Sunday, March 31, 2019

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பத்துக் கட்டளைகள். *****

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி ஏதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்னி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.
6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.
குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.
8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). ஏதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.
இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.
*Be Happy !*
*Keep Smiling!*

உண்மை பேசி கடைசிவரை சொத்து சேர்க்காமல் சென்ற அவன் உத்தமனே.

சோ ராமசாமி சமூக விரோதி, சமூக நீதிக்கு ஆபத்தானவர் அயோக்கியர் என ஒரு கும்பல் சொல்கின்றது
சரி, அந்த மனிதன் கடைசிவரை உன்மையினை சொன்னான், அது திராவிட மோசடியோ ஈழ மோசடியோ கடைசி வரை உண்மையினை சொன்னான்
ஈழதமிழருக்கு துரோகம் செய்கின்றீர்கள் என ஜெயவர்த்தனேவிடம் வாதாடிய அவனேதான், ஈழபுலிகளின் அதிதீவிரவாதத்தையும் கண்டித்தான்
காங்கிரசின் பல தவறுகளை கண்டித்த அவன், பாஜகவின் மறுபக்கத்தையும் சாட தயங்கவில்லை
ஒரு விஷயம் கவனியுங்கள்
எவ்வளவோ எழுதியவன் பேசியவன் அவன் ஆனால் சொத்து என அந்த வீட்டை தவிர ஏதுமில்லை, கோடி கோடியாய் அவன் குவிக்கவில்லை
அவன் தேசியமும் தெய்வீகம் பேசினான் ஏழையாக வாழ்ந்தான்
ஆனால் பகுத்தறிவும் கடவுள் மறுப்பும் பேசிய பகுத்தறிவாளர்கள் குவித்த சொத்தின் மதிப்பென்ன?
பெரியார் விட்டுசென்ற சில கோடிகள் இன்று பல்லாயிரம் கோடிகளாக வளர்ந்திருப்பது எப்படி?
பகுத்தறிவு பேசியவர்கள் அவர்கள் வாரிசு எல்லாம் இன்று கோடிகளில் புரள்வது எப்படி?
சோ ராமசாமி அப்படி 16 தலைமுறைக்கு சேர்த்தானா? இல்லை தேசியமும் தெய்வீகமும் பேசிவிட்டு சேர்க்கத்தான் முடியுமா?
அவன் குடும்ப சொத்தையும் பகுத்தறிவு திராவிட சிங்கங்களின் சொத்து மதிப்பினை ஒப்பிட்டு பார்க்க முடியுமா???
மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்...
ஆம் அவன் உண்மையாக வாழ்ந்திருக்கின்றான்
போலி திராவிடமும் பகுத்தறிவும் பேசி பல்லாயிரம் கோடி சுருட்டியவர்களை விட உண்மை பேசி கடைசிவரை சொத்து சேர்க்காமல் சென்ற அவன் உத்தமனே.

இது போதாது இன்னும் 50 சீட்களாவது வேணும். கைக்கு இதுவே அதிகம்

இன்னும் கொஞ்சம் இறங்கி அடிச்சா 350 வந்திடாதா?.... TRSம் ஜெகன்மோகன் வேற இருக்காங்க... இன்னுமா டவுட்டு... போடுறா வெடிய... காங்கீஸ்க்கு ஆப்பு கன்பார்ம்....


ஒரு ஆணியுமே புடுங்கலை.....

இன்று வரை ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் கனிமொழி
2007 to 2013 - 6 வருடங்கள்
2013 to 2019 - 6 வருடங்கள்
12 வருடங்கள் MP ஆக இருந்து, தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் செய்த நல்திட்டங்கள் என்ன?
வருசத்துக்கு ஒண்ணுன்னு 12 சொல்லட்டும் நான் திமுகவுக்கே ஒட்டு போடுறேன்.

Image may contain: 6 people, people sitting

மூளைக்கு வேலை....

இரு கைகளையும் சேர்த்து குவித்து வணக்கம் செலுத்துவதும் வழிபடுவதும் தமிழர்களின் பாரம்பரியம்.இதில் அறிவியல் இருக்கிறது.இப்படி செய்வதால் நம் மூளையின் வலது இடது பாகம் இணைந்து செயல்படுகிறது. இதனால் நம் சிந்திக்கும் ஆற்றலும் நினைவாற்றலும் அதிகரிக்கிறது.குழந்தைகளை தினசரி சாமி கும்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்லும்படி அறிவிறுத்துவது அவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்க செய்யும்.

உடலை பொறுத்தவரை வலது கைக்கு கொடுக்கும் வேலையை இடதுகைக்கு கொடுத்து பழுகுவது வலது பக்க மூளையை விழிப்புடன் இருக்கசெய்யும்.
மூளை திறனுக்கு கீழே உள்ள பயிற்சியை செய்து பாருங்கள்
ஒன்
இரண்டு
த்ரீ
நான்கு
ஃபைவ்
ஆறு
இப்படி மாத்தி மாத்தி உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொல்லுங்கள். தினம் ஒருதடவை முக்கியமாக காலையில் இந்த பயிற்சியை செய்யுங்கள். இந்த பயிற்சி வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் செய்யலாம்...கவனகுறைவு,அலட்சியம் நீங்கும்.

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌?

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌?

