Monday, July 22, 2019

இந்த இஸ்ரோவில் மகளிரின் பங்களிப்பும் மிக மிக அதிகம்..

திறமை அடிப்படையில் வாய்ப்பளிக்கபடும் இடம் இஸ்ரோ, அதில் இட ஒதுக்கீடு சமூக நீதி எல்லாம் இருந்திருந்தால் சந்திராயன் இப்பொழுது ஆழ்கடல் நோக்கி பயணித்திருக்கும்
இந்த இஸ்ரோ என்பதும் டி.ஆர்.டி.ஓ என்பதும் ஒன்றோடொன்று ஒட்டிய துறைகள்
இந்திய விண்வெளிதுறையில் முதலில் கவனிக்கபட்ட பெண்மணி டெய்சி தாமஸ், கேரளத்துக்காரர்..
அப்துலகலாமுக்கு பின்னரான காலங்களில் டெய்சிதாமஸ் தலமையிலே ஏவுகனை திட்டங்கள் இயங்கின அக்னி ஏவுகனைகள் மேம்படுத்துதலில் அவர் பங்கு உண்டு..
அவரின் தொடர்ச்சியாக பல பெண்கள் சாதிக்க வந்து இன்று சாதித்திருக்கின்றனர்
அவர்களில் வனிதா முத்தையாவும், ரிது காரிடல் எனும் இருபெண்மனிகள் முக்கியமானவர்கள்..
மிக மிக சிக்கலான ராக்கெட் தொழில்நுட்பத்தில் இரு பெண்கள் தலமையில் ஒரு திட்டம் நிறைவேற்றபடுவது சாதாரண விஷயம் அல்ல..
சந்திராயன் 2ன் மிக முக்கியபொறுப்பினை இவர்கள்தான் செய்தார்கள், அதன் முழு கட்டுபாடும் இவர்கள் இருவரிடமே உண்டு
நிச்சயம் இந்திய மகளிர் எல்லாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இது
ஒரு விஷயம் கவனித்தீர்களா?
இவர்கள் பெண்ணியம் பேசவில்லை, பெரியார் அம்பேத்கர் என கிளம்பவில்லை, திராவிடம் இன்னபிற இம்சை இல்லை..
அவர்கள் பெண்குல போராளிகள் இல்லை, முடியினை வெட்டுதல் , புரட்சி பெண்ணியம் பேசுதல் என அழிச்சாட்டியம் செய்யவில்லை.
ஆனால் முறையாக படித்தார்கள், கற்றபடி உழைத்தார்கள்..
ஆணுக்கு பெண் சரிக்கு சரியாக நிற்க முடியும் என எதில் காட்ட வேண்டுமோ அந்த இடத்தில் மிக சரியாக சாதித்திருக்கின்றார்கள்..
பெண் விடுதலை என்பதும், பெண் சமத்துவம் முன்னேற்றம் என்பதும் இதுதான், இதுவேதான்..
மாறாக கருப்பு சட்டை போட்டுகொண்டு தப்பு அடித்து கொண்டு டங் டங் என தெருவில் ஆடுவது வெற்று விளம்பரம், வறட்டு கூச்சல் அதனால் ஆகபோவது ஒன்றுமில்லை.
இதோ டெய்சிதாம்ஸும், வனிதாவும், இந்த ரிதுவும் என்ன பெரியார் வழியில் விடுதலை வாங்கினார்களா இல்லை இட ஒதுக்கீட்டில் சாதித்தார்களா?
தகுதியும் திறமையும் இருக்கும் மகளிர் யாராயினும் இங்கு வெற்றிகொடி நாட்டமுடியும்
வீணாக பிதற்றிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை
இன்று உலகமே திரும்பி பார்க்க சாதித்திருக்கும் மங்கையர் குல திலகங்களான வனிதா முத்தையாவினையும், ரிதுவினையும் பாரதம் வணங்கி வாழ்த்துகின்றது
உலகமே அந்த விண்வெளி மங்கையரை கைதட்டி உற்சாக படுத்துகின்றது
எந்த நாட்டிலும் இல்லாதபடி முதல் முறையாக இரு மங்கையர் மூலம் மாபெரும் சிக்கலான செயற்கை கோளை விண்ணுக்கு செலுத்தி பாரதம் மாபெரும் வழியினை உலகுக்கு காட்டியிருக்கின்றது.
அந்த விண்வெளி மங்கையருக்கு வாழ்த்துக்களை தேசத்தோடு சேர்ந்து நாமும் தெரிவிப்போம்
எங்கள் தேசத்து தங்கங்களே "உங்களை பெற்றதில் பெருமை கொள்கின்றது தேசம்"
நீங்கள் இன்னும் மாபெரும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள், தேசத்து சாதனை மகளிரால் பாரில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கின்றது.
ஒரு வகையில் உலக மகளிரே பெருமைபடும் விஷயத்தை இன்று தேசம் செய்திருக்கின்றது..
இந்திய மகளிரின் புகழ் விண்வெளிக்கு பரவியிருப்பதை உலக மகளிர் மிக மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்கின்றனர்.
(இவ்வளவு பெரும் சாதனை மகளிரால் நிகழ்த்தபட்டும் தமிழகத்தில் பெண்களை காக்க வந்த, உயர்த்த வந்த இயக்கங்கள் கள்ள மவுனம் காக்கின்றதல்லவா?
இதுதான் தமிழக அயோக்கிய அரசியல், கலாமியினையே கதற வைத்த அந்த திருட்டு அரசியல்..)

Image may contain: 2 people, eyeglasses

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...