Thursday, July 28, 2011

பா.ம.க. வின் புதுக்கணக்கு

தற்போது அங்கம் வகிக்கும் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.ஸ்பெக்டரம் ஊழல்,இலங்கைத் தமிழ்ர் பிரச்சினை போன்றவை காரணமாக காட்டப்பட்டுள்ளது.பலரும் கேட்கும் கேள்வி,இப்போதான் தெரிஞ்சதா?

                                    தொடர்ந்து இதுவரை தி.மு.க அல்லது அ.தி.மு.க. என்று ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி சேரும் பொருட்டே ஒரு கட்சியிலிருந்து பா.ம.க வெளியேறும்.ஆனால் இப்போது உள்ளாட்சித்தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில் தி.மு.க விலிருந்து வெளியேறுவது அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்காக அல்ல.
                                      அ.தி.மு.க வில் பா.ம.க சேர வாய்ப்பில்லை என்பது இன்றைய சூழலில் அனைவருக்கும் தெரியும்.எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது அணியை முயற்சி செய்யும் நோக்கிலேயே பா.ம.க இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.மேலும் ம.தி.மு.க தயாராக நிற்கிறது.இரண்டு கட்சிகளுடன் வேறு சில கட்சிகளையும் சேர்க்க முயற்சிக்கலாம்.

                                     தி.மு.க  மீதான வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் இருக்காது என்பதை உணர்ந்தே இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.தவிர பல இடங்களில் இரு கட்சிகளுக்கும் உரசல்கள்.பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கே ஆதரவாகவே வாக்காளர்கள் முடிவெடுப்பார்கள் என்று கருதுவதும் ஒரு காரணம்.
                                     விடுதலை சிறுத்தைகளும் பா.ம.க உடன் வெளியே வரலாம் என்பதே பலரது கருத்து.இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் உள்ள கருத்தொற்றுமையை வைத்து ம.தி.மு.க,பா.ம.க,விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருக்கலாம்.

                                      மேலே குறிப்பிட்டவாறு மூன்றாவது அணி அமைந்தால் இலங்கைத்தமிழர் பிரச்சினையே பிரச்சார மையமாகவும் இருக்கும்.அடுத்த்தாக இருக்கவே இருக்கிறது ஸ்பெக்ட்ரம்.தி.மு.க கூட்டணியை எதிர்த்து இந்த பிரச்சாரமும்,அ.தி.மு.க கூட்டணிக்கு எதிராக சமச்சீர் கல்வி உள்ளிட்ட பிரச்சனைகளையும் பேசக்கூடும்.
                                      சமச்சீர் கல்வி விஷயத்தில் அ.தி.மு.க மீது அதிருப்தியில் உள்ள கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள்.ஆனால் கம்யூனிஸ்ட்கள் அவ்வளவு சீக்கிரம் வெளியேறுவார்கள் என்று தோன்றவில்லை.சீட்டு பேரத்தில்தான் அது முடிவாகும்.

                                      உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது அணி என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல,பாமக,மதிமுக,விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தொண்டர்களுக்கும் புது அனுபவமாக இருக்கும்.நிர்வாகிகளில்,தொண்டர்களில் அதிகமானவர்களுக்கு போட்டியிட வாய்ப்பும் கிடைக்கும்.தேர்தல் வேலையும் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும்.புது அனுபவத்திற்காக காத்திருப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...