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌?
உண்மையில், பெண்கள் தங்கத்தில் கொலுசு செய்து அணிந்து
கொள்ளக் கூடாது என்றே சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.  ஜோதிட நூல்களும் இதையே வலியுறுத்துகின்றன. நம், உடலின் உறுப்புக்களை நவக்கிரக ரீதியாக இணைத்துப் பார்க்கச் சொல்லி வலியுறுத்துகிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது நவக் கிரகங்களில் ஒன்றான சூரியனை, நம் கண்ணுக்கு இணையாகச் சொல்கிறார் கள். சந்திரன் மூச்சு விடக்கூடிய மூக்குப்பகுதி என்கிறார்கள். முகமும் முகத்தில் வாய் என்ற பாகமும் இருப்பதால், செவ்வாய்க் கிரகத்தை இணையாகச் சொல்கிறார்கள்.
நம் உடலின் நரம்புகள் புதன் கிரகம். வயிறு சம்பந்தப்பட்ட பாகங்களை குருவாகச் சொல்லுகிறார்கள். இடுப்பிலிருந்து தொடை வரை இருக்கக்கூடிய பாகங்களை சுக்கிரனுக்கான இடம் என்கிறார்கள். தொடையிலிருந்து காலின் பாதப் பகுதி வரை சனி கிரகத்துக்குரிய இடம் என்று சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆக நம்முடைய பாதம் என்பது சனியின் அம்சம். ஆகவே, குருவின் ஆதிக்கம் நிறைந்த தங்கத்தை, மகாலக்ஷ்மியின் அம்சமான தங்கத்தை, இடுப்புக்கு கீழே அணிவதைத் தவிர்க்க சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது பெண்கள், தங்கத்தில் கொலுசு செய்து காலில் அணியக் கூடாது.

அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டிய அற்புத மருத்துவக் குறிப்புகள்.:


ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். குளிர் நேரமென்றால் கறுப்பு நிற உடை சிறந்தது.
கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள், இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அண்ணா திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் முடிந்து பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தத் தேர்தலில் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிடவில்லை. இதனால் அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரியாமலே இருந்தது. இதற்கிடையே அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து அதன் பொதுச் செயலாளர் திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ``தமிழகத்தில் வரும் 18-ம் தேதி 17வது மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் மக்களவைத் தேர்தல் என்பதால் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதை உலகமே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் நமது கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்துத் தொண்டர்கள் அறிய ஆவலாக உள்ளார்கள் என்ற செய்தியை அறிந்தேன். ஜெயலலிதா மனதில் சுமந்திருந்த பிள்ளைகளாகிய தொண்டர்களை ஒருங்கிணைத்து இந்தக் கழகத்தை உருவாக்கியுள்ளோம்.
ஜெயலலிதா என்ற விஸ்வரூபினி எம்.ஜி.ஆர், அண்ணா கொள்கைகளுக்கு உயிர்கொடுத்துக் காப்பாற்றினார். அவரின் தன்மானம் மிகுந்த அரசியல் ஆளுமையைச் சிலர் தேர்தல் சந்தையில் ஏலம் போடுகிறார்கள். தாங்கள் செய்த குற்றங்களை மறைக்க ஜெயலலிதாவின் தன்மானத்தையே அடகு வைத்துவிட்டார்கள். தமிழக மக்கள் ஒருபோதும் ஊழல் சக்திக்கு ஆதரவு தரமாட்டார்கள். தேர்தலில் சீட்டுகளைப் பெற பிச்சைக்காரனைப்போல அலைகின்ற கூட்டத்தில் நாமும் சேர வேண்டுமா எனச் சிந்தித்துப் பார்த்து எடுத்த முடிவுதான் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பது. கட்சி தொடங்கி ஆறு மாதங்கள்தான் ஆகிறது. அதனால் 40 தொகுதிகளுக்கு மட்டும் நடைபெறப்போகிற இந்தத் தேர்தலில் இடிபடாமல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஆயிரக்கணக்கான பதவிகளை பெற நம்முடைய முதற்களம் அமையட்டும்.
அதற்குள் கட்சியின் கட்டமைப்பு, கிளைக் கழகம் வாரியாக அமைத்திட வேண்டும் என்பதே நிலைப்பாடு. இந்தத் தேர்தலில் நல்லவர்களுக்குப் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே பிரசாரம் செய்து நமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்’’ என தெரிவித்துள்ளார்.

Image may contain: 1 person, closeup

மூன்று தொகுதிகளுக்கான தேர்தல்: நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று.

தமிழகத்தில், 18சட்டசபை தொகுதிகளுடன், விடுபட்ட மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து, தேர்தல் நடத்தி விட வேண்டும் என்பதில், தி.மு.க., பகீரத முயற்சிகளை எடுத்தது. ஆனால், அது எடுபடாமல் போனது. இருந்தாலும், தேர்தலுக்கான உத்தரவாதத்தை, ஆணையத்திடம் பெற்றது, தி.மு.க.,வுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
 மூன்று,தொகுதிகளுக்கான,தேர்தல்,நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று
தமிழகத்தில், 39லோக்சபா தொகுதிகளுடன், எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தால், காலியான, 18 தொகுதிகளுக்கும் சேர்த்து, ஏப்., 18ல், தேர்தல் நடக்க உள்ளது. 
ஆதரவு

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தலை நிறுத்தி வைப்பதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இந்த மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து, தேர்தலை நடத்தவும், வழக்கு நிலுவையில் இருப்பதால், தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை எனவும் கூறி, தலைமை தேர்தல் ஆணையத்தை, தி.மு.க., அணுகியது. 

