Wednesday, May 24, 2023

காங்கிரஸின் சிறுபான்மை அரசியலே தற்போதய குழப்பங்களுக்கு காரணம்.

 இஸ்லாமியருக்கோ கிறித்தவர்களுக்கோ பிஜேபியைப் பிடிக்கவில்லை என்றால் ஒரு அர்த்தம் உள்ளது. ஆனால் இந்துவான உங்களுக்கு பிஜேபியைப் பிடிக்கவில்லையே என்று ஒரு சகோதரர் என் பதிவில் கமண்ட் பதிவிட்டிருக்கிறார். நான் இந்து என்பதால் தான் பிஜேபியைப் பிடிக்கவில்லை. நான் உண்மையான இந்து. உண்மையான இந்து மதத்தின் பேரால் மக்களை வேறுபடுத்த மாட்டான். இப்போது நடப்பது போல ஜெய் ஶ்ரீராம் என்று சொல்லாவிட்டால் அடித்துக் கொல்லும் சம்பவங்கள் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தனவா? இப்போது இந்துக்களுக்கு தங்கள் மதத்தின் மீதான விழிப்புணர்வு வந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் வெவ்வேறு மதத்தினருடனான சகோதரத்துவம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு அல்லவா போகிறது? காங்கிரஸ் ஆட்சியில் இந்துவும் முஸ்லீமும் எவ்வளவு இணக்கமாக இருந்தார்கள்? இன்று இந்துவும் முஸ்லீமும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறார்களே? எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் மதக்கலவரம் ஏற்பட்டால் அந்த நாட்டில் அமைதி நிலைக்குமா? நேருவிலிருந்து மன்மோகன் சிங் வரை ஒவ்வொருவர் காலகட்டத்திலும் நாட்டைச் சிறிது சிறிதாக மேம்படுத்திய பிறகு அந்த நாட்டை தான் பிஜேபி இப்போது ஆள்கிறது. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்த போது கொத்து கொத்தாக இந்துக்களின் பிணங்களை அள்ளிக் கொண்டு இரயில்கள் பாகிஸ்தான் ராவல்பிண்டியிலிருந்து வந்ததை நான் ஒரு புத்தகத்தில் படித்தேன் (இன்றும் என்னிடம் அந்த புத்தகம் இருக்கிறது. பெயர் மறந்து விட்டது). ஒரு வீட்டை அடித்தளத்தில் இருந்து துவங்கி கட்டடமாக கட்டுவது பெரிய காரியமா அல்லது கட்டிய கட்டடத்தை அலங்கரிப்பது பெரிய காரியமா? காங்கிரஸ் ஆட்சிக் காலம் அடித்தளத்தில் இருந்து சிறிது சிறிதாக இந்தியாவைக் கட்டமைத்த காலம். அவர்கள் கட்டமைத்ததை இன்று மோடி சிறு சிறு மாற்றங்கள் செய்து அலங்கரித்து கொண்டிருக்கிறார். தேவர் மகன் படத்தில் சிவாஜி கமல்ஹாசனிடம் சொல்வது போல விதையைப் போட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தது காங்கிரஸ். அதன் பழங்களை (பலன்களை) அறுவடை செய்கிறது பிஜேபி. சுதந்திரம் அடைந்த உடன் இருந்த இந்தியாவை பிஜேபியிடம் கொடுத்து இருந்தால் இப்படிப்பட்ட ஒரு ஒன்றுப்பட்ட மிகப் பெரிய நாடாக இந்தியா இருந்திருக்காது. ரஷ்யா உடைந்து சிறு சிறு நாடுகளாக இருப்பது போல இப்போது இருக்கும் ஒவ்வொரு இந்திய மாநிலமும் தனி தனி நாடாக இருந்து இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...