Sunday, July 31, 2011

குழந்தைகளையும் விட்டு வைக்காத திமுக

கலைஞர் மற்றும் கனிமொழியின் படைப்புகளை எந்த ஒரு இலக்கியவாதியும் இலக்கியம் என்று சொல்லவே மாட்டார்கள். கலைஞரின் இலக்கியம் சுய நலம் சார்ந்தது. கனிமொழியின் இலக்கியம் என்பது திணிக்கப்பட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் அரசுக்கு ஜால்ராக்கள் இருந்து கொண்டே இருப்பர். அந்த ஜால்ராக்கள் இவர்களின் படைப்புகளை இலக்கியம் என்றுச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உண்மையான இலக்கியவாதிகள் எவரும் மேற்கண்ட இருவரின் படைப்புகளை பார்த்தால் சிரிப்பர்.
செம்மொழி மாநாடு என்ற ஒரு அயோக்கியத்தனமான மாநாடு நடத்தியது திமுக. இலங்கையில் கொத்துக் கொத்தாய் தமிழ் பேசியதற்காக கொல்லப்பட்டார்கள். அதை மூடி மறைக்க திமுகவினர் நடத்திய விழா தான் செம்மொழி மா நாடு. உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி இன்றி நடத்தப்பட்ட இந்த விழா கலைஞரின் குடும்ப விழாவாக நடத்தப்பட்டது. அவரின் குடும்பம் மட்டுமே முன் வரிசையில் அமர்ந்து கொண்டு ஆர்ப்பரித்தது. இதையெல்லாம் தமிழகம் மட்டுமின்றி உலகமே பார்த்தது. தமிழின் பெயரால் மிகப் பெரும் லாபம் அடைந்தவரில் கலைஞர் தான் உச்சம்.
பள்ளிக் குழந்தைகளின் பாடங்களில் எந்தத் தகுதியை வைத்துக் கொண்டு கலைஞர் தன் படைப்புகளையும், மகளின் படைப்பினையும் வைத்தார் என்பதைச் சற்று யோசிக்க வேண்டும். எதிர்காலத்தில் குழந்தைகளின் மனதில் திமுகவைப் பற்றிய பாசிடிவ் தோற்றத்தினை உருவாக்க வேண்டுமென்பதற்காக, கலைஞரின் பேரன் பேத்திகள் எளிதில் முதல்வராக, மந்திரிகளாக வருவதற்கு ஏதுவாய், நாட்டுக்கு நன்மை செய்தவராய் தங்கள் குடும்பத்தை முன்னுறுத்துவதை மிகத் தந்திரமாய் திட்டமிட்டு காய் நகர்த்தி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கிட வேண்டுமென்பதற்காக சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே தற்போது நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது தெரியவருகிறது. மக்களுக்கு நன்மை செய்கிறேன் பேர்வழி என்று சமச்சீர் கல்வித் திட்டத்தினைக் கொண்டு வந்து, மிகத் தந்திரமாக தங்களைப் பற்றிய பாடங்களைப் புகுத்தியது என்பது எவராலும் மன்னிக்க முடியாத ஒன்று.
அதிமுக அரசு இவர்களின் பாடத்தினை கிழித்து எரிந்தாலும், அது ஏன் கிழிக்கப்பட்டது என்பதைக் குழந்தைகள் அறிய முனைவர். அதிலும் திமுகவிற்கு ஒரு ப்ளஸ்தான். எது செய்தாலும் அதிமுகவிற்குப் பிரச்சினை வரும்படி திட்டமிடுதல் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால், உங்களுக்கு என்ன தோன்றுகிறது?????
சமச்சீர் கல்வித் திட்டத்திலும் பெரும் பிரச்சினைகளை உள்வைத்து, தன் அரக்கத்தனமான ராஜ தந்திரத்தை காட்டிய திமுக, குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை என்பது தான் உண்மை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...