கூட்டணி கட்சிகள், தி.மு.க.,வுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும், தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டியது, தி.மு.க., தான்.அதோடு விடவில்லை; உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு  தொடுத்தது. இந்த வழக்கில், டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், காங்., முன்னாள், எம்.பி.,யு மான, அபிஷேக் மனு சிங்வி ஆஜராவதற் கான ஏற்பாடுகளும் நடந்தன. அவரே, உச்ச நீதிமன்றத் தில் வாதாடினார். தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனு தாக்கல்




டில்லியில் காய்களை நகர்த்திய, தி.மு.க., சென்னையிலும் நகர்த்தியது. திருப்பரங்குன்றம் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடுத்தவர், தி.மு.க., வேட்பாளரான, டாக்டர் சரவணன். இவர், வழக்கை வாபஸ் பெற்றால், தேர்தலுக்கு தடை இருக்காது எனக் கருதி, அதற்கான மனுவை தாக்கல் செய்யும்படி, தலைமை அறிவுறுத்தியது. அதன்படி, மனுவும் தாக்கல் ஆனது.ஆனால், வழக்கை வாபஸ் வாங்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. 

தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டிருந்த அந்த வழக்கில், நீதிபதி உத்தரவு பிறப்பித்து விட்டதால், முடிவுக்கு வந்து விட்டது. ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கையும் வாபஸ் பெறுவதாக, தேர்தல் தேதி அறிவிக்கும் முன், டாக்டர் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்து விட்டார்.இப்படி, இரண்டு தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகளும் முடிவுக்கு வந்து விட்டதால், அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் தடங்கல் இருந்தது.
உத்தரவாதம்


உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகளிடம், மூன்று தொகுதிகளின் நிலை பற்றி தெரிவிக்கப்பட்டது. இருந்தும், ஆணையம் சார்பில், சட்டப்படி, உரிய அவகாசத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என, உத்தரவாதம் அளித்ததால், வழக்கை, நீதிபதிகள் முடித்து வைத்தனர். ஏப்., 18ல் இல்லை என்றாலும், ஓட்டு எண்ணும், மே,23க்கு முன், மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை யும் நடத்தி விட வேண்டும் என, தி.மு.க., கணக்கு போட்டது.

தேர்தல் ஆணையமோ, குறிப்பிட்டு தேதி எதையும் தெரிவிக்காமல் விட்டதால், மே, ௨௩க்குள், தேர்தலுக்கான சாத்தியம் இல்லை. அதேநேரம், தேர்தல் ஆணையத்திடம் உத்தர வாதம் பெற்றது, தி.மு.க.,வுக்கு ஆறுதலான விஷயம்.
அறிவிப்பு


தேர்தல் முடிவுகள் வெளியான பின், மூன்று தொகுதிகளுடன், காலியாக உள்ள கோவை மாவட்டம், சூலுார் தொகுதிக்கும் சேர்த்து, தேர்தல் தேதி அறிவிப்பு வரும். நான்கு தொகுதி இடைத்தேர்தலில், இதே ஆர்வம், முனைப்பை, தி.மு.க., காட்டுமா என்பது, மே, ௨௩ அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளுக்கு பின் தெரியும்.

இப்போ சொல்லுங்க நடுநிலை இந்துக்களே யாருக்கு மதவெறி என்று ????


Image may contain: 1 person, sitting and text

Saturday, March 30, 2019

கோடைகால சரும நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள 10 டிப்ஸ்.



கோடைவெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அதற்காக நாம் வீட்டிலேயே முடங்கிவிடமுடியாது. அன்றாடம் செய்யும் அலுவல்களைச் செய்துதானே ஆகவேண்டும். வேலையும் செய்ய வேண்டும் வெயிலில் இருந்தும் தப்பிக்க வேண்டும். அதற்காகத்தான் உங்களுக்காக சில டிப்ஸ்களை சரும நோய் நிபுணர் சிறப்பு மருத்துவர் மரு.குரு.இளங்கோவனிடம் கேட்டுத் தொகுத்துள்ளோம்.
1. வெயில் காலத்தில் ஏற்படும் மிகச் சாதாரணமான சரும நோய் வியர்க்குரு. உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால்,சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். வியர்வை அதிகமாக சுரந்து வெளியேறமுடியாமல் தடைபடும்போது வியர்க்குரு ஏற்படுகிறது.
2. வியர்க்குருவைத் தடுக்க இரண்டுமுறை குளிப்பது நல்லது. கிருமி நாசினி கொண்ட சோப்பைப் பயன்படுத்தலாம்.
3. வியர்க்குருவைக் கட்டுப்படுத்த அதற்காக கடைகளில் விற்கும் பவுடர்களைப் பூசுவதைத் தவிர்ப்பதே நலம். அதற்குப் பதிலாக கேலமின் என்ற லோஷனைத் தேய்த்துக்கொள்ளலாம்.
4. பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. சின்தடிக் ரக உடைகளைத் தவிர்க்க வேண்டும். இறுக்கமான உடைகளையும் தவிர்த்தல் வேண்டும்.
5. தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்க்குருகூட தொற்றாக மாறக்கூடும் என்பதால் அத்தகையோர் வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம்.
6. சருமத்தின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேறாவிட்டால் வேனல்கட்டிகள் ஏற்படும். வேனல்கட்டிகள் ஏற்பட்டால் எரித்ரோமைசின் போன்ற ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி உட்கொள்ளவும்.
7. உணவைப் பொருத்தவரை அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், மோர், பழவகைகள் சாப்பிடுதல் நல்லது. எண்ணெயில் வறுத்த பொருட்களைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். அதிகமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.
8. சிலருக்கு வியர்வை காரணமாக இடுப்பு, தொடைப் பகுதிகளில் ரிங் வார்ம் எனப்படும் படை நோய் ஏற்படலாம். சரும மடிப்புகளிலும் உடல் மறைவிடங்களிலும் காற்றுப் புகாத உடல் பகுதிகளிலும் அக்குள், தொடையிடுக்கு போன்ற உராய்வுள்ள பகுதிகளிலும் டிரைக்கோபைட்டன், எபிடெர்மோபைட்டன் போன்ற காளான் கிருமிகள் தாக்கும்போது படர்தாமரை ஏற்படும். அவர்கள் நிச்சயமாக மருத்துவரை அணுகியே அவர்களுடைய தோலின் தன்மைக்கு ஏற்ப மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
9. சிலருக்கு வெயிலில் சென்றாலே முகம் கருத்துவிடும். அத்தகையோர் சன் ஸ்க்ரீன் லோஷன்களைப் பூசிக் கொண்டு வெளியே செல்வது நலம்.
10. ஏ.சி. பயன்படுத்துவோர் சீரான குளிர்நிலையை செட் செய்து பயன்படுத்தவும்.

