சேலம், திருச்சியில் தனி சாம்ராஜ்ஜியம் நடத்திய தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு தற்போது காவல்துறையின் பார்வையில் விழுந்துள்ளனர்.
சேலத்தில் தனி அரசாங்கம் போல் செயல்பட்டவர் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். இவரை கேட்டுத்தான் ஆட்சியர் முதல் ஊராட்சி வரை செயல்பட்டது. அந்த அளவுக்கு இவரது ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்தது. இந்த சாம்ராஜ்ஜியம் 2011 மே 13ஆம் தேதியுடன் வீழ்ந்தது.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் போட்டியிட்ட வீரபாண்டி ஆறுமுகம், 34552 வாக்குகள் வித்தியாசத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமியிடம் படுதோல்வி அடைந்தார். வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்ட இவரது மகன் ஆ.ராசேந்திரன், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் செல்வத்திடம் 26,378 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்தார்.
இவர்களது வீழ்ச்சி மக்களின் வெற்றி. காரணம், அராஜகம் செய்து நிலத்தை அபகரித்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட இவர்களின் அனைத்து அராஜக செயல்களுக்கும் முடிவு கட்டினார் மக்களின் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழை மக்களிடம் இருந்து நிலத்தை அபரித்தவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட இவர், மீட்கப்பட்ட அனைத்து நிலத்தையும் உரியவரிடம் ஒப்படைத்தார்.
சேலம் அங்கம்மாள் காலனி, பிரிமியர் ரோலர் மில் நிலங்கள் அபகரிப்பு வழக்கு தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம் மீது சேலம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்ததுதான் தாமதம் தலைமறைவாகிவிட்டார். திடீரென சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கேட்டு மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால் முன்பிணை கொடுக்க மறுத்த விட்ட சென்னை உயர் நீதிமன்றம், காவல்நிலையத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து இன்று சேலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சரணடைந்தார் வீரபாண்டி ஆறுமுகம். தற்போது 3 நாட்கள் காவல்துறையின் விசாரணை வளையத்துக்குள் இருக்கிறார் வீரபாண்டியார்.
திருச்சியில் பெருநில மன்னர் போல் வாழ்ந்தவர் தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேருவும், அவரது சகோதரர் கே.என். ராமஜெயம். சாலை விபத்தில் மரணமடைந்த அமைச்சர் மரியம்பிச்சையிடம் தோல்வி அடைந்த கே.என்.நேரு தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
திருச்சி பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒட்டலை கே.என்.நேரு, அவருடைய தம்பி ராமஜெயம், திருச்சி மாநகராட்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் ரவுடிகளை வைத்து மிரட்டி ஒட்டலை பறித்துக்கொண்டதாக நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்துவிடம் கடந்த 18ஆம் தேதி புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கடந்த 21ஆம் தேதி முன்பிணை கேட்டு மனுத் தாக்கல் செய்தார் கே.என்.நேரு. அந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.
இப்படி ஊரை அடித்து உலையில் போட்ட கதையாக ஏழைகளின் நிலத்தை அபகரித்த தி.மு.க. அமைச்சர்கள் முதல் கவுன்சிலர் வரை தற்போது தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த அதிரடியால் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதே என்றே சொல்லாம்.
சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக சேலம் 24வது வட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சித்தானந்தம், சூரமங்கலம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்ட அடுத்த வினாடியே கட்சியில் இருந்து நீக்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா.
இப்படி முன் உதாரணமாக இருக்க வேண்டிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தவறு செய்தால் தண்டிக்கப்படுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கூறுகிறார். இப்படி கூறும் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது இந்த அமைச்சர்கள் மீது எத்தனை புகார். அப்போது நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இதுபோன்று நடக்குமா? வினை விதைத்தவன் வினை அறுப்பான்- என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலம் அபகரிப்பு புகார்கள் பெற தனிப்பிரிவு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு புகாரில் முதலிடத்தில் நாமக்கல் மாவட்டம் உள்ளது. 234 பேர் தங்கள் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்துள்ளனர்.
அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 181 பேர், சேலம் மாவட்டத்தில் 176 பேர், திருப்பூர் மாவட்டத்தில் 155 பேர், கடலூர் மாவட்டத்தில் 124 பேர், திருச்சி மாவட்டத்தில் 99 பேர், திருச்சி நகரில் 126, கோவையில் 62, மதுரையில் 42 பேர் தங்கள் நிலத்தை சிலர் வலுக்கட்டாயமாக அபகரித்துக்கொண்ட ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளனர்.
நில ஆக்கிரமிப்பாளர்களில் 90 சதவீதம் பேர் அரசியல்வாதிகள் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட நிலம் அபகரிப்பு புகார்கள் கூறப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் மட்டும் நில அபகரிப்பு புகார்கள் குறைவாக உள்ளதால் மீதமுள்ள 25 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்களை தமிழக அரசு அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான பரிந்துரையை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தமிழக அரசு அனுப்பி உள்ளது. ஓராண்டு செயல்பட உள்ள இந்த சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க அரசு 6.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்க இந்த சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாம்.

No comments:
Post a Comment