Friday, January 29, 2016

பொது அறிவு கேள்வி பதில்கள்

சில பயனுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள்:
 1.  ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
 திரு. சரண்சிங்.

 2.  உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
 ஜூன் 5.

 3.  மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
 உதடு.

 4.  ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
 கிட்டத்தட்ட 2.5  ஏக்கர்.

 5.  வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
 அராக்கிஸ் ஹைபோஜியா.

 6.  பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
 விஷ்ணு சர்மா.

 7.  வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில்  பகலும், இரவும் சரியாக 
12  மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? 
மார்ச்சு 21.

 8.  மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
 22 .

 9.  ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது? 
நாக்கு.

10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது? 
மோகனாங்கி.

11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது? 
வெங்காயம்.

12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது? 
மூன்றாம் பிறை.

13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்? 
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.

14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது? 
அலகாபாத்.


விவேகானந்தரின் பொன் மொழிகள்



"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."

"பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"

"கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."

"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."

"அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."

"மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."

"சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."

"நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

"உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."



‘மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும் . . .

‘மோர் உடலுக்கு நல்லது. ஆனாலும், அதை ஓடி ஓடி விற்பனை செய்தாலும் வாங்க ஆள் இல்லை. கள் தீங்கு தரக் கூடியது. அதுவோ இருந்த இடத்தில் விற்றுப் போகிறது!’ –  கவிஞர் கபீர்.
எங்கே செல்லும் இந்த போதை என்று தடுமாறுபவர்களே இங்கே கொஞ்சம் இளைப்பாறிவிட்டு செல்லுங்கள்.
Self medication’ எனப்படும் சுயமாகத் தன் வேதனைகளுக்கு மருந்து தேடிக்கொள்வதன் மூலம்தான் போதைக்கு அடிமையாதல் நிகழ்கிறது என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட். அகராதிகளோ

ஆரோக்கியமான சுவையான மோர்
‘ஒரு விஷயத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுவதுதான் போதை’ என் கின்றன. சமூகத்தின் எந்தத் தளத்தைச் சேர்ந்த வராக இருந்தாலும், எந்தப் பிரிவினைச் சேர்ந்த வராக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு போதைக்கு ஆட்படத்தான் செய்கிறார்கள்.
இங்கு ‘போதை‘ என்பதை புகைமது என்ற பழக்கத்தில் மட்டும் அடக்க வேண்டாம். வீடியோ கேம்ஸ், செல்போன்இணையம், அதிகம் சாப்பி டும் பழக்கமான ‘ஓவர் ஈட்டிங்’, கட்டுப்பாடு இல்லாமல் செலவழிப்பது, வகை தொகை இல்லாமல் காணும் அனைத்து ஆண்கள் / பெண்களிடமும் ‘நட்பு‘ பாராட்டி உறவு வளர்க்க முனைவது எனப் போதை தரும் விஷயங்கள், பட்டியலிட முடியாத அளவுக்கு மகா மெகா நீளமானது. அவற்றில் தொலைந்துபோகாமல் இளம் தலைமுறையினர் தங்களைத் தாங்களே மீட்டுக்கொள்வது எப்படி? வழிகாட்டுகிறார்கள் இவர்கள்…
“போதைப் பழக்கம் என்றால், மது அருந்துவது மட்டும்தான் என்ற கருத்து தவறானது. பொருட்களுக்கு அடிமையாகும் ‘substance addiction’ மற்றும் இயல்பான பழக்கத்துக்கு எதிராகச் செயல்படும் பண்புகளுக்கு அடிமையாதல், அதாவது ‘Behaviour addiction’ என போதைக்கு அடிமையாவதையே இரண்டு வகையாகப் பிரிக்கலாம்!” என்று முதல் வரியிலேயே ஆச்சர்யப்படுத்துகிறார் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் மனநல மருத்துவரும், ஆய்வாளருமான டாக்டர் யாமினி கண்ணப்பன். “ஒயிட்னர் போன்ற சிந்தெட்டிக் ட்ரக்ஸ், கொக்கைன் போன்ற பார்ட்டி ட்ரக்ஸ், தூக்க மாத்திரைகள், இருமல் டானிக் போன்றமருந்துப் பொருட்கள் என கலாசார மாற்றங்களுக்கு ஏற்ப, போதையின் வடிவம் மாறி வருகிறது.
இந்தப் பொருட்கள் ஒருவிதத்தில் ‘பெர்ஃபாமன்ஸ் பூஸ்டர்’களாக இருந்து, ஒரு மயக்கத்தை அளிக்கும். மேலும், தேர்வு சமயங்களில் வெகுநேரம் விழித்து இருந்து படிப்பது, ஷிப்ட்களில் வேலை செய்வது போன்ற மன அழுத்தம் தரும் விஷயங்களுக்காக இதுபோன்ற வடி கால்களை நாடுகிறார்கள். சமீபத்தியக்கணக்கு எடுப்பு, 17 வயதில் இருந்தே இதுபோன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகத் தொடங்குகிறார்கள் என்கிறது. அதாவது, கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பே, போதை தரும் விஷயங்கள் அறிமுகமாகி விடுகின்றன.