முதுகு வலி இல்லாமல் போகும் பாலுடன் இதை சேர்த்து குடித்தால்.:


நம்மில் பலருக்கும் கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலி இருக்கும். இப்பிரச்சனை உள்ளவர்களால் எந்த ஒரு கனமான பொருளையும் தூக்க முடியாது.
மேலும் அவர்களால் நீண்ட நேரம் நிற்கவோ, உட்காரவோ கூட முடியாது. சிலருக்கு முதுகு, இடுப்பு, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி இருக்கும். இந்த வகையான முதுகு வலி இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள பிரச்சனையால் வருவதாகும்.
Image may contain: one or more people
இப்படி வரும் முதுகு அல்லது இடுப்பு வலியை நிரந்தரமாக விரட்ட இந்த இயற்கை பானத்தைக் குடித்தால் போதும்.
இந்த அற்புதமான இயற்க்கை பானத்தை செய்வது எப்படி என்று பார்ப்போம்;
தேவையான பொருட்கள்.:
பால் – 200 மிலி,
பூண்டு – 4 பற்கள்
தயாரிக்கும் முறை.:
முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் அதில் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, மிதமான தீயில் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்க வேண்டும்.
குடிக்கும் முறை.:
இந்த பாலை தினமும் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால், இடுப்பு அல்லது முதுகு வலி சற்று குறைந்திருப்பதை உணர்வீர்கள். வலி முழுமையாக போய்விட்டால், இந்த பாலைக் குடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.
பூண்டின் நன்மைகள்.:
இந்த பானம் இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும். மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் உள்ளது.
குறிப்பு: விருப்பமுள்ளவர்கள், இந்த பானத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
இந்த பானத்தை குடிப்பதோடு, இடுப்புமூட்டுக்குரிய நரம்பு வலியைக் குறைக்க உதவும் உடற்பயிற்சியையும் செய்து வந்தால், இன்னும் விரைவில் நல்ல பலன்கிடைக்கும்.

ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் – தெரிந்து கொள்ளுங்கள்.

ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் – தெரிந்து கொள்ளுங்கள்

ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் – தெரிந்து கொள்ளுங்கள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர், என்னிடம் கேட்ட
கேள்வி இது. 
இக்காலத்தில் தடுக்கி விழுந்தால் துரித உணவகமும், எட்டிப் பார்த்தால் உணவக மும் இருப்ப‍துபோல், அக்காலத்தில் எல்லாம் கிடையாது. பெரிய கோவில்களில், அங்குவரும் பக்தர்களின் பசியாற்றுவதற்கு அன்ன‍தானம் வழங்குவார்கள். ஆனால் அன்ன‍தானம் வழங்கப்படாத‌ சிறுசிறு கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பசி எடுத்தால், ஒண்ணு வீட்டிற்கு திரும்பி சென்று சாப்பிட வேண்டும் அல்ல‍து, பிரதான சாலைகளுக்கு வந்து அங்கு தேடி அலைந்து, உணவு நன்றாக இருக்கிறதோ இல்லையோ சாப்பாடு கிடைத்தால் போதும் என்று சாப்பிட வேண்டும்.
அதனால்தான், நமது பெரியவர்கள், சிறு கோயில்களுக்கு செல்லும்போது, அந்த வீட்டு பெண்கள் வெண்பொங்கல் வைக்க‍ தேவையான அனைத்து பொருட்களையு ம் கையோடு கொண்டு செல்வார்கள். கோயிலுக்கு சென்றபிறகு அங்கு கிடைக்கும் செங்கற்களை கொண்டு அடுப்பு போன்ற வடிவத்தில், அடுக்கி, வறட்டிகளை அல்ல‍து சுள்ளிகளை எடுத்து செங்கல் அடுப்பிற்குள் வைத்து, மண்ணெண்ணெய் சிறிது ஊற்றி, தீக்குச்சி கொண்டு நெருப்பு மூட்டுவார்கள். அதன்பிறகு அதன்மீது பானையை வைத்து, தண்ணீர் ஊற்றி, வெண்பொங்கல் சமைப்பார்கள்.
நீண்டதூரம் பயணித்து சிறு கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பசியெடுக்கும். வயிற்றில் பசி இருக்கும்போது, மன அமைதியுடன் கடவுளை வழிபடுவது என்பது சற்றே கடினமான ஒன்று. அந்த பசியாற சுடச்சுட பொங்கல் தயார். அந்த வெண் பொங்கலை அவர்களும் வயிறாற சாப்பிட்டு, அங்கு வரும் பிற பக்தர்களுக்கும் அன்போடு கொடுத்து அவர்களின் பசியையும் ஆற்றிய‌, அதன்பிறகு கோயிலுக்குள் சென்று கடவுளை மன அமைதியுடன் வழிபாடுவார்கள்.
ஆக கோயில்களில் வெண்பொங்கல் வைப்ப‍து இதற்காகத்தான். நமது முன்னோர்க ள் எதையும் ஏன் எதற்காக செய்கிறோம் என்ற காரணத்தை சொல்லாமல் விட்டு விட்டார்கள். நாமும் அதனை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு அதனை பின்பற் றி வருகிறோம். இதோ பாருங்கள் மேற்கூறிய காரணங்களால்தான் கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடும் வழக்க‍ம் வந்தது. ஆனால், தடுக்கி விழுந்தால் துரித உணவகம், எட்டிப் பார்த்தால் உணவகம் என்று பெருகிவிட்ட‍ இன்றைய காலக் கட்ட‍த்தில்கூட கோயில்களில் வெண்பொங்கல் வைக்கும் ப‌ழக்க‍த்தை நாம் பின்பற்றி வருகிறோம்.
இங்கு நீங்கள் ஒன்று கேட்கலாம், ஏன் வெண்பொங்கல் மட்டும் சமைக்கிறார்கள். வெவ்வேறு வகையான உணவுகளை சமைக்க‍லாமே. என்று…
சமைக்கும் உணவுகளில் வெண்பொங்கல் வைப்ப‍து மிக எளிமையானது விரைவா க சமைக்க‍க் கூடியது, மேலும் பொங்கல் சமைக்க, குறைவான பொருட்களே தேவைப்படும். ஆகவே தான் கோயில்களில் பொங்கல் வைக்கிறார்கள்.

கண்ணாடி வளையல்களில் உள்ள‍ ஆன்மீக‌ அதிசயங்களும் அறிவியல் அற்புதங்களும்.

கண்ணாடி வளையல்களில் உள்ள‍ ஆன்மீக‌ அதிசயங்களும் அறிவியல் அற்புதங்களும்

கண்ணாடி வளையல்களில் உள்ள‍ ஆன்மீக‌ அதிசயங்களும் அறிவியல் அற்புதங்களும்
பொதுவாக கண்ணாடி வளையல்கள் என்பது இந்த காலத்து பெண்களிடம்
பேஷன் இல்லை என்றே கருதப்படுகிறது. இந்த கண்ணாடி வளையல்கள், மூதாட்டி கள் மட்டுமே உபயோகிக்கப்பட்டதாக இன்றைய நவநாகரீக பெண்கள் நினைக்கின் றனர்.
கண்ணாடி வளையல் அணிவது ஏன்
ப்ரேஸ்லட், பிளாஸ்டிக் வளையல்கள் போன்ற பல்வேறு புதுமைகள் வந்து விட்ட தால், பெண்கள் கண்ணாடி வளையல்களை முற்றிலுமாக மறந்துவிட்டனர் என்றே கூறலாம். ஆனால் இந்த கண்ணாடி வளையல்கள் அணிவதை எல்லா வேளையிலும் தவிர்ப்பது நன்றன்று.
கண்ணாடி வளையல்களின் அற்புதங்கள்
கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத்தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பியுள்ளன. அவை சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டியடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது. அந்த வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணின் மீது விழும் கெட்டப் பார்வையையும்(திருஷ்டி), கெட்ட சக்திகளையும் அழிக்கிறது.
கர்ப்பணி பெண்களுக்கு அவசியம்
கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு, சீமாந்தம் போன்ற சடங்குகள் வைப்பது முற்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கங்கள் ஆகும். இந்த விழாவில் பிரதானமான அம்சமே கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல்கள் அடுக்குவது மட்டுமின்றி, அந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லா வயதுப் பெண்களுக்கும் வளையல் அடுக்குவதுதான்.
கர்ப்பிணி பெண்களுக்கு கண்ணாடி வளையல்கள் அவசியம் என கூற காரணம் என்னவென்றால், நிறைமாத பெண்மணி மெல்ல நடந்துவரும் உடல் வாகைக் கொண்டிருப்பாள். அதனால் அவள் வரும் போது முன்னே, பின்னே அக்கம் பக்கத்தில் செல்பவர்கள் அவள் வருவதைப்புரிந்து கொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒதுங்கிச் செல்வதற்கு அந்தக் கண்ணாடி வளையோசை உதவும் என்பதே ஆகும்.
இளம்பெண்களின் பாதுகாப்பு கவசம்
பொதுவாகவே பெண்கள் இப்படி கண்ணாடி வளையல்கள் அணிவது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அம்சமாகவே இருந்து வந்திருக்கிறது.
விதவிதமான வளையல்கள்
கங்கன் எனப்படும் வளையல், கன்னிப்பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் ஒரு முக்கியமான ஆபரணமாகும். பழங்காலம் முதல் வளையல்கள் கண்ணாடி, சங்கு, தந்தம், அரக்கு போன்ற பல பொருட்களால் செய்யப்பட்டு வந்துள்ளது.
உடைந்த வளையல் கூடாது
கண்ணாடி வளையல்கள் லேசாக உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அணியக்கூடாது. ஏனென்றால், இந்த விரிசல் மூலமாக தீய சக்திகள் உடலில் புக வாய்ப்புள்ளது.
நிறங்களுக்கு என்னென்ன பலன்கள்?
பச்சைநிற வளையல், தேவியின் தத்துவம். இதை அணிவதன் மூலமாக பெண்ணின் உடலில் சந்தோஷம் பரவுகிறது. மேலும் பச்சை நிறம், ஒரு பெண்ணின் கற்புத்திறத்தைக் குறிக்கிறது. சிவப்பு நிறம், கெட்டதை அழிக்கும் சக்தியையும் நல்லனவற்றை அதிகம் கிரகிக்கக்கூடிய சக்தியும் கொண்டது. சில ஜிகினா வேலைப்பாடுகள் உள்ள பச்சை, சிவப்புநிற வளையல்களில் தெய்வீக அதிர்வலை களை கிரகிக்கும் சக்தி குறைவாக உள்ளதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
இந்தியாவில் எப்படி?
பஞ்சாப் மாநிலத்தில் தந்தத்திலும் மேற்கு வங்காள மாநிலத்தில் சங்கிலும் வளையல் செய்யப்படுகிறது. உத்திரப் பிரதேசத்தில் திருமணத்தின் போது மணப் பெண் சிவப்பு வண்ண புடவையும் கண்ணாடி வளையளும் அணிவது மிகவும் மங்களகரமாகக் கருதப்படுகிறது. கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் அவற்றையே பச்சை வண்ணத்தில் அணிகிறார்கள்.

