நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர்...,,
இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன், பணி பெண் மாரியம்மாள் ஆகியோரை கடந்த 23 ம் தேதி மதியம் மர்ம கும்பல் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.
இது குறித்து 3 தனி படைகள் அமைக்கபட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில் முதலில் ஆதாய கொலை என்ற கோணத்திலும் பின்னர் சொத்துபிரச்சனை,அரசியல் ரீதியான கொலை,தேர்தலில் சீட் வாங்கி தருவதில் பணமோசடியால் நடைபெற்ற கொலை என பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஒரு துப்பு கூட கிடைக்காத நிலையில் மதுரையில் உள்ள திமுக பிரமுகர் சீனியம்மாள், உமாமகேஸ்வரியின் அண்ணன் மகன் பிரபு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் காவல்துறைக்கு கொலை வழக்கு தொடர்பாக சிறிய முன்னேற்றம் கூட கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஹோட்டல் சிசிடிவி காட்சியில் சந்தேகத்திற்கிடமான ஸ்கார்பியோ கார் அந்த பகுதியில் நின்றது கண்டறியபட்டது.
மேலும் ஒரு செல்போன் நம்பர் அந்த டவரில் அதிக நேரம் பேசியதாக காணபட்டது .
கார் மற்றும் செல்போன் நம்பர் இரண்டும் ஒரே நபருக்கு சொந்தமானது என்பதை வைத்து விசாரித்ததில் அவர் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பதும் இவன் மீது பல்வேறு காவல்நிலை யங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து கார்த்திகேயனை காவல்துறையினர் பிடித்து பாளையங்கோட்டை ஆயுத படை மைதானத்தில் விசாரணை நடத்தினர்.
இதில் தான் குற்றவாளி என ஒத்து கொண்டதாக கூறப்படுகிறது. கொலையை செய்ய யார் எல்லாம் பயன் படுத்த பட்டார்கள் அவர்கள் யார் என்பது குறித்தும் கார்த்திகேயனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.... சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட இரு முறை 50 லட்சம் வரை பணம் கொடுத்து சீட் கிடைக்காத விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருப்பதாகவே முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது...
இச்சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப் படையினரை கைது செய்ய காவல்துறையினர் விரைந்துளனர். மேலும் தொடர்புடைய 4 பேரை இரவிலேயே கைது செய்துள்ளாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment