ஸ்டாலினும் கைது
தி.மு.க, வின் பொருளாளரும்-முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினை இன்று காலை திருவாரூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காரணம் ,கைதாணை[வாரண்ட்] கேட்டபோது ஏதும் இல்லை எனக்கூறி யதுடன் பூண்டி கலைவாணனையும் அவருடன் கைது செய்து வேனில் ஏற்றி திருவாரூர் மாவட்டத்தில் எங்கே செல்கிறோம் எனக் கூறாமலே சுற்றிவருகின்றனராம்.
அவர்களைத்தொடர்ந்து தி.மு.க,வினரும்,பத்திரிகையாளர்களும் வாகனங்களில் சென்று கொண்டிருக்கிறார்கள்.திருவாருர் அல்லது மன்னார்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
முன்னதாக 20 க்கும் மேற்பட்ட காவைதுறை வாகனங்களில் சுமார்300 காவலர்கள் வந்துள்ளனர்.மு.க.ஸ்டாலின் ஒரு படத்திறப்பு விழாவுக்கு காரில் சென்ற போது அவரின் காரில் மீது மோத வேகமாக வந்த காவல்துறை வாகனத்தைகண்டு ஸ்டாலின் கார் ஒட்டுநர் வண்டியை நிறுத்தியுள்ளார்.உடனே ஸ்டாலின்,பூண்டிகலைவாணன் ஆகிய இருவரையும் கைது செய்வதாக காவல் அலுவலர் கூறியதைத் தொடர்ந்து சாலை மறியலில் தி.மு.க,வினர் ஈடுபட்டுள்ளனர்.
சுமார்680 பேர்களுடன் ஸ்டாலின்,கலைவாணன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்டாலின்,கலைவாணன் தனியாக ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊரை சுற்றிவருகிறனர்.
சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடிய தி.மு.க.வினர் திருப்பி அனுப்பிய மாணவர்களில் ஒருவர் திரும்பிப்போகும் போது பேருந்து விபத்தில் இறந்து போனதற்காக இக்கைது நடவடிக்கை என காவல் துறையில் ஒ ருவர் கூறியதாகத்தெரிகிறது.
No comments:
Post a Comment