வாயத் தெறந்தா திமுகவினரின் நாற்றம் தெரிய ஆரம்பித்து விடும்..


Image may contain: text

RBI முன்னாள் கவர்னர் திரு,Y.V. ரெட்டி அவர்களின்" Advise and Decent" என்ற நூலில் இருந்து..!

🙏🙏🙏🙏🙏🙏
நன்றி...:
°°°°°°°°
RBI முன்னாள் கவர்னர் திரு,Y.V. ரெட்டி அவர்களின்" Advise and Decent" என்ற நூலில் இருந்து..!
👍👍👍👍👍👍
"எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது...அது 1990களின் ஆரம்பகாலங்கள்.
அந்த நேரத்தில் இந்தியா போன்றதொரு நாடு உலக வங்கியில் தங்கத்தை அடகு வைத்ததை காணும் பொருளாதார நிலையை காண நேர்ந்தது...!
அது ராஜீவ்காந்தியின் ஆட்சிகால நிகழ்வு..தேசத்தின் பாதுகாப்பு என்பது கேள்விக்குரிய காலமாக இருந்த நேரம், ஏனெனில் விடுதலைப் புலிகளால் ராஜீவ்காந்தியின் மரணம் நிகழ்ந்த நேரமது....!
அப்போது சந்திரசேகர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்..அரசின் கஜானா காலியாக இருந்தது. என்ன செய்வதென தெரியாது விழி பிதுங்கி, குழப்பானதொரு மனநிலையில் நின்றது தேசமே.!
ராஜீவ்காந்தியின் ஆட்சிகாலம் வேலைவாய்ப்பு என்பதே இல்லாத காலகட்டமாகவும்,புதிய வேலைவாய்ப்புகள் ஏதுமின்றியும்,புதிய தொழில் தொடங்க, குறைந்தது 50 இடங்களிலாவது தடையில்லா சான்று பெறவேண்டிய அசாதாரண சூழ்நிலை நிலவியது..! இந்த நிலையில் மண்டல் போராட்டம் வேறு தேசத்தை உலுக்கி கொண்டிருந்தது...
அநேகமாக இந்தியப் பொருளாதாரம் என்பது முடிந்தது என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டது... இந்த நிலையில்தான் போபர்ஸ் பீரங்கி தரகு ஊழல் கசியத் தொடங்கியது..
இந்த நேரத்தில் தான் இந்தியாவில் அந்நியநாட்டின் முதலீட்டு இருப்பு கணிசமாக குறைந்து போனது..அடுத்து வரும் 15 நாட்களுக்கே பணக் கையிருப்பு என்ற நிலையில் நாடு தத்தளித்துக் கொண்டு இருந்தது.. வேறு வழியின்றி பிரதமர் சந்திரசேகர் ஆணைப் படி, இந்தியாவின் இருப்பு தங்கம் 47 டன்னை உலக வங்கியில் அடமானம் வைக்க தீர்மானிக்கப் பட்டது..!
இதில் குறிப்பிட வேண்டிய ஓர் விஷயம்.. அந்த கால கட்டத்தில் தொலைதொடர்பு வசதியோ, போக்குவரத்து வசதியோ வளர்ச்சி இல்லாதிருந்தது..
பிரதமரின் முடிவின் படி 47 டன் தங்கம் ஒரு பழைய வேனில் ஏற்றப்பட்டு, வெறும் இரண்டு பாதுகாவலர் துணையோடு பம்பாய் துறைமுகம் நோக்கி பயணப் பட்டது..இதில் கொடுமையான நிகழ்வாக வேனின் இரண்டு டயர்களும் பஞ்சராகிப் போனது..! பல இடைஞ்சல்களுக்கு பிறகு
ஒரு வழியாக தங்கம் இங்கிலாந்து நோக்கி பயணமாகி, உலக வங்கியில் அடமானமாக 47டன்னும் வைக்கப் பட்டு பெறப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா..?
நம்ப மாட்டீர்கள்... வெறும் 40 கோடி ரூபாய் தான்..!
இதை நான் அறிய நேர்ந்த போது அதிர்ச்சியோடு கடும் கோபமும் அடைந்தேன். ஒரு 40 கோடி ரூபாய்காக ஒட்டு மொத்த இந்தியாவையே அடகு வைத்தது காங்கிரஸ் குடும்பம். ஒரு குடும்பத்தின் தேவைக்காக ஒட்டு மொத்த தேசமே அடமானம் வைக்கப் பட்ட அவலம் நடந்தது..
70ஆண்டுகால இந்திய அரசியல் நிகழ்வில் இது போன்ற கேவலமான ஓர் நிகழ்வை நான் இதுவரை கண்டதில்லை....
அதே சமயம், அந்த 70ஆண்டுகால இந்திய அரசியலில் கடந்த 2015 to 2018 காலம் வரை மூன்று நிதி நிலை ஆண்டில் தான் இந்தியா எந்த ஒரு கடனையும் உலக வங்கியில் இருந்து வாங்கவில்லை. காரணம் மோடி என்ற ஒரு ஆளுமை மிக்க பிரதமரின் கீழ் இந்திய நாடு மிகவும் வலிமையாக வளர்ச்சி பெற்றிருந்தே..! இது இந்திய பொருளாதாரத்தின் முன்னேற்ற காலமாக இந்தியர்களுக்கு ஓர் பரிசாக, மோடி எனும் மாமனிதரால் கிடைத்தது...!
நன்றி....,
திரு.Y.V. ரெட்டி, கவர்னர்(முன்னாள்]
RBI/INDIA.....
படித்தேன்... பகிர்ந்தேன்..!
🙏🙏🙏🙏🙏🙏🙏

