத சக்திகளால் தடுக்க இயலாது ,,என்பதை சொல்லி நிறைவு செய்கின்றேன் நன்றி வணக்கம் தேசநலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஓரணியில் திரள்வோம் மோடியின் கரத்தை வலுபடுத்துவோம்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment