Saturday, July 30, 2011

2ஜி: ராசாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர், சோனியா விளக்கம் அளிக்க அதிமுக வலியுறுத்தல்

2ஜி ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நீதிமன்றத்தில் கூறிய குற்றச்ச்சாட்டு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

2ஜி வழக்கில் குற்றம்சாட்டபட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசா, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வாதிடுகையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற நிறுவனங்கள், அந்த உரிம பங்குகளை அதிக விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்ற விவகாரம் மன்மோகன் சிங் மற்றும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரியும் என்றும், அப்போது பிரதமர் இது தொடர்பாக விளக்கம் கோராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியிருந்ததோடு, இவ்வழக்கில் ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியமாக சேர்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ராசாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து பிரதமரோ அல்லது சிதம்பரமோ இதுவரை வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், 2ஜி வழக்கில் ஆ.ராசா பிரதமர் கூறிய குற்றச்ச்சாட்டு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆ.ராசா குற்றச்சாட்டைக் கூறி இத்தனை நாட்கள் ஆகியும், இத்வரை பிரதமரோ, சிதம்பரமோ அது குறித்து பதிலளிக்காமல் இருந்து வருகின்றனர்.

அத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியும் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் மக்களுக்கு உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்ள உரிமை உள்ளது. எனவே ராசாவின் குற்றச்சாட்டு குறித்து அவர்கள் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...