துரைமுருகன் வீடு, கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை.

வேலூர் மாவட்டம் காட்பாடியில், துரைமுருகன் வீடு, அவரது மகன் கல்லுாரியில் வருமானவரித் துறையினர், பறக்கும் படையினர், தேர்தல் பார்வையாளர்கள் இணைந்த குழுவினர் சோதனை நடத்தினர்.
துரைமுருகன் வீடு, கல்லூரி,  வருமான வரித்துறை, சோதனை
வேலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க., கூட்டணியில், புதிய நீதிக் கட்சி தலைவர், ஏ.சி. சண்முகம் போட்டியிடுகின்றனர்.
இரவு 10:30 மணி
துரைமுருகன் வீடு, காட்பாடி, காந்தி நகரில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, துரைமுருகனும், கதிர்ஆனந்த்தும் பிரசாரத்துக்கு சென்றிருந்தனர். இரவு, 10:30 மணிக்கு, வருமானவரித் துறை அதிகாரிகள் மூவர், துரைமுருகன் வீட்டுக்கு வந்தனர்.தகவலின்படி, சிறிது நேரத்தில், தி.மு.க., வக்கீல்களுடன் துரைமுருகன் வந்தார். 'வாரன்ட் இருந்தால் தான், அனுமதிக்க முடியும்' என, அவர் கூறவே, வெளியேறிய அதிகாரிகள், அதிகாலை, 3:00 மணிக்கு, 'வாரன்ட்'டுடன் வந்தனர்.கிங்ஸ்டன் கல்லூரி
இதையடுத்து, சோதனைக்கு துரைமுருகன் அனுமதித்தார். அதிகாரிகள், துரைமுருகன் வீடு, மாடி, தோட்டம், கார் ஷெட், கார் ஆகியவற்றில், ஆறு மணி நேரம் சோதனை நடத்தி, காலை, 9:00 மணிக்கு வெளியேறினர்.*கதிர்ஆனந்த்துக்கு சொந்தமான, காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரிக்கு நேற்று காலை, 10:00 மணிக்கு வருமானவரித் துறையினர் சென்று, சோதனை நடத்தினர்.*குடியாத்தம் அடுத்த அனங்காநல்லுாரைச் சேர்ந்த, தி.மு.க., முன்னாள் பொதுக்குழு உறுப்பினர், சக்கரவர்த்தி, 60, ஆலங்காயத்தில், தி.மு.க., கிளை செயலர் தேவராஜ், 64, ஆகியோர் வீடுகளிலும், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.இது குறித்து, துரைமுருகன் கூறுகையில், ''எங்களை தேர்தல் களத்தில் எதிர்க்க திராணியற்றவர்களின் சூழ்ச்சி இது,'' என்றார்.
ஸ்டாலின் கண்டனம்தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கையில், 'தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளிலும், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடையும் என, வெளிவரும், 'சர்வே'
முடிவுகளும், மத்திய உளவுத்துறை அறிக்கைகளும், பிரதமர் மோடிக்கு எரிச்சலையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்திஇருக்கிறது.'எனவே, ஆணவத்தின் உச்சகட்டமாக, பிரதமர் மோடியே, நேரடியாகத் தலையிட்டு, துரைமுருகன் வீட்டில், 'ரெய்டு' நடத்த உத்தரவிட்டிருப்பது, காட்டுமிராண்டித்தனமான அதிகார துஷ்யபிரயோகம். இதையெல்லாம் பார்த்து, தி.மு.க., ஒருக்காலும் ஓய்ந்து விடாது' என, தெரிவித்துள்ளார்.
சிக்கிய பணம் எவ்வளவு?


