Wednesday, July 24, 2019

சூரியோதயம் 'தமிழக அரசியலில் எனக்கு இனி சூரியோதயம்' தி.மு.க.,வின் அடுத்த விக்கெட் மைத்ரேயனா.

''பார்லிமென்ட்டைப் பொறுத்தவரை இது எனக்கு அஸ்தமன நேரமாக இருக்கலாம். ஆனால் மாநில அரசியலில் இனிமேல்தான் எனக்கு சூரியோதயம் ஆரம்பிக்கப்போகிறது'' என பேசி மைத்ரேயன்பரபரப்பை கிளப்பி உள்ளார்.
'தமிழக, அரசியலில், எனக்கு ,இனி, சூரியோதயம்', தி.மு.க.,வின்,அடுத்த,விக்கெட்,மைத்ரேயனா
தமிழக ராஜ்யசபா எம்.பி.க்கள் மைத்ரேயன், லட்சுமணன், அர்ஜுனன், செல்வராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. டி.ராஜா ஆகிய அறுவரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது.இதையொட்டிஅ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் ராஜ்யசபாவில் பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்; சக எம்.பி.க்கள் அவரை தேற்றினர்.அந்த பேச்சில் தனது எதிர்காலம் குறித்து மைத்ரேயன் குறிப்பிட்டது தான் அ.தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 



அதன் விபரம்:


ராஜ்யசபாவின் முக்கிய நடவடிக்கைகளில் பங்கெடுத்துள்ளது மன திருப்தி அளித்தாலும் ஒரு சம்பவம் மட்டும் முள்ளாய் உறுத்துகிறது.முன்பின் அறியாத எத்தனையோ பேருக்கு இந்த சபை இரங்கல்தெரிவித்துள்ளது; மரியாதை செலுத்தும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு உள்ளது.



ஆனால் 2009ல் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை. மவுன அஞ்சலியும் செலுத் தப்படவில்லை.எனவே என் வாழ்வின் முடிவுக்குப் பின் எனக்காக இரங்கல் தீர்மானமோ மவுன அஞ்சலியோ இந்த சபையில்வேண்டாம். நீண்ட அனுபவத்திற்கு பின் மாநில அரசியலுக்கு திரும்ப உள்ளேன். பார்லிமென்ட்டைப் பொறுத்த வரை இது எனக்கு அஸ்தமன நேரம்.ஆனால் மாநில அரசியலில் இனிமேல் தான் சூரியயோதயம் ஆரம்பிக்கப்போகிறது.இவ்வாறு அவர்பேசினார்.




மைத்ரேயனின் இந்த பேச்சு குறித்து தகவலறிந்த வட்டாரங்கள்கூறியதாவது:அ.தி.மு.க.,வில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் மிக முக்கிய தளகர்த்தராக வலம் வந்தும், இரட்டை இலை முடக்கம், பின் மீட்பு எனஇரண்டிலுமே முக்கிய பங்கு வகித்தும் அணிகள் இணைந்தபின் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டதை மைத்ரேயனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.


லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை அல்லது  தென்சென்னையில் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை. சரி ராஜ்யசபா சீட்டாவது கிடைக்கும் என காத்து இருந்தும் பலனில்லை.பல்வேறு வழிகளிலும் போராடிவிட்டு தனக்கான அங்கீகாரத்தை பெற முடியாமல் தவித்து வரும் மைத்ரேயன் தனது பதவிக்காலம் முடியட்டும் என காத்திருந்தார். இப்போது அதைத்தான் தனது பேச்சில் சுட்டிக் காட்டி உள்ளார்.



தேசிய அரசியலில் நல்ல அனுபவம் வாய்ந்த இவர் 'இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற முடிவுக்கு வந்துள்ளார்.மாநில அரசியலில் சூரியோதயம் என குறிப்பிடுவதன் மூலம் தனது அரசியல் எதிர்காலம் எந்த திசையில் என்பதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார். அந்த திசையை அரசியல் உலகம் விரைவில் தெரிந்து கொள்ளப்போகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...