மண்குடுவையில் மோர்
இன்று சுமார் 90 சதவிகித மக்களுக்கு செல்போன் இல்லாமல் ஒரு வேலையும் ஓடாது. திக்குத் தெரியாத காட்டில் விட்டதுபோல உணர்கிறார்கள். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பும்போது, சிக்னல் பிரச்னையால் அது டெலிவரி ஆகவில்லை என்றால், உலகமே இருண்டு விட்டது போன்ற ஒரு மயக்கத்துக்கு ஆளாகிறார்கள்.
எப்படி சூதாட்டத்தில் எவ்வளவு இழந்தாலும் ஒரு முறை வெற்றி பெற்றுவிட்டால், மீண்டும் மீண்டும் விளையாடுவார்களோ, அதுபோலவே செல்போனைக் கையில் எடுத்துவிட்டால், அதைத் தொடர்ந்து உபயோகித்துக்கொண்டே இருக்கிறார்கள். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க மறுக்கிறார்கள். இந்தக் கருவி என் வாழ்க்கையை நல்லதாக மாற்றி இருக்கிறது என்பதைவிட, என் வாழ்க்கைக்குப் போது மானதாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்!” என்கிறார் யாமினி.
“கவலை மறந்து, பொய்யான சந்தோஷத்தில் மிதக்கப் பல போதை விஷயங்கள் இருக்கின்றன. சந்தோஷம் நம் வாழ்க்கையின் ஓர் அம்சம். அதை நோக்கித்தான் நாம் உழைக்கிறோம். ஆனால், அதைச் சில மணி நேரங்களில் அனுபவித்து முடித்துவிடவே இன்றைய இளைய தலைமுறை விரும்புகிறது. அதற்கு ஒரு பாதை இந்த போதை!” என வாழ்வியல் உண்மையோடு போதையின் இன்னொரு பக்கம் சுட்டுகிறார் சென்னை, டி.டி.கே. போதை மறுவாழ்வு மையத்தின் மருத்துவச் சேவைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் அனிதா ராவ்.
இளைஞர்கள் மதுவைத் தேடி ஓடுகிறார்கள் என் றால், அதை வீதிக்கு வீதி சுலபமாகக் கிடைக்கும்படி நாம் செய்துவிட்டோம். ஐ.டி. இளைஞர்கள் பலர் மன அழுத்தம் குறைய போதையைத் தேடுகின்றனர் என்பது தவறான கருத்து. ஐ.டி. இளைஞர்கள் என்று இல்லை; தேவைக்கு மேல் அதிக பணம் வைத்திருப்பவர்கள் அனைவருமே ‘instant pleasure’ என்பதை எதிர் பார்க்கிறார்கள். 20 வயதில் பீர் மட்டும் சாப்பிட்டேன் என்பார். ஆறு மாதம் கழித்து, ஒரு பெக் விஸ்கி மட்டும் என்பார்.
அடுத்த மூன்று மாதங்களில் இரண்டு, மூன்று என ரவுண்ட்கள் அதிகரிக்கும். இறுதியில், மருத்துவர் துணைகொண்டு மீட்கும் அளவுக்குச் சென்றுவிடுவார். இளைஞர்களுக்கு இருக்கும் ஒரு தவறான சிந்தனை, ‘நாம நினைக்கிறபோது வேண்டாம்னு நிறுத்திடலாம்’ என்பது. ஆனால், துரதிருஷ்டவசமாக அப்படி நிறுத்த முடியாது.
மது என்பது அல்ல; வேறு எந்த வகையான போதைப் பழக்கங்களுக்கு அடிமையானாலும், மறுவாழ்வு மையச் சேவைகள் மூலம் மீட்டு எடுக்கலாம். டி-டாக்ஸிஃபிகேஷன், சைக்கோ தெரபி, ஃபாலோ-அப்… இந்த மூன்றினால் போதைக்கு அடிமையான ஒரு வரை விடுவிக்க முடியும். ஆனால், நம் நாட் டில் இறுதிக் கட்டமான ‘ஃபாலோ-அப்’பை மட்டும் பெரும்பான்மையான மக்கள் தொடர்வது இல்லை. அதிலும் இளைஞர்கள் சுத்தமாகத் தொடர்வது இல்லை. அதனாலேயே மீண்டும் அந்தப் பழக்கங்களில் விழுகிறார்கள்.
10 வருடங்களுக்கு முன்னால் போதைக்கு அடிமையான கணவன்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவார். இனிமேல் போதையில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அவருடைய மனைவிக்கு வகுப்புகள் எடுப்போம். இன்று அப்படி இல்லை. மகன் சிகிச்சைக்காக வருகிறான். அவன் தாய்க்கு நாங்கள் வகுப்புகள் எடுக்கிறோம்!” என வருத்தத்துடன் தன் கருத்துக்களைச் சொல்கிறார் அனிதா.
“எந்த ஒரு செயலுக்கு ஒருவர் முழுவதுமாகத் தன்னை அடிமையாக்கிக்கொள்கிறாரோ, அது எல்லாமே அவர்களுக்கு ஏற்படக்கூடிய போதைதான்!” என்று தொடங்குகிறார் மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பேராசிரியர், முனைவர் ஜான்சி சங்கர். “போதை மருந்துகளை எப்படிப் பயன்படுத்தணும், எங்கெங்கே, என்னவிதமான போதைப் பொருட்கள் கிடைக்கும் போன்ற விஷயங்களை சினிமாவிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கும் மாணவர்களுக்கு ‘நாமும் அதைச் செய்து பார்த்தால் என்ன?’ என்கிற அடிப்படை ஆசை மனதில் ஏற்படுகிறது.
இந்தப் பிரச்னைகள் மேலும் அதிகம் ஆகாமல் இருப்பதற்கு ஒரு வழி கவுன்சிலிங். இன்று, போதைப் பொருள் சம்பந்தமான விழிப்பு உணர்ச்சி மாணவர்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை என்பதுதான் உண்மை. அதனால் இப்போது எல்லாம் கல்லூரிகளிலேயே கவுன்சிலிங் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். போதை மருந்துத் தடுப்பு மையங்கள் ஏற்படுத்தி, அதில் மாணவர்களையே ஈடுபடுத்தி, அவர்கள் மூலமா கவே விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தினால்தான், இதை ஓரளவாவது தடுக்க முடியும்.
போதைப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே தவிர்க்க சுய கட்டுப்பாடு தேவை. யோகா, தியானம் போன்ற மனநலப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றுடன் நல்ல புத்தகங்கள், ஆரோக்கியமான நட்பு வட்டம்,பெற்றோர்களுடன் மனம்விட்டுப் பேசுதல் ஆகியவையும் இருந்தால், போதையின் பிடியில் இளைய சமுதாயம் எப்படிச் சிக்கும்?” என்று கேள்வியுடன் முடிக்கிறார் ஜான்சி.
‘யாருக்குத்தான் துன்பம் இல்லை இந்த உலகத்தில்? துன்பத்தைச் சந்திக்காத எவரும் இன்பத்தைச் சந்திக்கப் போவது இல்லை!’ என்ற கலீல் ஜிப்ரானின் வரிகளை நினைவில் வைத்திருங்கள் தோழர்களே. ‘அவன் செய்கிறான் அதனால் நானும் செய்கிறேன்!’ என்று வழி தவறாதீர்கள். முடிந்தால் அவரைத் திருத்துங்கள்.  நீங்களும் சகதியில் குதிக்க வேண்டாம்.

