சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மீது பட வினியோகஸ்தர்கள் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதில் தீராத விளையாட்டுப்பிள்ளை பட வினியோகம் தொடர்பாக சேலம் செல்வராஜ், சண்முகவேல் ஆகியோர் கொடுத்திருந்த புகார்களை வாபஸ் பெற்றதால் மீதி 4 வழக்குகளில் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.

சக்சேனா மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனியாக ஒரு கம்பெனி நடத்தி அதில் லட்சக் கணக்கில் பணம் டெபாசிட் செய்திருந்ததும் தெரிய வந்துள்ளது. பாங்கியில் மனைவி, மகள் பெயரில் டெபாசிட் செய்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வங்கி கணக்கை முடக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சக்சேனா வேறு எந்த கம்பெனியிலும் பணம் முதலீடு செய்துள்ளாரா? அதன் விபரங்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment