Monday, July 4, 2016

நாம் அனைவரும் தன்மீதான இறப்பு தழுவும் இறுதி நாள் வரை

பல ஆயிரம் பணத்தை கொடுத்து கல்வியை பெறுவதும் பணத்தால் கல்வியைபெற்று பணத்தை பெறுக்குவதும் தான் இன்றைய கல்வி முறையும் மனிதனின் இயந்திரவாழ்வும் உள்ளது
வயதான காலத்தில் தனக்குள் ஒழுகின்ற மூத்தரத்தை கூட கவலைபடாமல் மூத்திர வாளியுடன் தெரு தெருவாக தமிழக மக்களின் நலலுக்காக அலைந்த பெரியார் போன்றவர்கள் ஒருபோதும் இனி தமிழகத்தில் பிறக்க போவதில்லை
10 வேட்டி 10 சட்டையுடன் தனது பொதுவாழ்வை முடித்துகொண்ட காமராஜர் போன்ற ஒரு நல்ல முதல்வரை இனிமேலும் தமிழகத்தில் பிறக்கபோவதில்லை
தனது சொத்து முழுவதும் எழுதி வைத்துவிட்டு செத்துபோன ஓமந்துரார் போன்ற மிகசிறந்த மானுடன் இனியும் பிறக்க போவதில்லை தமிழகத்தில்
ஆனாலும்
இன்று எல்லாமே எதிர்மறை தீமையாகதான் நடக்கிறது என நாம் ஒதுங்கி நிற்க முடியாது
பணத்தை கையில் கொடுத்து மகிழ்வித்து வாக்கு வாங்கும் அதிமுக திமுக கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி அமைக்கின்றனர் இதற்கு முதலில் முடிவுகட்ட நம்தலைமுறையை சிந்திக்க செய்வோம்
மாற்றம் என்பதை நாம்தான் கொண்டுவரவேண்டும் நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த கடமையாக நீதி நேர்மை அன்பு நல்ல குணம் தமிழர் ஒற்றுமை பண்பாடு கலாச்சாரம் இவைகளை நாமும் நம் பிள்ளைகளுக்கு சொல்லிகொடுப்போம்
மதுவைக் குடித்து மயங்கிக் கிடக்கும் மனித மந்தையாக மாற்றி அரசியல் செய்யும் அதிமுக திமுக கட்சியை தழிழகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கவேண்டும்
பிறரின் வேதனை கண்டு வருத்தப்படுகின்ற சக மனிதர்கள் இல்லாமல் வாழ பழகிகொண்டுள்ள தமிழகத்தில் இதயத்தில் ஈரம் உள்ள பிள்ளைகளாக நாம் நம் தலைமுறைக்கு நல்லபழக்கங்களை நிறைய சொல்லி கொடுப்போம்
நீதி நேர்மை எதிலும் நடுநிலை என நம் தலைமுறையை சொல்லிகொடுத்து வாழ வைப்பதினால் நமக்கு யாரும் மாலை மரியாதை செய்து மாலையிடப் போகின்றவரும் இல்லை கூடவே ஏமாளி என பட்டம்தான் சூட்டுவார்கள் இருந்துவிட்டு போகட்டுமே நீதி நேர்மைக்கு ஏமாளி என்ற பட்டமும் நம் பிள்ளைகளுக்கு.
நாம் அனைவரும் தன்மீதான இறப்பு தழுவும் இறுதி நாள் வரை
தமிழ்மொழி
தமிழர் வீரம்
தமிழின பற்று
பண்பாடு
காலாச்சாரம்
நீதி போதனை
உண்மை
அர்ப்பணிப்பு
விட்டுகொடுதல்
வாழ்வியல் புரிதல்
மன்னிப்பு
இவைகளை நம்பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கு சாெல்லிகொடுத்து நல்ல பழக்கங்களை நெஞ்சில் நிறுத்தி நேசிப்பதற்கு நாம் வழிகாட்டலாக இருப்போம்
இலவசங்களை அறிவித்து வேலைக்கு போகாத மடத்தில் அமரவைத்து பல இளம் தலைமுறைகளை வாழ வைக்க படிப்பி்ற்கு ஏற்ற வேலை கொடுக்க வக்கற்ற அயோக்கிதனமான அரசியல் போக்குதான் தமிழகத்தில் நடக்கிறது, இதை மாற்ற நிறைய நல்ல பல சிந்தனைகளை நம் பிள்ளைகளிடம் புகுட்டுங்கள் உழைப்பின் மகத்துவத்தை வியர்வையின் மதிப்பை
கல்லை கையில் வெட்டிஎடுப்பதைபோலவும்
வறண்ட பாலைவனத்தில்காணல் நீரில் தண்ணீர் பருக நினைப்பதைபோல மேற்கண்ட செய்திகள் மிக சிரமமாக இருந்தாலும் நாம்நம் பிள்ளைகளுக்கு சொல்லிகொடுப்பது காலத்தின் கட்டாயம் நம் தலைமுறையை நலமாக வாழ வைக்க

No comments:

Post a Comment