“எது உண்மையான தியானம்?” – வீரத்துறவி

ஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது, ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வரமாட் டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரிய மான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகி றேன்.
ஆனாலும் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. கண்களை மூடி தியானம் செய்ய அமர்ந்தால், மன ம் எங்கெல்லாமோ அலை பாய்கிறது. தாங்கள்தான் எனக் கொரு நல்வழி கா ட்டவேண்டும் என் றான்.
அவனுக்கு விவேகானந்தர் பதில் சொல்வ தற்கு முன் ஒரு சிறு கதையைக் கூறினார். ஒரு காட்டுப் பகுதியில் உள்ள ஒரு குகை யில், மூன்று ஞானிகள் நெடு நாட்களாக பசி, தாகம் மறந்து தியானத்தில் லயித்திருந் தனர். ஒரு நாள் அவர்களில் ஒருவர் வாய் திறந்து சற்று நேரத்துக்கு முன் ஒரு கறுப்புக் குதிரை ஓடிற்று என்று நினைக்கிறேன் என்றார். அதற்கு மற்ற இருவரிடமிருந்தும் எந்தப்பதிலும் இல் லை.
மேலும் ஆறு மாதங்கள் ஓடின. அப்போது இர ண்டாவது ஞானி, அது கறுப்பு நிறக்குதிரை யாக இருக்க வாய்ப்பில்லை, வெள்ளை குதி ரை என்று நினைக்கிறேன் என்றார். இவரின் வாதத்துக்கும் மற்ற இருவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
இன்னும் ஆறு மாதங்கள் கடந்தன. கொஞ் சம் சும்மா இருக்க மாட்டீங்களா? இப்படியே நீங்கள் வளவளவென்று பேசிக் கொண்டு இருந்தால் , நான் வேறு எங்காவது போய் என் தியான த்தை தொடர்கிறேன் என்று கோபப்பட்டார் மூன்றாவது ஞானி. இந்த மூன்று ஞானிகளும் கண்களை மூடி தியானிப்பதற்கு பதில் மனதை மூடி தியானி த்திருந்தால் இறைவனை அடைந்திருக்க முடியும். அதுவே உண்மையா ன தியானம்.
பிறகு விவேகானந்தர் இளைஞனின் கேள்வி க்கு பதில் கூறினார். மனஅமைதி பெற சிறந்த வழி சுயநல மற்ற பொதுசேவையில் ஈடுப டுவதுதான் என்கிறார். உன் வீட்டைசுற்றி வசிப்பவர்களின் ஏழைகள், ஆதரவற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு உன்னால் முடிந் த உதவிகளை செய். கவனிப்பி ன்றி கிடக்கும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்! பிறருக்கு செய்யும் சேவையில் தான் உண்மையானமன திருப்தி இருக்கிறது. மனதில் திருப்தி இருந்தால், அங்கே நிம்மதியும், அமைதியும் குடி கொ ள்ளும். இதை நீ உணராவிட்டால் உன்னா ல் நிச்சயம் தியானம் செய்ய முடியாது. உன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டு தான் இருக்கும் என்று இளைஞனுக்கு போதித் தார் விவேகானந்தர்.

ஆயுள் கூட ஆயிலை குறை


மனித குலத்தின் மிகப் பெரிய எதிரி எண்ணெய். இன்று பல நோய்களுக்கு மூல காரணம் எண்ணெய் கலந்தஉணவுகள் தான். எல்லா எண்ணெயும்கொழுப்பு தான். நெய்,வெண்ணெய், டால்டா, தேங்காய்எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்கள் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். சூரியகாந்தி போன்ற மற்ற எண்ணெய்கள் ஈரல் வழியாக சென்று, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். எனவே எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது. ஜீரோ கொலஸ்ட்ரால் என்பது தவறு. எல்லா எண்ணெயும் ஒன்று தான். ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., – 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் எப்படி கலோரியை அதிகப்படுத்துகிறது என்றால், 10 மி.லி., எண்ணெய் 90 கலோரி, ஒரு சாதா தோசை 80, ஒரு பூரி 260, வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்றவை 200 – 250, பிரியாணியில் 6,550, ஒரு பிளேட் பிரியாணியில் 1,600 கலோரிகள் உள்ளது. அதிக எண்ணெய் இரத்த குழாய்களில் படிவதால் ரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது.

