Monday, July 22, 2019

ஒரு குழந்தையின் ஜாதகத்தில் தாய், தந்தை நிலை.

இன்றிருக்கும் வாழ்க்கைச் சூழல் நிறைய பேருக்கு "மனஅழுத்தத்தை" கேட்காமலேயே வாரி வழங்கி விடுகிறது. துள்ளித் திரிந்த நாட்கள் என்று பள்ளிப் பருவத்தைப் பற்றி நிறைய பேர் அசை போடலாம். ஆனால்,இப்போதிருக்கும் குழந்தைகளின் பள்ளி வாழ்க்கை எப்படி இருக்கிறது தெரியுமா? புத்தகமூட்டையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு தினமும் சுமார் இரண்டு கிலோ மிட்டர் போய் படித்து வந்து, விளையாட கூட நேரம் போதாமல், அரைகுறையாக சாப்பிட்டு காலை எட்டுமணிக்கு ஸ்கூலுக்கு போகும் பிள்ளைகள் சாயந்திரம் ஆறு மணிக்கு மேல் ீட்டிற்கு வந்தவுடன் டியூஷன் போ அம்மாக்களின் நச்சரிப்பு வேறு தொடங்கி விடும். குழந்தைகளுக்கு இன்றுள்ள வாழ்க்கை முறையில் மேற்படிப்பு, அதற்கு முன் நீட்தேர்வு, வேலை வாய்ப்பு இதை எல்லாம் அடைவதில் உள்ள சிக்கல்களை பக்குவமாக எடுத்துச் சொன்னால் போதும் புரிந்து கொள்வார்கள். அவங்க நமது தலைமுறையை விட புத்திசாலிகள். அத விட்டுட்டு அவங்களை இயந்திரமாக நினைத்து படி படி என்று சொன்னால் குழந்தைகளுக்கு "மனஅழுத்தம்" தான் மிஞ்சும். தயவு செய்து மொட்டுக்களின் மேல் பாறாங்கல்லை வைக்காதீர்கள்...!(ஏன்னா என் வீட்டில் தாய்க்கும், மகளுக்கும் நடுவே தினமும் நடக்கும் வாக்குவாதங்களை பார்த்து கொண்டிருக்கிறேன்)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...