Monday, May 29, 2023

மதிப்பு_குன்றா_வைரம் .

 அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்கு செல்வது காஞ்சி மகானின் தினசரி வழக்கம். பிச்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார்.

ஒரு சமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்கு செல்லாமல் மடத்திலேயே இருந்துவிட்டார் மகான். பிட்சைக்கு செல்லாததால், அவர் உணவு எடுத்துக்கொள்ளவில்லை. பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார். இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை.
மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்கு செல்லவில்லை எனவே, மடத்தில் உள்ளோருக்கு பயம் தொற்றிக் கொண்டது. மடத்தில் உள்ளோர் எதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது. அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் நின்றார்கள்.
"எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்..!" எனப் பணிந்து வேண்டினர்.
மகா பெரியவர் சிரித்துகொண்டே, "நீங்கள் யாரும் எந்த தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்குக் கோபமும் இல்லை. என்னை திருத்திக்கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன். கொஞ்சம் நாட்களுக்கு முன் பிச்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து இட்டிருந்தார்கள். அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது. பூஜைகளை முடித்ததுமே, இன்றைய பிச்சையில் கீரை இருக்குமா?' என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது. மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிறைப் பட்டினி போட்டு அந்த ஆசையை விரட்டினேன்.
ஒரு சந்நியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது" என்றார்.
ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.
ஆனால் நாம் வீட்டில் அதிக மெனக்கெட்டு ருசியாக சமைத்த சமையலைகூட குறைகூறிக்கொண்டே இருக்கிறோம்.
May be an image of 1 person
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...