கோவை, சித்ரா காளப்பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் கிங்ஸ்லி(வயது 42). இவருடைய மனைவி ஜெமிலா கிங்ஸ்லி. இவர்களுக்கு சொந்தமான ஜியான் பேப்பர் மில் நிறுவனம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள காடுவெட்டிபாளையத்தில் இருந்தது.
இந்த பேப்பர் மில்லை கிங்ஸ்லி விற்பனை செய்ய முடிவு செய்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த புரோக்கர் சுப்புரத்தினம் மூலம், உடுமலையைச் சேர்ந்த கோகுல்தாஸ் மகன் சீனிவாசன் (39), அந்த பேப்பர் மில்லை வாங்கி ஓட்டி வந்தார்.
பேப்பர் மில் லாபகரமாக ஓடிய நிலையில், சீனிவாசனிடம் இருந்து அந்த மில்லை திரும்ப வாங்க கிங்ஸ்லி நினைத்தார். இந்த நிலையில், சென்னை தென்மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்பழகன், சீனிவாசனை தனது அலுவலகத்துக்கு அழைத்து மிரட்டி, போலி ஆவணங்கள் தயாரித்து அவரிடம் இருந்த ஜியான் பேப்பர் மில் நிறுவனத்தை மீண்டும் கிங்ஸ்லி பெயரில் மாற்றி எழுதி வாங்கிக்கொண்டதாக தெரிகிறது.
பேப்பர் மில்லை பறி கொடுத்த சீனிவாசன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:- கடந்த 2008-ம் ஆண்டு ஜியான் பேப்பர் மில் நிறுவனத்தை வாங்க முடிவு செய்தேன். கடந்த 1-5-2008-ம் ஆண்டு கிங்ஸ்லி, அவருடைய மனைவி ஜெமீலா கிங்ஸ்லி ஆகியோரிடம் ரூ.12 கோடியே 10 லட்சத்துக்கு விலை பேசி அதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது.
பேப்பர் மில் வாங்குவதற்காக ரூ.2 கோடி பணம் கிங்ஸ்லியிடம் கொடுத்தேன். பேப்பர் மில்லின் ஆவணங்கள் அனைத்தையும் எனது பெயருக்கு மாற்றி கொடுத்தனர். அதன்பிறகு ரூ.5 கோடி செலவில் நவீன எந்திரங்களை அமைத்து ஜியான் பேப்பர் மில்லை தரம் உயர்த்தினேன். நாள் ஒன்றுக்கு 40 டன் பேப்பர் தயாரிக்கும் அளவுக்கு பேப்பர் மில் சிறப்பாக செயல்பட்டது.
கிங்ஸ்லியிடம் பேசியது போல் பேப்பர் மில்லுக்கான தொகையை தொடர்ந்து செலுத்தினேன். இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு ஜுலை மாதம் கிங்ஸ்லி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் உதவியாளர் அய்யப்பன், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்பழகன் ஆகியோர் எனது ஜியான் பேப்பர் மில் நிறுவனத்தை என்னிடம் இருந்து அபகரிக்கும் வகையில் எனக்கும் எனது குடும்பத்துக்கும் மிரட்டல் விடுத்தனர்.
கடந்த 29-7-2009 அன்று சென்னை தி.நகரில் உள்ள அன்பழகன் அலுவலகத்துக்கு என்னை அழைத்தனர். நான் அங்கு சென்றேன். அங்கு அன்பழகன் முன்னிலையில் அய்யப்பன், கிங்ஸ்லி, சுப்புரத்தினம் ஆகியோர் என்னை மிரட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்து ஜியான் பேப்பர் மில் நிறுவனத்தை கிங்ஸ்லியின் பெயருக்கு எழுதி வாங்கினார்கள். அதற்கான பணத்தையும் திருப்பி கொடுக்காமல் என்னை மிரட்டினார்கள். இதற்கு ஹன்ஸ்ராஜ் சக்சேனாவும் உடந்தையாக இருந்தார்.
கிங்ஸ்லி, அவருடைய மனைவி ஜெமிலா கிங்ஸ்லி, கிங்ஸ்லியின் சகோதரர் ரவி சாம்ராஜ், அவருடைய மனைவி மார்ஜினோ சாம்ராஜ், அய்யப்பன், புரோக்கர் சுப்புரத்தினம், சன் பிக்சர்ஸ் முதன்மை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்பழகன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்து இருந்தார்.
புகாரை பெற்ற திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இந்த வழக்கு தொடர்பாக கிங்ஸ்லி, அவருடைய மனைவி ஜெமிலா கிங்ஸ்லி, கிங்ஸ்லியின் சகோதரர் ரவி சாம்ராஜ், அவருடைய மனைவி மார்ஜினா சாம்ராஜ், அய்யப்பன், சுப்புரத்தினம், ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அன்பழகன் ஆகிய 8 பேர் மீது பலவந்தமாக அடைத்து வைத்தல், ஆவணங்கள் மூலம் ஏமாற்றுதல், ஏமாற்றி மோசடி செய்தல், போலி ஆவணங்களை உண்மையான ஆவணங்கள் என்று மோசடி செய்தல், சொத்தை மிரட்டி பறித்தல், கொலைமிரட்டல், கூட்டு சதி செய்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தென்சென்னை தி.மு.க. மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான அன்பழகனை கைது செய்ய போலீசார் சென்னை வந்தனர். திருப்பூரில் இருந்தே 3 போலீஸ் வேனில் சுமார் 50 போலீசார் வந்திருந்தனர். இவர்களின் திடீர் வருகை சென்னை போலீசாருக்குக் கூட தெரியாது. அதிகாலை 4.45 மணிக்கு எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வீட்டிற்கு வந்த போலீசார், கதவை தட்டி அவரை எழுப்பினார்கள்.
