Monday, July 25, 2011

தி.மு.க.,வீழ்ச்சிக்கு யார் காரணம்:பத்திரிகையாளர் கிள்ளிவளவன் குமுறல்

:""பலரின் கடுமையான உழைப்பால், தியாகத்தால் வளர்க்கப்பட்ட தி.மு.க., கலாநிதி, தயாநிதி சகோதரர்களின் சுயநலச் செயல்பாடுகளால், மக்களிடம் மதிப்பிழந்து, அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது,'' என்று மூத்த பத்திரிகையாளர் கிள்ளிவளவன் கூறினார்.பத்திரிகையாளர் அன்பழகன் (அன்பு) எழுதிய, "கே.டி., சகோதரர்கள் - உண்மையும்... ஊழலும்...' என்ற தலைப்பில் எழுதியுள்ள நூல், சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.

மறைந்த அண்ணாதுரையின் நெருங்கிய நண்பரும், மூத்த பத்திரிகையாளருமான கிள்ளிவளவன், இந்நூலை வெளியிட்டு, பேசியதாவது:மக்களின் அமோக ஆதரவுடன் அண்ணாதுரையால் துவங்கப்பட்ட தி.மு.க., பலரின் கடுமையான உழைப்பாலும், தியாகத்தாலும் வளர்ந்தது. கருணாநிதியின் பேரன்களான கலாநிதி, தயாநிதி சகோதரர்களின் சுயநலச் செயல்பாடுகளால், மக்களிடம் தி.மு.க., மதிப்பிழந்து, அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.தி.மு.க.,வின் வீழ்ச்சிக்கு இவர்கள் தான் காரணம். இந்த சகோதரர்கள் மூலம் சன், "டிவி' நெட்வொர்க் உட்பட இந்தியாவில் 31 கம்பெனிகள் துவங்கப்பட்டுள்ளன. இக்கம்பெனிகள் முன் அனுமதி பெற்ற விதம் குறித்து சர்ச்சைகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.


தமிழகத்தில் தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்த போது, அரசின் செல்வாக்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பல ஆதாயங்களை இவர்கள் அடைந்துள்ளனர். இவர்களாலும், தி.மு.க.,வினராலும் நடந்த தவறுகள், கருணாநிதிக்கு தெரியாது என்று சொல்ல முடியாது; தெரிந்தே நடந்திருக்கிறது. கருணாநிதி குடும்பத்தினர்களின் இத்தகைய செயல்பாடுகளால், கட்சியை மீண்டும் சரி செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.கட்சிக்கு முரணாக இச்சகோதரர்களின் செயல்பாடுகள், அவர்கள் நடத்தி வரும் கம்பெனிகள் மற்றும் எந்த வகையில், எப்படி வளர்ந்தனர் என்ற விவரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வாங்கப்பட்ட பல தகவல்கள் இடம்பெற்றுள்ளதால், இதை அவர்கள் மறுக்க முடியாது. மிகவும் சரியான நேரத்தில் தான் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு கிள்ளிவளவன் பேசினார்.


"தீக்கதிர்' நாளிதழின் மூத்த நிருபர் பாலசுப்பிரமணியன் பேசும் போது, ""நிறைய அனுபவமும், அறிவும், ஆற்றலும் நிறைந்த கருணாநிதிக்கு, இவர்கள் குழி பறிக்கும் வேலை பார்த்தது, எப்படி தெரியாமல் போனது என்பது ஆச்சரியமாக உள்ளது,'' என்றார்.மூத்த பத்திரிகையாளர் பாலு பேசும் போது, ""தி.மு.க.,வுக்காக பாடுபட்ட கிள்ளிவளவனுக்கு, அண்ணாதுரை 50 சவரன் தங்கம் வழங்கி பாராட்டினார். ஆனால், அதை கிள்ளிவளவன் கட்சிக்கே திரும்ப கொடுத்துவிட்டார். கட்சிக்கு உழைப்பதற்கு சன்மானம் தேவையில்லை என்று சொன்ன, இவரைப் போன்றவர்கள் வளர்த்த கட்சியில், இன்று எப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், இதனால், கட்சி எந்த நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது என்பது கருணாநிதிக்கு தெரியாமலிருக்காது,'' என்றார்.


"கே.டி., சகோதரர்கள் - உண்மையும்... ஊழலும்...' என்ற தலைப்பில், புதிய நூலை எழுதியுள்ள பத்திரிகையாளர் அன்பழகன் (அன்பு) பேசும் போது, ""தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களை, தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இப்புத்தகம் உருவாக்கப்பட்டது. தி.மு.க.,வின் வளர்ச்சிக்காக நானும் பல போராட்டங்களில் கலந்து கொண்டவன் என்ற முறையில், தி.மு.க.,வை பற்றி விமர்சனம் செய்ய எனக்கும் தகுதி உள்ளது என்பதால் தான், தி.மு.க.,வின் அழிவுக்கு காரணமாக இருந்த கலாநிதி, தயாநிதி சகோதரர்கள் பற்றி எழுதியுள்ளேன்,'' என்றார்.


அரசு கேபிள் "டிவி'க்கு 400 கோடி ரூபாய் நஷ்டம்:"கே.டி., சகோதரர்கள் - உண்மையும்... ஊழலும்...' நூலை எழுதிய அன்பழகன் கூறும்போது, ""கலாநிதி, தயாநிதியின் குறுக்கீடுகளால், அரசு கேபிள் "டிவி' முடங்கிப்போனது. இதனால், அரசு பணம் 400 கோடி ரூபாய் செலவானது தான் மிச்சம். தனியார் "டிவி' நிறுவனங்கள் பூமிக்கடியில் கேபிள் பதிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு இருக்கிறது.""இதையும் மீறி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, சன், "டிவி'யின் கிளை நிறுவனமான கல் கேபிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பூமிக்கடியில் கேபிள் அமைத்துக் கொள்ள அரியலூரில், தரை வழிப் போக்குவரத்து துறையில் அனுமதி பெறாமல், கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன,'' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...