அதிக எடை<, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுகின்றன. பாரம்பரிய எண்ணெய்களான நல்லெண்ணெய்<, கடலெண்ணெய் போன்றவற்றை 15–20 மி.லி., வரை பயன்படுத்தலாம். திரும்ப திரும்ப சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில், சமைக்கப்பட்ட பலகாரங்கள் கேன்சரை ஏற்படுத்தும். உணவில் எண்ணெய் காரணமாகவே கலோரி அதிகமாகிறது. அதிக கலோரி கொழுப்பாக மாறி வயிற்றில்

Oil
படிகிறது. இதுதான் தொந்தி, உடல் எடை கூடுவதற்கு முன் தொந்தி வரும். தொந்தியிலுள்ள கொழுப்பு கரைந்து கெட்ட கொழுப்பாக மாறுகிறது. அது ரத்தக் குழாயை அடைத்து மாரடைப்பு ஏற்படுத்துகிறது.
வளரும் குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. கலோரி சாப்பிட்டால் ஒரு கி. மீ., நடக்க வேண்டும். 500 கலோரி சாப்பிட்டால், 10 கி.மீ., நடக்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள் மற்றும் இனிப்புகளில் கலோரி அதிகம் (400 – 600). எனவே நடை, உடற்பயிற்சி இல்லாமல் அதிக கலோரி உணவுகளை உண்பது பிரச்னை. அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தக் குழாயும், ரத்தமும் பாதித்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. சைவ உணவு உண்பவர்கள் தேங்காய் பால், தயிர் அதிகம் பயன்படுத்தக் கூடாது.
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் கலோரிகள், இரண்டு சமோசா 256, இரண்டு போண்டா 283, மிக்ஷர் 100 கிராம் 520, பகோடா 100 கிராம் 474, இரண்டு வறுத்த மீன் 256, இரண்டு வடை 243, முறுக்கு 100 கிராம் 529, உருளை சிப்ஸ் 100 கிராம் 569, சில்லி சிக்கன் 100 கிராம் 589 கலோரிகள்.
நமது ரத்தத்தில் கொழுப்பு 200 மி.கி., கீழ், டி.ஜி.எல்., கொலஸ்ட்ரால் 150, எல்.டி.எல்., 100க்கு கீழ், எச்.டி.எல்.,(நல்ல கொலஸ்ட்ரால்) ஆண்களுக்கு 40, பெண்களுக்கு 50க்கு மேல், வி.எல்.டி.எல்., கொழுப்பு 30க்கு கீழ் மேலும் யாருக்கு கொலஸ்ட்ரால் இருக்குமென, உருவத்தை வைத்து கூற முடியாது. சாதாரணமாக பலர் வாகனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை கூட உடலுக்கு கொடுப்பது இல்லை. இதில் சர்க்கரை உள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியம். கோவை டயபடிஸ் பவுண்டேஷனில் வருடத்திற்கு ஒரு முறை பணம் செலுத்தி, ஒரு வருடம் சிகிச்சை பெற்று செலவை குறைக்கலாம். சி.டி.எப்.,ல் முழு உடல் பரிசோதனை, கண்காணிப்பு சிகிச்சை முகாம் இன்று முதல் 27ம் தேதி வரை நடைபெறும். உணவு முறை உடற்பயிற்சியை முதன்மைப்படுத்திய சிகிச்சை சி.டி.எப்., ரிசர்ட் மருத்துவ மனையில் செய்யப்படுகிறது. சர்க்கரையை நீக்க மூன்று முதல் ஐந்து நாள் அனுபவ பயிற்சி வழங்கப்படுகிறது.

அலர்ஜி ஏற்பட்டால் . . .

அலர்ஜி என்கிற ஒவ்வாமை பர வலாக காணப்படுகிறது. அவர் களுக்கு குறிப்பிட்ட சில பொரு ட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உ ணவு பொருட்களை அடையா ளம் கண்டு கொண்டு, அவற்றி ல் இருந்து ஓதுங்கியிருந்தால் அலர்ஜிபிரச்சினையே இல்லை . பொதுவாக அலர்ஜியை சில அறிகுறிகளை வைத்து அடை யாளம் காணலாம்.
உணவை வாயில் வைத்தவுடன் கூசுவதும், முகச்சுளிப்பு ஏற்படு வதும்கூட அலர்ஜியாக இருக்க லாம். மேலும், சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். குரல்வ ளையில்
ஒருவித மாற்றங்களை உணர லாம். வாந்தியும் ஏற்படும். அ தோடு, அடிவயிற்றுவலி வரலா ம்.
மூச்சுவிடுவதில் சிரமம், பெரு மூச்சு விடுதல், வயிற்றுப்போக் கு போன்ற பாதிப்புகள் ஏற்பட லாம். சிலருக்கு நினைவு இழப் பும் ஏற்படுவது உண்டு. சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆ ரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.
அலர்ஜி ஏற்பட்டால் குட ல், சுவாசம், தோல், ரத்த செல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய் தடுப்பு மண்டலமும் அலர்ஜியா ல் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு. பொதுவாக வேர்க்கடலை, பட்டாணிக்கட லை போன்ற பருப்பு வகைகள் தான் அதிக அலர்ஜியைத் ஏற்படுத்தக்கூடியவை. இவை இம்யு னோகுளோபின் என்ற ரசாயனத்தை ச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத் தைப் பாதிக்கச் செய்கிறது.
இதுதவிர, முட்டை, பால், வேர்க்கட லை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் பட்டியலில் உள்ளன. இவற்றி ல் வேர்க்கடலை, மீன், நத் தை, கொட்டை உணவு வ கைகளில் அலர்ஜி ஏற்பட் டால் அது வாழ் நாள் முழு வதும் நீடித்திருக் கும்.மற்ற உணவுகள் தற்காலிக மாக ஒவ்வாமையை ஏற்படுத்து ம் என்கிறார்கள் மருத்துவர் கள். சரி…
அலர்ஜி வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
அலர்ஜியை தடுக்க ஒரே வழி, அதை ஏற்படுத்தும் உணவுகளை உறுதியா கத் தவிர்த்து விடுவதுதான். வெளி யில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏ ற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேக வைக் காமல் மேல் புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
சாப்பிட்ட உடனேயே பழவகைகளை உண்ண வேண்டாம். மேலும், பாலிதீ ன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பை களில் உணவை பொட்டலத்தை கட் டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாய ன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

