Monday, July 25, 2011

'2ஜி தொடர்பு: பிரதமர், சிதம்பரம் பதவி விலக வேண்டும்'

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரிந்தேதான் நடைபெற்றதாக ஆ.ராசா தெரிவித்துள்ளதால் அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

2ஜி வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றபோது, இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா தமக்காக தாமே ஆஜராகி வாதாடினார்.அப்போது மேற்கண்ட தகவலை அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ராசாவின் இந்த வாதத்தை தொடர்ந்து பிரதமர் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரை பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் நிதின்கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனைக் கூறிய அவர், சுதந்திர இந்தியாவின் ஊழலாக கருதப்படும் 2 ஜி ஊழலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றார்.

மேலும் ராசா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் கட்கரி.

ஊழல்வாதிகள் என தெரியவந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா காந்தி எப்போதுமே கூறி வருகிறார்.ஆனால் இந்த விவகாரத்தில் அவர் அமைதியாக இருப்பது ஏன்?

நீதிமன்றத்தில் ராசா அளித்துள்ள ஒப்புதல்,இந்த ஊழலில் பிரதமர் மற்றும் சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கான நேரடி சாட்சியா இல்லையா என்று சோனியா காந்தியிடம் நான் கேட்கிறேன்.

2
ஜி ஊழலில் அவர்கள் இருவருக்கும் உள்ள அனைத்து தொடர்புக்ளையும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இவர்கள் இருவருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோனியா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கட்கரி மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...