கருணாநிதியிடமிருந்து தமிழக அரசைக் கைப்பற்றிய ஜெயலலிதா அதிரடியாகப் பலமாற்றங்களை ஏற்படுத்தினார். அவருடைய விருப்பப்படியே பல காரியங்கள் நடைபெற்றன. தமிழக மக்களுக்கும் பிடித்தமான சிலவற்றை அதிரடியாக நிறுத்தினார். தமிழக மக்கள் பயனடைந்த சிலவற்றை முடக்கினார். அவருடைய கட்சியினரும் கூட்டணிக் கட்சிகளும் எதுவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. கருணாநிதி ஆரம்பித்த திட்டங்களை இல்லாமல் செய்வது தான் முதல் வேலை என்ற ரீதியில் தமிழக அரசு நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது.
கருணாநிதி அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஜெயலலிதா கை வைத்ததும் தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் கொதித்துப் போயுள்ளனர். ஆனால் வழமைபோல் ஆளும் கட்சியின் கூட்டணித் தலைவர்கள் சிலர் தமிழக அரசு செய்வது சரிதான் என்று ஒத்துப்பாடுகின்றனர். கருணாநிதியின் கவிதைகளும் அவரைப் பற்றிய குறி ப்புகளும் மாணவர்களின் கல்விப் புத்தகத்தில் இருக்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். அவற்றை நீக்கி விட்டு புத்தகத்தை வெளியிடலாம் என்ற கருத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழக அரசின் பிடிவாதத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை உணர்ந்த ஆசிரியர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தை நாடினார்கள். உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. சமச்சீர் கல்வியை ஆரம்பிப்பதற்கான திகதியையும் குறிப்பிட்டது. நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்
ளாது தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் பகையால் தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கருணாநிதி செய்தவற்றில் பிரயோசனமான ஒரே ஒரு காரியம் சமச்சீர் கல்விதான் என்று அவருடைய அரசியல் எதிரியான வைகோ நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்.
சமச்சீர் கல்வித் திட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதை உயர் நீதிமன்றம் ஏற்றுள்ளது. அவற்றை நீக்குவதற்கும் புதியவற்றை இணைப்பதற்கும் தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது அரை ஆண்டுக்கு இதே பாடப் புத்தகம் தொடரலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனை ஏற்றுக் கொள்வதற்கு தமிழக அரசு தயாராக இல்லை. சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக முடக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பமாகும். தமிழக அரசின் இந்த முடிவால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களின் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணரத் தவறிவிட்டது.
ஆட்சி பீடம் ஏறினால் போதும் சமச்சீர்
கல்வி பற்றியும் மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்பது போல் தமிழக அரசின் கூட்டணிக் கட்சிகள் செயற்படுகின்றன. சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா இடை நிறுத்தியதை உயர் நீதிமன்றம் எதிர்த்துள்ளது. ஆனால் கூட்டணித் தலைவர்கள் சிலர் மௌனமாக உள்ளனர். தமிழக அரசுக்கு எதிராகச் செயற்படமாட்டேன். தமிழக அரசை விமர்சிக்கமாட்டேன் என்று சரத் குமார் சத்தியப் பிரமாணம் செய்துள்ளõர். அரசாங்கம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது தான் கூட்டணி தர்மமே தவிர அரசாங்கம் செய்யும் தவறுகள் அனைத்துக்கும் துணை போவது கூட்டணித் தர்மம் அல்ல.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மதுரையை ஆக்கிரமித்தவர்கள் இப்போது தலைமறைவாகத் தொடங்கி விட்டனர். அழகிரியின் கண் அசைவில் கட்டுப்பட்டிருந்த மதுரைக்கு சோதனை வந்துள்ளது. அழகிரியின் ஆதரவாளர்கள் தலைமறைவாகத் தொடங்கி விட்டனர். அழகிரியின் வலது கரமான அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், எஸ்ஸா கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அழகிரியின் அனுமதி இல்லாமல் மதுரையில் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. அழகிரியை எதிர்த்தால் திராவிட முன்னேற்றக் கழகமே மதுரையில் தலை எடுக்க முடியாத நிலை இருந்தது. மதுரையை ஆக்கிரமித்த தலைவர் எல்லாம் இன்று தலைமறைவாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு குறைந்த விலையில் சொத்துக்கள் கைமாறியது போன்ற குற்றச்சாட்டுக்களினால் அழகிரியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் முதலாவது அரசியல்
எதிரி அழகிரிதான். 2011 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே இருக்காது என்று சூளுரைத்த அழகிரிக்கு பிரச்சினை ஆரம்பித்துள்ளது. அழகிரியின் மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்கள் கைமாறியது பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அவை பூரணமானதும் மனைவியின் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
டில்லியில் சி.பி.ஐ. குற்றப் பத்திரங்களைத் தாக்கல் செய்து திராவிட முன்னேற்றக் கழகப் பிரபலங்களை கைது செய்கிறது. சென்னையில் சன் தொலைக்காட்சியின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலாநிதி மாறனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மதுரையில் அழகிரி குடும்பத்துக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் எங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு எதிராகச் செயற்படுவதா வழக்குகளை எதிர்த்து வாதாடுவதா என்று தெரியாது குழம்பி நிற்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். உரிமைகளுக்காகப் போராடிச் சிறை சென்ற திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் ஊழல் வழக்குகளிலும் நில ஆக்கிரமிப்பினாலும் சிறை செல்வது விந்தையாக உள்ளது.

No comments:
Post a Comment