Thursday, January 28, 2016

வியர்வை துர்நாற்ற‍ம் நீங்க, நீங்க‌ உண்ண‍வேண்டிய உணவுகள்

வியர்வை துர்நாற்ற‍ம் நீங்க, நீங்க‌ உண்ண‍வேண்டிய உணவுகள்

வியர்வை துர்நாற்ற‍ம் நீங்க, நீங்க‌ உண்ண‍வேண்டிய உணவுகள்
என்ன‍தான் குளித்து விட்டு, வாசனை திரவியங்களையும் போட்டுக் கொ ண்டு வெளியில் சென்றாலும் சில மணித் துளிகளிலேயே மறைந்து போய் வியர்வை வந்துவிடுகிறது. இந்த வியர்வை
வந்தவுடன் கூடவே துர்நாற்ற‍மும் வந்து சேர்ந்து விடுகிற து. இந்த துர்நாற்ற‍த்தினால் நம் அருகில் யாரும் வராமல் தூர இருந்து கேலிக்கிண்டல் செய்வதால், மிகுந்த மன உளைச்ச‍ல் ஏற்பட்டு, அதுவே ஒருவித மன அழுதத்தை உண்டாக்கி விடுகிறது. இந்த வியர்வை துர்நாற்ற‍ம் வீச நாம் சாப்பிடும் உணவும் ஒரு காரணம் என்றால் உங் களால் நம்ப முடிகிறதா? இந்த வியர்வை துர்நாற்ற‍ம் வீசாதிருக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை இங்குபார்ப்போம்.
மக்னிஷியம் நிறைந்த உணவுகளான கீரைகள், நட்ஸ், விதைகள், மீன், பப்பாளி, பீட்ரூட், கடுகு, தர்பூசணி, வெள்ளரி, பட்டாணி, முந்திரி, தவிடு நீக்கப்படாத பிரவுன் அரிசி ஆகியவற்றை சாப்பிடவும். வைட்டமின் பி,சி உணவுகளை சாப்பிடுவது நல்லது.

வீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சம்


இன்றைக்குச் சொத்து வாங் குபவர்களில் பெரும்பாலா னோர், வீட்டுக்கடன் மூலமா கவே வாங்குகிறார்கள். வீட்டு க்கடனுக் குச் செல்லும்போது பல விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். இல்லை யெனில் சொந்த வீட்டில் சோ கமாக வசிக்கவேண்டிய கட் டாயம் ஏற்படும். வீட்டுக்கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய
10 முக்கிய அம்சம் .
1. மார்ஜின் மணி! 
தனி வீடோ அல்லது அடுக் குமாடிக் குடியிருப்போ, எ தை வாங்குவதாக இருந் தாலும் மொத்த தொகைக் கும் கடன் தர மாட்டார்கள். சுமார் 20% தொகையை வீ டு வாங்குபவர் தன் கையி ல் இருந்துதான் போடவே ண்டி இருக்கும். சிலர் இந்த மார்ஜின் தொகைக்கு பெர்சனல் லோன் வாங்குகிறார்கள். இதனால், வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ, பெர்சனல் லோன் இ எம் ஐ என அதிகத் தொகை சம்ப ளத்தி லிருந்து போகும். அந்த வகையி ல் பணச் சிக்கலில் மாட்டிக்கொ ள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
இதைத் தவிர்க்க இந்த மார்ஜின் தொகையை முன்னரே ஏற் பாடு செய்துகொள்ள வேண்டும் அல்ல து கடன் தொகையை க் குறைத்து சிறிய வீட்டை வாங்கலாம். ம னை வாங்கி வீடு கட்டினால் இப் போது சிறியவீடாகக் கட்டிக்கொண்டு, பிற்பாடு அந்தவீட்டை விரிவாக்கம் செய்யலாம். வீ ட்டுக்கடன் மாத தவணைகை க்குக் கிடைக்கும் சம்பளத்தி ல் 40% – 45%தைத் தாண்டாத வாறு இருத்தல் அவசியம்.
2. கடன் வாங்கும் வங்கி / நிறுவனம் தேர்வு! 
இன்றைக்குப் பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள், புதி ய தலைமுறை தனியா ர் வங்கிகள், தனியார் வீ ட்டு வசதி நிறுவனங்க ள், பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள் எ னப் பல வங்கிகள் வீட்டு க் கடன்வழங்குகிறது .  
அரசு சார்ந்த நிறுவனங்களில் கடன் வாங்க, நீங்கள் அவர்க ளைத் தேடி போகவேண்டி இருக்கும். தனியார் என்றா ல் உங்களின் வீடுதேடி வந் து கடனுக்கான எல்லா ஏற் பாடுகளையும் செய்து கொ டுத்து விடுவார்கள். பொது வாக, தனியார் வங்கிக ள் / தனியார் வீட்டு வசதி நிறு வனங்களை விடப் பொதுத் துறை வங்கிகள் / பொதுத் துறை வீட்டுவசதி நிறுவனங்களில் கடனுக்கான வட்டி சுமார் 1% குறைவாக இருக்கும்.
வீட்டுக் கடன் என்பது ஒரு மு றை செய்யப்படும் விஷயம் என்பதால் வங்கி அமைந்திரு க்கும் இடத்துக்கான தொ லைவை பார்க்க வேண்டிய தில்லை. வங்கி சேமிப்புக் க ணக்கு வைத்திருக்கும் வங்கிதான் நம் வீடு அல்லது அலுவ லகத்தின் அருகில் இருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு இது தேவை இல்லை.இ.சி.எஸ், முன்தேதியிட் ட காசோலைக ளைத் தருவதன்மூலம் தூரம் ஒரு சுமையாக இருக்காது. வச தி மற்றும் வட்டி விகிதத்தைக் கவனித்துத் தூ ரமாக இருக்கும் வங்கி / நிறுவனத்தையும் தேர்வு செய்து வீட்டுக் கடன் வாங் கலாம்.
3. வீட்டுக் கடனுக்கான ஒப்புதல்! 
வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளை யா அல்லது அதன் மத்திய ப ரிசீலனை மையமா (சென்ட்ர லைஸ்டு பிராசஸிங் சென்ட ர்) என்பதைக் கவனிப்பது முக் கியம். கிளை அலுவலகமே க டன் வழ ங்கிவிடும் என்றால் விரைவாகக் கடன் கிடைத்து விடும். வங் கிகளின் மத்திய பரிசீலனை மையத்தில் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பித்தவ ர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்தக் கூட்டத் தில் உங்களுக் குக் கடன் கிடை க்க அதிக நாள் ஆகக்கூடும். எ ன வே, வங்கிக் கிளைகளே கட னுக்கு ஒப்புதல் வழங்கும் விதமாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து கடன் வாங் குவது நல்லது.
 
4. கட்டணங்கள் முக்கியம் ! 
வீட்டுக்கடன் வாங்கும் போ து பரிசீலனைக் கட்டணம், ஆவ ணக் கட்டணம் என வங்கிகள்/வீட்டு வசதி நிறு வனங்கள் குறிப்பிட்ட சத விகிதக் கட்டணத்தை வசூ லிக்கும். இவை தவிர, பில்டிங் வேல்யூவேஷன், லீகல் ஒப்பீ னியன் எனத் தனியாகக் கட் டணம் வாங்கும் வங்கிகளு ம் இருக்கின்றன. சில வங்கி களில், முதலில் வாங்கப்படு ம் பரிசீலனைக் கட்டணத்தி லே இந்த வேலையும் அடங் கி விடும். அந்த வகையில், மொத்தமாகக் கட்டணங்கள் எல்லாவற்றையும் கூட்டி, எந்த வங்கியில் குறைவாக இருக் கிறதோ, அதில் கடன் வாங்கும் முயற்சியை மேற்கொள்ள லாம்.
5. கான்ட்ராக்டரின் தரம்! 
நீங்கள் வீடு வாங்கப்போகும் புர மோட்டர்/ பிளான்/ கான்ட்ராக்டரி ன் தரம் மற்றும் நம்பகத்தன்மை யை அறிந்து அதன்பிறகு தேர்வு செய்வது நல்லது. இல்லை எனில் சொன்ன நேரத்தில் உங்களுக்கு வீட்டை முடித்துச் சாவியைத் தருவதில் சிக்கல் ஏற்பட வாய் ப்புள்ளது. எனவே, நீங்கள் வீடு வாங்கப் போகும் புரமோட்டர் அல் லது உங்களுக்கு வீடு கட்டித் தரப் போகிற பில்டரை பற்றி நன்றாக விசாரித்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள்.
6. கடனுக்கான காசோலை!
மிக முக்கியமாகக் கவனிக்க வே ண்டியது, வீட்டுக் கடனுக்கான கடன் காசோலை யை புரமோட் டர்/பில்டர்/கான்ட்ராக்டருக்கு வ ங்கி அல்லது வீட்டுவசதி நிறுவ னம் தரும்போது உங்களு க்குத் தகவல் தெரிவித்து விட்டுதான் தர வேண்டும் என்பதை ஆரம்பத்தி லே தெரிவித்து விட வேண்டும். இல்லையெனில் பில்டரோ/ கான்ட்ராக்டரோ வீட்டு வேலை யைச் சரிவர முடிக்காமல் உங் களுக்குத் தெரியாமலேயே ப ணத்தை வாங்கிச் சென்று விடு வார். எனவே, ஜாக்கிரதை!
7. வட்டி விகிதம்! 
வீட்டுக் கடனை பொறுத்தவரை யில், நிலையான (ஃபிக்ஸட்)வட்டி, மாறுபடும் (ஃப்ளோட்) வட்டி என இருவிதமாக வட்டி விகிதம்  இருக்கின்றது. நிலை யான வட்டி என்பது முதலில் வரும் 3 – 5 வருடங் களுக்கு மட்டும்தான். அதன்பிறகு அப் போதுள்ள நிலையான வட்டி அ ல்லது ஃப்ளோட்டிங் வட்டியை த் தேர்வு செய்துகொள்ளலாம்.
ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பது கடன் சந்தை வட்டி விகி த மாற்றத்துக்கு ஏற்ப ஏறும்,இறங்கும்.  நிலையான மற்றும் மாறுப டும் வட்டி விகிதத்துக்கு இடையே சு மார் 1.52% வித்தியாசம் இருப்பதால் தற் போதைய சூழ்நிலையில் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது லா பகரமாக இருக்கும். பொதுவாக, கடனு க்கான வட்டி விகிதம் குறையும் சூழ்நி லை நிலவினால், ஃப்ளோ ட்டிங் வட்டியைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
மேலும், நீங்கள் மு ன்னணி நிறுவனத் தில் வேலை பார்ப்ப வராக இருந்தால், சிபில் ரேட்டிங்கில் அதிக ஸ்கோர்கள் இருந்தால் வட்டியி ல் பேரம் பேசி குறைக்க முடியும். வட்டியை கவனிக்கும் அ தே நேரத்தில், 1 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு இஎம்ஐ என்ப தையும் கவனியுங்கள். கடனுக்கான வட்டியை, கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறை, ஆண்டுக்கு ஒ ருமுறை வட்டி கணக்கிடும் முறை என இரண்டு முறை இ ருக்கின்றன. கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடு ம் முறையில் வட்டிக்குச் செல் லும் தொகை குறைவாக இருக் கும். அந்த வகையில் எந்த வங் கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் இஎம்ஐ குறைவாக இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்யுங்கள்.
 
