Saturday, July 16, 2011

தேவை! நம்மை வழிநடத்தும் நல்ல தலைவர்கள்! இப்போதுள்ள கழிசடைகள் அல்ல!

 


தலைவன் என்றால் எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது? தலைமைப் பண்பு என்றால் என்ன?

ஏற்கெனெவே இந்தக் கேள்விகளை பலமுறை  இந்
ப்பக்கங்களில், இந்திய அரசியல் சூழலோடும் பொருத்திப் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு சேத் கோடின் வலைப்பதிவில் ஏழே வரிகளில் படித்துக் கொண்டிருந்த போது இந்த சின்ன விஷயம் கூட நம்முடைய ஜனங்களுக்கு ஏன் புரிவதே இல்லை,  இந்த தேசத்தில் நல்ல தலைவர்களே ஏன் கிடைப்பதில்லை என்ற யோசனையும் கூடவே வந்தது.

சேத்
கோடின்சொல்கிறார்...
லைவனுக்கு இருக்கவேண்டிய தகுதி தலைமையேற்று நடத்தத் தெரிந்திருப்பது! எழுத்தாளன் என்று சொன்னால் எழுதத் தெரிந்திருக்க வேண்டும், வாசிக்க ஆள் இருக்க வேண்டும்!

நீங்கள் தலைவராக இருக்க விரும்பினால், தலைமை தாங்குங்கள்! என்று  ஒரு முத்தாய்ப்பு வைக்கிறார்.நம்முடைய தலைவர்களாக இருப்பவர்களுடைய  யோக்கியதை என்ன என்பதை பட்டுக் கெட்ட பிறகும் கூட, இந்த அறுபத்து நான்கு ஆண்டுகளில் கொஞ்சமாவது கற்றுக் கொண்டிருக்கிறோமா?

 
தேர்தலில் தோல்விக்கு பிறகு திமுக தலைமையை கைப்பற்ற முதல்வரின் மகன்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கட்சியிலும், குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டுள்ளது.
.
திமுக தலைவர் கருணாநிதிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் திமுக தலைவர் ஆத்திரத்துடன் அறிவாலயத்திலிருந்து வெளியேறி மகாபலிபுரத்துக்கு திடீரென சென்றார். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு புகாரில் அடுத்தடுத்து வழக்கு, கைது போன்றவற்றால் அதனை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது என்று தெரியாமல் திமுக திணறி வருகிறது.

போதாக்குறைக்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கிடைத்த படுதோல்வி அந்த கட்சிக்கு பலத்த அடியாக விழுந்தது. இதற்கெல்லாம் காரணம் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம்தான் என்று அக்கட்சியினர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டனர். இதனிடையே, மாவட்ட செயலாளர்கள் பதவியை மாற்றக்கூடாது என்று அண்மையில் மு.க.அழகிரி தந்தையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள்தான் கட்சியின் அடித்தளம். அவர்கள் இல்லாமல் கட்சியை வழிநடத்த இயலாது என்று அவர் கூறியதாக தெரிகிறது. ஆனால் ஸ்டாலின் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர்கள் சிற்றரசர்கள் போல செயல்படுவதாகவும் தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினர் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதால் தொண்டர்களுக்கும் கட்சிக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு விடுகிறது என்றும் ஸ்டாலின் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே, தலைமை பொறுப்பை கருணாநிதி, ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்றும் தலைமையில் மாற்றம் வேண்டும் என்றும் அக்கட்சியில் அதிருப்தி குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன. இத்தகைய பிரச்சனைகளால் திமுகவிலும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் குழப்பமும் பதட்டமும் நிலவி வருகிறது.

இந்த முக்கியமான காலக்கட்டத்தில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரச்சனையின் உச்சக்கட்டமாக ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்கள் சிலர் ஸ்டாலினை பற்றி கருணாநிதியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி விசாரிப்பதற்காக ஸ்டாலினை கருணாநிதி கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு அழைத்துள்ளார். அப்போது கனிமொழிக்கு நெருக்கமானவர்கள் பற்றி ஸ்டாலின் கடுமையாக குறை கூறியதுடன் தனது அண்ணன் மு.க.அழகிரி பற்றியும் விமர்சித்துள்ளார்.  தன் மீது புகார் செய்ததன் பின்னணியில் இருப்பவர்கள் யாரென்று தெரியாதா என்று ஸ்டாலின் கொதித்திருக்கிறார்.


இவர்கள் இருவரும் குடும்ப உறுப்பினர்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது. அப்போது கருணாநிதி தனது மகள் கனிமொழிக்கு சாதகமாக பரிந்து பேசியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதனை ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே அனல் பறக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இருவரும் கடும் கோபத்துடன் கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறினார்கள். அங்கிருந்து கருணாநிதி நேராக மகாபலிபுரத்திற்கு பயணமானார். வழக்கமாக அவர் மகாபலிபுரம் சென்றால் அவருடன் செல்லும் முன்னாள் அமைச்சர்கள் யாரும் உடன் செல்லவில்லை. அவருடைய நிழல் சண்முகநாதன் மட்டும் அவருடன் சென்றார். ஆயினும் கருணாநிதி மாலையில் சென்னை திரும்பினார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் அவரது மூத்த மகள் செல்வியும், குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்த முயல்வதாக அழகிரியை குற்றம் சாட்டியதாக தெரிகிறது. "முன்பெல்லாம் ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதிக்கு எதிராக குரலை உயர்த்தி பேசியதில்லை. ஆனால் இப்போது அவர் உறுதியாக தனது கருத்துக்களை எடுத்துச் சொல்கிறார். தன்னுடைய தந்தை கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்பதை இப்போதே  முடிவு செய்ய வேண்டும் என்பதில் ஸ்டாலின் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளார்' என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமை பொறுப்பை கருணாநிதி, ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் அழகிரியோ அதை முறியடிப்பதற்காகவே, தனது தந்தைதான் தொடர்ந்து கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. கட்சியைக் கைப்பற்றுவதில் இப்போது சகோதரர்கள் மட்டும் இன்றி கனிமொழி தரப்பும் களத்தில் காய் நகர்த்தி வருவது ஊர் அறிந்த  ரகசியம்தான் என்றாலும், குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்கிற மாதிரி இவர்களுக்குள் நடக்கிற இந்த யுத்தம் கட்சியை முழுக்க முழுக்க பலவீனப்படுத்திவிடும் என்ற கவலை அடி மட்டத்  தொண்டர்களுக்கு மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது. கட்சியை வைத்து கல்லா கட்டிச் சம்பாதித்தவர்களுக்கு  இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே கவலைப் பட்டு யோசனை சொன்னாலும் கேட்கிற நிலையில் தலைமை இல்லை.
 
இந்த பிரச்சினை நடைபெற உள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   முக்கிய பொதுக்குழு உறுப்பினர்களை பொதுக்குழு கூட்டத்தில் இதுபற்றி பேச வைப்பதற்கு ஸ்டாலின் தரப்பினர் வியூகம் வகுத்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனை முறியடிப்பதில் அழகிரி தரப்பும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.திமுக பொதுக்குழு கூட்டத்தில் மோதல் வெளிப்படையாகவே வெடிக்கும் என்று எதிர் பார்க்கப் பட்டாலும், அத்தனையையும் பூசி மெழுகி உடன்பிறப்புக்களை உளுத்தம் பருப்பாக நனைத்து ஊறப் போட்டு மாவரைப்பதில் கருணாநிதியின் சாமர்த்தியம் தனிதான்!

இந்த மாதிரி ஏய்ப்பதில் கலைஞனாக இருப்பதில் காட்டுகிற சாமர்த்தியத்தில் ஒரு சிறு பகுதியையாவது நல்லபடியாகப் பயன்படுத்தத் தெரிந்திருந்தால், இந்த அளவுக்குக் கேவலப்பட வேண்டி இருக்காது.

******


உச்சநீதி மன்றம் ஒவ்வொரு கொட்டாக  மத்திய அரசின் தலையில் கொட்டிக் கொண்டிருக்கிறது. தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தொடை நடுங்கிகளாக இருக்கிறார்கள் என்றால், கோளாறு அவர்களிடம் மட்டுமே அல்ல! அவர்களை அந்த இடத்தில் இன்னமும் விட்டு வைத்திருக்கிற நம்மிடமும் தான்!

புரிகிறதா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...