கதவை திறந்த எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனிடம், வாரண்டுடன் வந்திருப்பதாகவும், தங்களை கைது செய்வதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதற்கு அவர், `மக்கள் பிரதிநிதியான என்னை காரணம் சொல்லாமல் கைது செய்ய முடியாது' என்று கூறினார். `நீங்கள் எதுவேண்டுமானாலும் போலீஸ் நிலையத்தில் வந்து சொல்லுங்கள்' என்று கூறி, போலீசார் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
இதேபோல் இந்த வழக்கின் முதல் குற்றவாளியான கிங்ஸ்லியை, கோவையில் அவரது வீட்டில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட அன்பழகன் எம்.எல்.ஏ.வை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று மதியம் 1.30 மணிக்கு அழைத்து வந்தனர். மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தி முடித்தவுடன் உடுமலைக்கு அழைத்து சென்றனர்.
உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கு மருத்துவபரிசோதனை நடந்தது. கோர்ட்டு விடுமுறை என்பதால், உடுமலை 1-வது மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு அவரை அழைத்து சென்றனர். மாலையில் மாஜிஸ்திரேட்டு தீபா முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு தீபா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ.வை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை கொண்டு சென்று மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
திருச்சி மதுரை சென்னை இப்படி எல்லா மாவட்டங்களிலும் வரும் புகார்கள் "மலைக்க" வைக்கின்றன!! இதில் எங்கே அம்மாவின் பழிவாங்கும் செயல் வருகின்றது? புகார் கொடுத்தவர்கள் பொதுமக்கள்..போலீசார் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அவர்கள் "கடமை"..இதில் எங்கே போலீசார் குறுக்கீடு செய்கின்றனர். திமுக எல்லா மாவட்டங்களிலும் "வாஷவுட்" ஆக காரணம் என்ன? சிந்தியுங்கள்..!! பணம் பட்டுவாடா செய்தும்கூட இவர்களுக்கு மக்கள் வாக்களிக்க தயாராய் இல்லையே..! ஏன்? ஆடிய ஆட்டம் அப்படி..! கட்டபஞ்சாயத்தில் பிடுங்கிய சொத்துக்கள் ஏராளம்..!! ரௌடியிசம் தலைதூக்க காரணமே இந்த அமைச்சர்களின் கொட்டம்தான்.! அதன் விசுவாசம்தான் இன்றைக்கு பஸ் கண்ணாடி உடைப்பு போன்றவை. இப்படி செய்துவிட்டால் போலீசார் பயந்து குற்றவாளியை விட்டுவிடுவார்களா என்ன? இதற்க்கு முழு முதற்காரணம் இந்த மஞ்ச துண்டார்தான். கண்டிக்க மறுத்தார்..ஏன்? "கப்பம்" வீடுகள் தேடி வந்தது..! மனைவி இனைவிகளின் தலியீடு அதிகம் காணப்பட்டது. கப்பம் கட்டியவர்கள் ஆதரிக்கப்பட்டார்கள்..!! போலிசின் கைகள் கட்டப்பட்டது..பொதுமக்களின் புகார்கள் மீதான நடவடிக்கைக்கு பதிலாய் அவர்கள் "மிரட்டப்பட்டனர்"..! இது கொடுமைதானே..? ஏற்புடையதா? சொல்லுங்கள்..! மாண்பு மிகு புரட்சித் தலைவி அவர்களே தாங்கள் எடுக்கும் நடவடிக்கை நேர்மை உள்ள மனசாட்சி உள்ள அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது ஊழல் அரசியல்வியாதிகளிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அதை அரசுடமையாக்கினால் மிகவும் நன்றாக இருக்கும்.
திநகர் ரங்கநாதன் தெருவில் பிளாட்பாரத்தில் கரும்பு ஜூஸ் கடை வைத்திருந்த ஆள் இவரு! மெதுவாக சின்னக் கடையாக்கி, பிளாட்பாரத்தையும் விழுங்கி, கடையைப் பெரிசாக்கினாறு! பின்னர், நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வசூல் வாழ்க்கை! இப்போதோ..பல நூறு கோடிக்கு அதிபதி! புடிச்சு போலீஸ் கட்டு கட்டினால் திநகர் , ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோட்டில் எத்தனை கட்டிடங்கள் பினாமியா இவர் கைல இருக்குன்னு தெரியவரும்! இவருக்கு நெருங்கினவங்க கட்டப் பஞ்சாயத்து, வட்டி வியாபாரத்தில் கொடிகட்டிப் பர்ந்ததை ஊரே பேசுது!
No comments:
Post a Comment