Wednesday, July 24, 2019

மத்திய பிரதேச மல்யுத்தம் --- சுற்று --1

பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள்
2 பேர் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர்!
ஒரு மசோதா மீதான வாக்கெடுப்பில்
ஆளும் கட்சிக்கு ஆதரவாக
வாக்களித்த இரண்டு
உறுப்பினர்களில் ஒருவர்
2014 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து
பாஜகவுக்கு தாவியவர்.
இப்போது துணைக்கு ஒருவரை
அழைத்துக் கொண்டு
தாய் வீடு திரும்பி இருக்கிறார்!
இந்த சட்ட மன்ற கூட்டத் தொடருக்கு
முன்பாகவே இந்த இருவரும்
தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு
காங்கிரஸ் கட்சியில் இணைய
தயாராக இருந்தவர்கள்.
பாஜக மாநிலத் தலைமை
சமாதானப் படுத்தி வைத்திருந்தது.
நேற்று கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு
நடந்து முடிந்த நிலையில் கட்சித் தாவலை
தள்ளிப்போட முடியாமல் இன்று
காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டனர்.
* 2018 சட்ட மன்ற தேர்தலில்
காங்கிரஸ் கட்சி ..... .....114 தொகுதிகளையும்
பாரதிய ஜனதா கட்சி...109 தொகுதிகளையும்
வென்றன!
இரண்டு கட்சிகளுக்குமே
பெரும்பான்மை இல்லை!
மாயாவதியின் பகுஜன் சமாஜ் --2
அகிலேஷின் சமாஜ்வாதி ............1
சுயேட்சைகள்.....................................4
ஆதரவுடன் நூலிழை பெரும்பான்மையுடன்
காங்கிரஸ் கட்சியின் கமல் நாத்
ஆட்சி அமைத்தார்.
2019 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு
வெற்றி பெற்று விட்டதால் ஒரு பாஜக
சட்ட மன்ற உறுப்பினர் தனது பதவியை
ராஜினாமா செய்துவிட்டார்.
அதனால் , பாஜக உறுப்பினர்களின்
எண்ணிக்கை 108 ஆக குறைந்தது.
இப்போது இரண்டு பேர் காங்கிரஸ் கட்சிக்கு
தாவியதால் 106 ஆக குறைந்து இருக்கிறது!
* கர்நாடகாவில்
பாஜக குதிரை பேரம் என்று
காங்கிரஸ் சொன்னது!
* மத்திய பிரதேசத்தில்
காங்கிரஸ் குதிரை பேரம் என்று
பாஜக சொல்லும்!
* மல்யுத்தப் போட்டியின் இந்த
முதல் சுற்றில் கமல் நாத் கொடுத்த
குத்தில் காங்கிரஸ் ரசிகர்கள்
குதூகலம் அடைந்து கரவொலி
எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்!
* அடுத்த சுற்று விரைவில்
ஆரம்பம் ஆகும்,
அதில் எங்கள் தேசிய ஆட்டக்காரர்
அமித் ஷா களம் இறங்குவார் ,
கமல் நாத்தை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை
பறிப்பார் என்று பாஜக ரசிகர்கள்
நம்பிக்கையோடு தங்களை
சமாதானப் படுத்திக் கொண்டு
இருக்கிறார்கள்!
* விறுவிறுப்பான
மத்திய பிரதேச மல்யுத்தப் போட்டியின்
அடுத்த சுற்று ஆட்டத்தைக் காண
காத்திருங்கள்!
😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...