Saturday, May 27, 2023

உயிரோடு இருக்கிற வரைக்கும்தான் மனிதனுக்கு மதிப்பு.

 ஒருநாள் அசோக மன்னர் ஒரு புத்தத் துறவியின் காலில் விழுந்து வணங்கினார்.

அவருடைய தலை அந்தத் துறவியின் பாதத்தில் பட்டுவிட்டது. இதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு சங்கடமாக போய்விட்டது.
எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி அவரின் தலை ஒரு சன்னியாசியின் பாதத்தில் படுவதா? என கவலைப்பட்டார்.
அரண்மனைக்கு திரும்பியதும் அரசரிடம் அசோகச் சக்கரவர்த்தியின் சிரம் மதிப்புமிக்கது. அது சன்னியாசின் காலில் படுவதா? என்று கேட்டார்.
அதற்கு அரசர் பதில் சொல்லவில்லை .சிரித்துக் கொண்டே போய்விட்டார்.
அதன்பிறகு ஒருநாள் அமைச்சரை கூப்பிட்டு எனக்கு மூன்று சிரங்கள் வேண்டும். முதலாவது ஆட்டின் தலை .
இரண்டாவது புலியின் தலை.
மூன்றாவது மனிதனின் தலை. எங்கே இருந்தாலும் கொண்டு வாருங்கள் என்றார்.
ஆட்டுத்தலை கிடைத்துவிட்டது. புலித்தலையும் கிடைத்துவிட்டது. பிறகு சுடுகாட்டுக்குப் போய் ஒரு மனிதத்தலையும் எடுத்துக்கொண்டு வந்து அரசரிடம் கொடுத்தார் அமைச்சர்.
அசோகர் பார்த்துவிட்டு நல்லது இது மூன்றையும் எடுத்துக் கொண்டு போய் சந்தையில் விற்றுவிட்டு வாருங்கள்.
ஆட்டுத்தலை விற்றாகிவிட்டது. புலித்தலையும் விற்றாகிவிட்டது.
மனிதத் தலையை மட்டும் வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. எல்லோரும் பார்த்துவிட்டு விலகிப் போனார்கள்.
அமைச்சர் திரும்பி வந்து அரசரிடம் விஷயத்தைச் சொன்னார்.
சரி மீண்டும் சந்தைக்குச் சென்று இலவசமாகவே தருகிறேன் வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லச் சொன்னார் அரசர்.
அப்போதும் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. மறுபடியும் திரும்பி வந்து மன்னரிடம் விஷயத்தைச் சொன்னார்.
அப்போது அசோகர் அமைச்சரே உயிரோடு இருக்கிற வரைக்கும்தான் மனிதனுக்கு மதிப்பு.
இந்த தலைக்கும் மதிப்பு. உயிர் போன பிறகு அதன் மதிப்பும் போய்விடுகிறது. ஆகையினால் மதிப்பு இருக்கும் போதே பெரியவர்கள் பாதம் பணிந்து அந்த புனிதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
பெரியவர்களை பணிவது நமக்கு பெருமை தரக்கூடிய விஷயம்தான். இருந்தும் பணிவுக்கும் அடிமைத்தனத்துக்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொண்டால் யாரைப் பணியை வேண்டும்.
யார் காலில் விழ வேண்டும் என்பதும் தெளிவாக புரிந்து விடும்.
No photo description available.
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...