8. கடனைத் திரும்பக் கட்டும் காலம்! 
வாங்கிய கடனை குறைந்த ஆண்டுகளில் 5-10 ஆண்டுக ளில் கட்டினால், மாத தவ ணை அதிகமாக இருக்கும். இ துவே அதிக ஆண்டுகளில் 15-20 ஆண்டுகளில் கட்டினால் மா த தவணை குறைவாக இருக்கும். அதேநேரத்தில், குறைந்த ஆண்டுகளில் கட்டினால் வட்டிக்குச்செல்லும் தொ கை குறைவாக இருக்கு ம். ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, வட்டிக்கு போகும் தொகை அதிக மாக இருக்கும். இவற் றை அலசி ஆராய் ந்து உங்களால் கட்டக்கூடிய தொகையை இஎம்ஐ-ஆகக்கேட்டுப் பெறுங்கள். பிற்பாடு சம் பளம் உயர்ந்தபிறகு அதிகத்   தொகையைக் கட்டுவதன் மூல ம் வட்டியை மிச்சப்படுத்தலாம்.
9.கடன்தொகை வழங்கும் நிலை..
 வீடு கட்டுவது என்றால் அஸ் திவாரம், பிளிந்த், நிலை, ரூப் எனப் பலவாறாகப் பிரித்து வீட் டைக் கட்ட கடன் தொகையை   வழங்கும். சில வங்கிகளில் வங்கி மேலாளர்களே வீட்டைப் பார்த்து கடன் தொகையைவழங்கிவிடுவார்கள். இது போன் ற நிலையில் வீட்டு வேலை தடைபடாது.சில வங்கிகளில் இன்ஜினீயர்க ள் வந்து பார்த்து சர்ட்டிஃ பிகேட் தந்தால் தான் அடுத் தநிலைக் கடனைத் தருவா ர்கள். அப்போது காலதா மதம் ஏற்படக்கூடும். இது போன்ற வங்கிகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த விஷயத்தை வங்கி மேலாளரிடம் ஆரம்பத்திலேயே கேட்டுத் தெளிவு படுத் திக்கொள்வது நல்லது.
10. மாரடோரியம் பீரியடு! 
வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டு வது எனில் கட்டுமானம் முடி ய எப்படியும் 18 மாதம் ஆகிவிடும். இந்தக் காலகட்டத்தில் மொத்த வீட்டுக் கடன், 3 அல்லது 4 பிரி வாகப் பிரித்து வழ ங்கப்பட்டிரு க்கும். இந்தக் காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி சேர்ந்திருக் கும். இதனை ‘ப்ரீ இஎம்ஐ’ என் பார்கள். இந்த வட்டியை மாதா மாதம் கட்டி வருவது நல்லது. இல் லையெனில் இந்த வட் டியையும் வீட்டுக் கடனாக மாற்றி விடுவார்கள். நீங்க ள் கூடுதல் இஎம்ஐ கட்ட வேண்டிவரும்”.
– பஞ்சாப் நேஷனல் வங்கி யின் முன்னாள் உதவிப் பொது மேலாளரும் வீட்டுக் கடன் ஆலோசகருமான ஆர் .கணேசன்.

பெரியவா சரணம் !!!


நான் ஒரு சந்நியாசி. என்கிட்டே என்ன இருக்கு? உனக்கு நான் என்ன தர முடியும்?
”விழுப்புரத்தில் சிறுவயதில் மகாபெரியவாளுடன் படித்த முஸ்லிம் நண்பர் ஒருவர், தன்னுடன் படித்தவரே இப்போதைய சங்கராச்சார்யார் என்று தெரிந்துகொண்டதும், அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தேனம்பாக்கம் வந்தார். ‘பெரியவா பாலாற்றங்கரையில் இருக்கிறார்’ என்றதும் நேராக ஓரிக்கை- பாலாற்றங்கரைக்கே வந்துவிட்டார். வெகுநேரம் பழங்கதைகளை எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரும். புறப்படும்போது அந்தமுஸ்லிம் நண்பர், ‘நீங்க இப்போ பெரிய மகான். ஜனங்கள் எல்லோரும் உங்களை வந்து பார்த்து வாழ்த்து வாங்கிட்டுப் போறாங்க. உங்களைப் பார்த்ததன் ஞாபகமாக எனக்கும் நீங்கள் ஏதாவது தர வேண்டும். அதை நான் பத்திரமா வெச்சுக்குவேன்’ என்றார்.
பெரியவா சிரிச்சுட்டார். ‘என்னைப் பார்த்தாய் அல்லவா? நான் ஒரு சந்நியாசி. என்கிட்டே என்ன இருக்கு? உனக்கு நான் என்ன தர முடியும்? இந்தக் காஷாய வஸ்திரம் ஒண்ணுதான் எங்கிட்டே இப்போ இருக்கு!’ என்றார். உடனே அந்த நண்பர், ‘சரி, அதில் ஒரு சிறு துண்டைத் தாருங்கள். போதும்’ என்றார். சட்டென்று தம்முடைய காவி வஸ்திரத்திலிருந்து ஒரு சின்ன துண்டைக் கிழித்து, தன் பால்யகால சிநேகிதனுக்குக் கொடுத்தார் மகாபெரியவா.
அதைப் பெற்றுக்கொண்டபோது… அந்த முஸ்லிம் நண்பர் அடைந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை கிடையாது!
உண்மைதானே!
---------------------------------
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்.

வேலைக்கான நேர்காணல் (இன்டர்வியூ)-ல் கேட்கப்படும் கேள்விகளும், பதில்சொல்லும் முறைகளும்



வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்க மா நம்மளோட Resume கொண்டு போவோ ம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பா ங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம் குறத பொறுத்து, நம்ம ளோட திறமை, மன உறுதி“னு பல விசயங்கள தீர்மானி ப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க் கமாவும் நம்மளோட பதில் இருக்கணு ம்னு அவங்க எதிர் பார்ப்பாங்க.
அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப் படும்னு அலசலாம் வாங்க..
1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்?
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப் பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல் வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணும். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல் லி போர் அடிச்சி டாதீங்க..)
2. உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்?
இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியா தோ ணலாம். ஆனா இது உங்க சுய விபரம் பற்றி அல்ல, உங் கள் குணநலன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர்னு சுருக்கமா சொல்ல ணும். (எதுக்கும், போற துக்கு முன்னாடி உங்க நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சு வச்சுக்கங்க..)
3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றி கூறுங்கள்?
அனுபவம்ங்குறது பெரும்பாலான நிறுவனங் கள்ல அவசியமானதா மாறிடுச்சு. இதைப்பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகிடுச்சு.(இஷ்டத்துக்கு அள்ளி விடக்கூடாது.. அதுக்கான சான்றிதழும் இருக் கணும்..)
4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?
தூங்குவேன், டிவி பாப்பேன்“னு கேனத்த னமா பதில் சொல்லாம, அவங்களை கவர்ற மாதிரியான, உறுப்படியான பொழுதுபோக் கு அம்சங்கள சொல்லனும். அதுக்காக நம க்குத் தெரியாத விசயங்களப் பத்தி பந்தாவா சொல்லிட்டு முழிக்க் கூ டாது. ஏன்னா கேள் விகள் அதப்பத்தியும் வரக்கூடும்.
5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகக் காரணம்?
“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க“னு ரொம்ப நேர்மையா பதில் சொல்லக்கூடாது. உங் கள ரொம்ப நல்லவர்னு நெனைக்கிற மாதிரியான காரணத்தை சொல் லணும்.
6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?
இது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இது க்குக் கொடுக்கும் பதில் அவங்களுக்கு உங்க மேல நல் ல அபிப்ராயத்தை ஏற்படுத்தணும். (அதுக்காக ஓவர் ஆக் டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)
7. என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம வாய திறக்காம இருக்குறதே நல்லது. ஏன்னா நாம குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயிச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்கலாம்.(பெர்ஃ பார் மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல் லிட்டு பம்மிடலாம்..)
8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?
இது உங்கள நீங்க எந்த அளவுக்குப் புரிஞ்சு வச் சிருக்கீங்கங்குறத காட்ட உதவும். அதுமட்டுமி ல்லாம, உங்களோட நடத்தையை எடை போட உதவும்.. ஜாக்கிரதை. (அதுக்காக தம் அடிக்கிற பழக்கம் பத்தி யெல்லாம் ஓப்பனா சொல்லப் படாது.)
9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக் கும்போது, அந்த நிறுவனம் பத்தியும், அந்த வேலை பத்தியும் தெளிவா தெரிஞ் சுவச் சுக்குறது அவசியமானது. (ஜஸ்ட்.. விளம்பரம் பாத்தேன், அப்ளை பண்ணேன், தட்ஸ் ஆல்“னு தெனாவெட்டா ப தில் சொல்லி ஆப்பு வாங் காதீங்க..)
10. பணிநிமித்தம் பயணம் செய்ய சம்மதிப்பீர்களா?
வேலை காரணமா, சில நாள் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலா ம். அதுக்கு நீங்க தயாரா இருக்கிங்களா னு முன்னாடியே தீர்மானிச்சு வச்சுக்கு றது அவசியம். (கூட வேலைபாக்குற பொண்ணை துணைக்கு அனுப் புவீங்க ளானு கேட் றாதீங்க…)
11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையை கையா ண்ட அனுபவம் உண்டா?
வேற நிறுவனத்துல வேலைபார்த்த அனுபவம் இருந்துச்சுனா, இந்தக் கேள் விக்கான பதில், நம்மளோட திறமையை யூகிக்கச் செய்யும்.(ஆபீசுக்கு லீவு போட் டுட்டு, பாட்டி செத்துப்போய்ட்டாங்கனு சமாளிச்ச அனுபவத்த சொல்லி வச்சு டாதீங்க..)
12. தனித்து செயல்பட விருப்பமா? அல்லது குழுவாக செயல்பட விருப் பமா?
இது அவங்கவங்க, தன்மேல வச்சிருக்குற நம்பிக் கையப் பொறுத்து பதிலளிக்கணும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சு டாதீங்க..)
13. இங்கு வேலை கிடைக்காதபட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என் னவாக இருக்கும்?
மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டுவேன் “னு சொல்லத் தோணும். ஆனா சொல்லிடா தீங்க.. இது உங்க விடா முயற்சி, நம்பிக்கை பத்தின கேள்வியா இருக்கும். இந்த பதிலை வச்சுக்கூட வே லை கிடைக்கலாம்.
14. எவ்வளவு காலம் இங்கே பணி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?
“ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளை பண்ணிருக்கே ன். கிடைச்சதும் ஓடிடு வேன்“னு அதிமேதாவித் தனமா பதில் சொல்லக்கூடாது. இதுக்கு குறி ப்பிட்ட கால வரையறை எதுவும் சொல்லா ம, கடைசிவரைக்கும் இருப்பேன்னு சொல்ல ணும். தொடர்ந்து வேலை செய்ய முன் வரும் பட்சத் துல வாய்ப்புகள் தரப்பட லாம்.
15. உங்களுக்கு, எங்களிடத்தில் கேட்கவேண்டிய கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா?
இது, நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதா வது சந்தேகங்கள் இருக்காங்குற நோக்கத்துல கேட்கப் படுது. திறம்பட கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள லாம். இந்தக் கேள்வியில இருந்தும் நம்ம ளோட, தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆராயப்படும்.(இங்க எத்தன பொண்ணுங்க வேலை பாக்குறா ங்க“னு கேட்டுறா தீங்க…)
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-**-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-**
நிறுவனங்களப் பொறுத்து, இன்னும் பல கேள்விகள் கேட்கப்படலாம். கேள் விகள் எதுவாகயிருந்தாலும் தைரியமா, தடுமாற்றமில்லாமல நாம கூறும் பதில்கள் ரொம்பவே அவசியம். நம்மகிட்டயிருந்து வெளிப்படும் பதில்கள், சம்பந்தப்பட்டவர்க்கு திரு ப்தியளிக்கும் பட்சத்துல, அதற்கான பலன் நிச்சயம் பாசிடிவ்வாக அமையும்.


வாழ்த்துக்கள்

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...