அண்மையில் சென்னைக்கு வந்த பிரணாப் முகர்ஜி முன்னாள் முதல்வர் கருணாநிதிய அவரது அலுவலகமான அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முன்னாள் தமிழக முதல்வர் திரு மு.கருணாநிதி பிரதமர் பதவிக்கு பொருத்தமானவராக தெரிவதாகவும், மன்மோகன் தலைமையில் காங்கிரஸ் பல சிக்கல்களை குறிப்பாக ஸ்பெக்டரம் உள்ளிட்ட பாஜகவை சமாளிக்க முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்து, தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் புதிய பிரதமராக இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பை திரு கருணாநிதிக்கு வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களையும் தமிழர்களையும் தாம் மிகவும் நேசிப்பதாலாயே அவர்களின் பாசத் தலைவர் திரு மு கருணாநிதிக்கு பிரதமர் பதவிக்கு தாம் பரிந்துரைப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் திமுக அரசின் பல சாதனைகளை பட்டியல் இட்டு திரு மு.கருணாநிதியிடம் பேசிய முகர்ஜி, அத்தகைய திட்டங்களை இந்தியா எங்கும் விரிவுபடுத்த கருணாநிதியே சரியான தேர்வு என்பதையும் தெரிவித்துள்ளார். முகர்ஜி சந்திப்பின் போது பக்கத்தில் இருந்த பேரன்களின் ஒருவர் 'தாத்தா எனக்கு ஹிந்திப் படம் எடுத்து வட இந்திய கலைத் துறைக்கு தொண்டு ஆற்ற ஆவல் எழுந்துள்ளது', எனவே பிரதமர் பதவிக்கான தேடிவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்ல, நெகிழுந்து போனாராம் முகர்ஜி, காரணம் தென்னிந்தியர்களுக்கு தேசிய உணர்வு குறைவு என்று நினைந்திருந்ததற்கு கருணாநிதியின் பேரனின் இ(ஹி)ந்திய தேசிய பற்று சாட்டையடி கொடுத்துள்ளதாம்.
முகர்ஜியின் வேண்டுகோளை ஏற்கத் தயங்கிய திரு கருணாநிதி மகள் மற்றும் ராசா திகார் சிறையில் இருக்க என்னைப் பிரதமர் ஆக்குவது சர்சை ஆகாதா ? என்று கேட்டுள்ளார், அதற்கு பதிலளித்த முகர்ஜி 'இவை எல்லாம் வட இந்திய ஆரிய பத்திரிக்கைகள் சூடான செய்திக்காக கிளப்பிவிடப்பட்ட வதந்தி, நீதிமன்றம் அவற்றை தற்காலிகமாகத்தான் நம்பியுள்ளது, குற்றச் சாட்டுகள் ஆதரமற்றவை விரைவில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என்று தேறுதல் கூறினாராம், இருந்தாலும் முதுமையையும் கவனத்தில் கொள்ளச் சொன்ன கருணாநிதியை அங்கிருந்து இடைமறித்த திரு முக அழகிரி இந்தியாவின் 21ஆவது பிரதமரும், 22 ஆவது பிரதமரும் நீங்கள் தான் இதில் மாற்றம் எதுவும் இப்போது வேண்டாம் என்றும் தமிழக திமுகவின் தலைமைப் பதவியை இதற்காக விடத் தேவை இல்லை தொடரலாம் என்று கூறி உள்ளார்.
இதையெல்லாம் கேட்டு நெகிழ்ந்த திரு மு.கருணாநிதி முகர்ஜியிடம் 'பிளாட்டின வெண்ணிலவு அன்னை சோனியாவிடம் தாம் பிரதமர் பதவிக்கு இசைந்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்ததாகச் சொல்லவும்' என்று விடை கொடுத்துள்ளார். அதன் பிறகு முரசொலியில் நெகிழ்ச்சியில் உபி களுக்கு கடிதம் எழுதத் துவங்கிய கருணாநிதி
'பார்த்தாயா உடன்பிறப்பே, பதவிகள் என்னும் முள்கிரிடமும், பாராட்டுவிழாக்கள் என்னும் மலர் மாலைகளும் நான் வேண்டாம் என்றாலும் அவை என்னை நோக்கிய வருகின்றன, அன்னைத் தமிழுக்கு ஆற்றும் அரும் தொண்டாகவே நான் இந்த இடற்களை சுடர்விளாக்காக் கண்டு ஏற்றுக் கொள்கிறேன்,. மைனாரிட்டி அரசு என்று கழக அரசை இகழ்ந்த கொடை நாட்டு தென்குமரி தமிழக நலத்திட்டத்திற்கு பிரதமரிடம் கைநீட்டும் நிலை ஏற்பட்டுள்ளது, இதைத் தான் அண்ணா அன்று சொன்னார் 'ஆணவம் கூடாது அதுவும் ஆட்சியாளர்களுக்கு அறவே கூடாது' என்றார், பிரதமர் ஆனால் தாய் தமிழ்நாட்டை தற்காலிகமாக பிரிந்து செல்கிறோமே என்று வருத்தமே என்னிடம் ஏற்பட்டுள்ளது, அயல்நாடு சென்று உழைக்கும் தமிழர்களுக்கு அன்றாடம் தாய் தந்தையர் மனைவி மக்கள் நினைவு இருப்பதைப் போல் டெல்லி சென்றாலும் என் எண்ணமெல்லாம் எப்போதும் தமிழகம் மற்றும் தமிழர் நலன் சார்ந்தே இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை.........
**********
ஏந்திரிங்க மணி ஆச்சு ஆபிஸ் கிளம்பல.........
அட விடியற்காலை கனவா ? இது நடந்துவிட்டால் பின்னர் ஜெ-வை பிரதமர் ஆக்கும் துர்பாக்கிய, திரிசங்கு நிலையில் வெளியில் இருந்து ஓட்டுப் போடாவிட்டாலும் ஆதரவு கேட்க வேண்டி இருக்குமோ ? தமிழகத்துக்குத்தான் சாபக்கேடுகள் தொடரும் என்று நினைத்தேன், இந்தியாவுக்குமா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்
நக்கீரனில் 'மத்திய மந்திரி ஆகிறார் கனிமொழி' என்பதை படித்த பிறகு இந்தமாதிரி கெட்ட கெட்ட கனவாக வருது
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment