அரசியல் சாக்கடை என்றுஒதுங்கி கொள்வோர் ஏராளம். இதனால் தானே மேலும் மேலும் சாக்கடையாகி வருகிறது என்று சிந்திப்பவர்கள் ஒரு சிலரே. ஒவ்வேருவருக்கு ஒவ்வெரு பாதை இருக்கும், நேரமையான அரசியல் மூலம் வளமான தமிழகத்தை கட்டியமைக்க வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக சமூக வலை தளங்கள் மூலமாக அவற்றை வெளி காட்டி வருகிறார்கள்.
அரசியல் பற்றிய தெளிவு பெற வேண்டுமெனில் ஆழ்ந்து படிக்க வேண்டும். எல்லோரையும் படிக்க வேண்டும். எல்லா கொள்கைகளையும் படிக்க வேண்டும். மாறி மாறி வரும் அரசுகளால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. யாருக்கு யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று இலவசங்களை ஒரு புறம் அள்ளி கொடுக்கும் அரசு தான் வரிகள் மூலம் மக்களை வாட்டி வதைக்கிறது.
தமிழர்களின் இன உணர்வுகள் மங்கி போகும் அளவிற்கு ஆட்சியாளர்கள் அதிகாரத்தின் மூலம் அடக்குகிரார்கள் இதில் இரண்டு ஆட்சிகளுக்கு வேறு பாடு இல்லை.
மக்கள் உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பதிலும் சரி மக்கள் பிரச்சனைகளாக இருந்தாலும் சரி இரண்டு கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இந்த விசயங்களில் இவர்களே கூட்டணி அமைத்து கொள்கிறார்கள்.
பல ஆண்டுகளாக தமிழர்களின் உணர்வு பூர்வமான செயல்களில் அலட்சியம் காட்டிய அரசுகள் தான் இந்த அரசுகள். அதில் முக்கியமாக
ஈழ தமிழர் உரிமை மற்றும் இன படுகொலை ,
சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்ல படுவது
இதுவரை தீர்வு கிடைக்காத காவிரி ஆறு
தென் மாவட்டங்களை பாலைவனமாக்க நினைக்கும் கேரளா அரசின் முல்லை பெரியாறு அணை விவகாரம்.
பக்கத்து மாநிலங்களுடனான நதி நீர் பிரச்சனைகள்
தொலை நோக்கு பார்வையற்ற ஆட்சி நிர்வாகம்
மாணவர்களின் கல்வியோடு விளையாடும் அரசுகள்
சாய பட்டறைகள் மூலம் எதிர்கால சந்ததிகள் பாதிக்க படுவதை குறித்து அலட்சியம் கொள்வது.
சாய பட்டறை ஆலை நிர்வாகிகளுக்கு ஆதரவாக அரசு செயல் படுவது,
காற்றில் நச்சு தன்மையை பரவ விட்டு அதன் மூலம் மக்களின் வாழ்க்கையை அழிக்க இருக்கும் தூத்துக்குடி நச்சு ஆலை (ஸ்டெர்லைட் )
மது கடைகளை மேலும் விரிவாக்கி இளையோர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லுதல்
இன்னும் எண்ணற்ற விசயங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை அழிக்க கூடியதாக இருக்கிறது. திமுக , அதிமுக இரண்டு கட்சிகளும் பெரிய அரசியல் விரோதியாக காட்டி கொண்டாலும் இருவருக்குமே எண்ணங்கள் ஒன்றக தான் இருக்கிறது. காமராஜர் , அண்ணாவிற்கு பிறகு தொலை நோக்கு பார்வை கொண்ட அரசுகள் அமையாதது கூட தமிழகம் பின் தங்கியிருப்பதற்கான ஒரு காரணம்.
கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை லஞ்சமே பிரதானமாக காண படுகிறது.
இப்படி பல விசயங்களை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் தமிழகம் இருக்கிறது . புதிய சிந்தனைகள் மூலம் தான் இவற்றை மாற்றம் முடியும் . மாணவர்கள் இளைஞர்கள் நினைத்தால் மாற்றம் உருவாக்கலாம் . மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் .
நல்ல தொலை நோக்கு பார்வை கொண்ட நிர்வாகம் தான் தேவையே ஒழிய இலவசங்களை கொடுத்து ஏமாற்றும் நிர்வாகம் தேவையில்லை என்று மக்கள் மத்தியில் எண்ணங்களை உருவாக்க கூடிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
ஆளுகிறவர்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே மக்கள் நேர்மையாக இருப்பார்கள் என்பது முன்னோர்களின் வாக்கு. அப்படியென்றால் நேர்மையான்வர்களால் தமிழகம் ஆழ பட வேண்டும் . நேர்மையானவர்கள் அரசியலில் வர வேண்டும்.
ஆம் நேர்மையான் அரசியலை எதிர் நோக்கும் நடுநிலையாளர்கள் , இளைஞர்கள் , மாணவர்கள் , பல துறைகளை சார்ந்தவர்கள் அரசியலில் நேர்மையை கடை பிடித்து வரும் வைகோ அவர்களுடன் கலைந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
நேர்மையை விரும்புவோர் ஆக்கபூர்வ அரசியலை விரும்புவோர் கலந்து கொள்ள்ளலாம் . விபரங்களுக்கு படத்தை பாருங்கள் .
No comments:
Post a Comment