Wednesday, July 20, 2011

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹிலாரி கிளிண்டன் அழைப்பு

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று சென்னை வந்தார்.டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு அவர் சென்னை வந்தார்.  
 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹிலாரி கிளிண்டன் அழைப்பு
 
சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இன்று ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இலங்கை பிரச்சினை, தமிழ்நாட்டில் அமெரிக்க தொழில் முதலீடு பற்றி பேச்சு நடந்தது. இந்த சந்திப்பு சுமூகமாகவும், நல்லெண்ண அடிப்படையிலும், பரஸ்பர மரியாதையுடனும் இருந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற பல்வேறு கலந்து உரையாடல்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்று ஹிலாரி நம்பிக்கை தெரிவித்தார்.
 
மேலும், அவர் பேசும்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமெரிக்காவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது வருகை, தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாதனைகளை அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்று ஹிலாரி கிளிண்டன் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...