'மகனை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும்' என்பதில், துரைமுருகன் உறுதியாக உள்ளார். காட்பாடி, காந்திநகரில் உள்ள அவரது வீடு, தேர்தல் அலுவலகமாக செயல்படுகிறது. இங்கு வைத்து தான், தேர்தல் பணி செய்யும் கட்சி நிர்வாகிகளுக்கு, பணம், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக, வருமானவரி துறைக்கு புகார்கள் சென்றன.
இந்நிலையில், கதிர் ஆனந்தை அறிமுகப்படுத்தும் கூட்டம், சில நாட்களுக்கு முன், வேலுாரில் நடந்தது. இதில், துரைமுருகன் பேசுகையில், வேலுார் லோக்சபா தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில், அதிக ஓட்டுகள் வாங்கும் தொகுதிக்கு தன் சொந்த பணம், 50 லட்சம் ரூபாய் தருவதாக பகிரங்கமாக அறிவித்தார்.
இதையெல்லாம் கூர்ந்து கவனித்த தேர்தல் பறக்கும் படை, செலவின பார்வையாளர்கள், வருமான வரித்துறை இணைந்த குழுக்கள், துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தியுள்ளன. சோதனையில், 19 லட்சம் ரூபாய் சிக்கியுள்ளது. தன்னிடம், 9 லட்சம் ரூபாய் ரொக்கம் கையிருப்பில் உள்ளதாக, அவரது மகன், வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மீதமுள்ள, 10 லட்சம் ரூபாயை அவர் கணக்கில் காட்டாததால், அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக தெரிகிறது. இது தவிர, நான்கு பைகளில், ஆவணங்களையும் அள்ளி சென்றதாககூறப்படுகிறது.
'துாங்க மாட்டார் துரைமுருகன்'
புதிய நீதிக் கட்சி வேட்பாளர், ஏ.சி. சண்முகம் கூறியதாவது:துரைமுருகன்.
வீட்டில் நடந்த வருமானவரி சோதனைக்கு, நானும், பா.ஜ.,வும் தான் காரணம் என, துரைமுருகன் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். துரைமுருகன் அண்ணன் மீது மதிப்பும், மரியாதையும் அதிகளவு கொண்டன் நான்.அரசியல் நாகரிகம் கருதி, இதுவரை எதுவும் பேசவில்லை. நான் பேச ஆரம்பித்தால், ஒரு மாதம் துரைமுருகன் துாங்க மாட்டார். இவர்களுக்கு எந்த நாட்டில், என்ன உள்ளது என்பதை, நான் சொல்ல வேண்டி இருக்கும். ஒருவர் போனில் பேசுவதை, உளவுத்துறை மூலம் அறிந்து, இதுபோன்ற சோதனை நடக்கிறது. இது கூட தெரியாமல், அடுத்தவர் மீது பழி போடுவது மிகவும் தவறு.இவ்வாறு அவர் கூறினார்.
தே.மு.தி.க.,வினர் வரவேற்பு

துரைமுருகன் மகன் வீட்டில், 'ரெய்டு' நடத்தியதற்கு, சமூக வலைதளங்களில், தே.மு.தி.க.,வினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., - தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., ரகசிய பேச்சு நடத்தியது. பின், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய முன்வந்தது. குறைவான தொகுதிகள் ஒதுக்க, அ.தி.மு.க., முடிவு செய்ததால், இழுபறி ஏற்பட்டது.இப்பிரச்னை தொடர்பாக, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுடன் பேச்சு நடத்த, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் சென்றார். அதேநேரத்தில், சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் இளங்கோவன், முருகேசன் சென்றனர்.இருவரும், தி.மு.க.,வுடன் கூட்டணி பேசுவதற்கு வந்ததாக, துரைமுருகன் வெளிப்படையாக அறிவித்தார். இதன் வாயிலாக, அ.தி.மு.க., - தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., பேச்சு நடத்துவது அம்பலமானது. இது, தே.மு.தி.க.,வினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா, செய்தியாளர் சந்திப்பு நடத்தி, துரைமுருகனை வறுத்தெடுத்தார்.இந்த நிலையில், வேலுார் தொகுதி வேட்பாளரான துரைமுருகன் மகன், கதிர்ஆனந்த் வீட்டில், வருமான வரி துறையினர், 'ரெய்டு' நடத்தியுள்ளனர். இதற்கு, சமூக வலைதளங்களில், தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு தெரிவித்து, பதிவிட்டு வருகின்றனர்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...