Saturday, July 23, 2011

முடிவு எதுவும் எடுக்கவில்லை என்கிறார் அழகிரி

பல்வேறு பின்னடைவுகளை சந்தித்திருந்த நேரத்தில் தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று மாலை கோவையில் துவங்கியது. முன்னதாக இன்று காலை கோவைக்கு வந்த கட்சித்தலைவர் கருணாநிதிக்கு தொண்டர்கள் மேள, தாளத்துடன் வரவேற்பு அளித்தனர். காலை 11 மணியளவில் கருணாநிதியை அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்று மத்திய அமைச்சர் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேச்சு நடத்தினார்.
10 நிமிடமே நீடித்த இந்த ரகசிய பேச்சின்போது என்னமாதிரியான விஷயம் பரிமாறப்பட்டது என்பதை கட்சி நிர்வாகிகள் சொல்ல மறுத்து விட்டனர். அழகிரியுடன் மதுரை மாவட்ட செயலாளர் மூர்த்தி, தேனி மாவட்ட செயலாளர் மூக்கையா உள்ளிட்ட ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.


இதற்கிடையில் கருணாநிதி சந்திப்புக்கு பின்னர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றபோது எதுவும் முக்கிய முடிவுகள் எடுத்திருக்கிறீர்களா? முடிவுகள் எப்படி இருக்கும் என்று அழகிரியிடம் கேட்டபோது இன்னும் முடிவு எடுக்கவில்லை, எடுத்த பின்னர் சொல்கிறேன் என்று கூறிய படி விர்ர்.,ரென கிளம்பினார் தனது ஆதரவாளர்களுடன்.

நாளை பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...