Tuesday, July 23, 2019

பவ்யம் பார்லி.,யில் பவ்யம் காட்டும் பாசக்கார தி.மு.க., - எம்.பி.,க்கள்.

தமிழகத்தில், தி.மு.க., உள்ளிட்ட தமிழக, எம்.பி.,க்கள் குறித்த, அனைத்து விபரங்களையும் தோண்டி எடுத்து அனுப்புமாறு, பா.ஜ., தலைமை உத்தரவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பவ்யம் காட்டும் தி.மு.க., - எம்.பி.,க்கள்
தமிழகத்தில், தேர்தல் முடிவுகள் மாறுபட்டு வந்ததில் இருந்தே, தி.மு.க., அணியின் அபார வெற்றி குறித்து, பல்வேறு தகவல்களை, பா.ஜ.,தலைமை சேகரித்து வருகிறது.மத்திய அரசு, மற்ற மாநிலங்களில் அதிரடி ஆட்டத்தை காட்டினாலும், தமிழகத்தை கையில் எடுக்காமல் இருப்பதற்கு இந்த களத்தயாரிப்பு வேலைகளே காரணம்.

இந்நிலையில், ஆளும் கட்சியின் கோபத்தை சம்பாதிக்காமலிருக்க, ஒவ்வொரு எதிர்க்கட்சியும் மேற்கொள்ளும், தந்திரமான நீக்குபோக்கை, பா.ஜ.,வின் மனம் கோணாத வகையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் நன்றாகவே செய்து வருகிறார்கள்.
ரகசிய உத்தரவு
தேர்தல் பிரசாரத்தின்போது அவர்கள் காட்டிய ஆவேசத்தை, இப்போது பார்லிமென்ட்டிற்குள் காண முடிவதில்லை. கோரிக்கை மனுக்கள் அளிப்பதாகவும், நட்பு பாராட்டுவதாகவும் கூறி, பா.ஜ., அமைச்சர்களோடு, நல்ல நெருக்கத்தை வளர்ப்பதில், பல, தி.மு.க.,-எம்.பி.,க்கள் குறியாக உள்ளனர்.இதற்கான பின்னணி, தற்போது தான் தெரிய வந்துள்ளது.
அதாவது, தி.மு.க., எம்.பி.,க்கள் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்களின் அனைத்து விபரங்களையும் சேகரித்து அனுப்பும்படி, பா.ஜ., தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான,அமித் ஷா உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.ஒரு எம்.பி.,யின் பின்புலம், அவரது பலம், பலவீனம், வருமானம், சொத்துக்கள் பற்றிய பின்னணி, குற்ற வழக்குகள் குறித்த விபரங்கள் என, சகலமும், வந்து சேர வேண்டுமென, ரகசிய உத்தரவு போய் உள்ளது.இதற்கான வேலைகள் ஆரம்பித்துள்ள நிலையில்தான், தமிழக, பா.ஜ., மற்றும் நலம் விரும்பிகள் வாயிலாக, இந்த தகவல், தி.மு.க.,- எம்.பி.,க்களுக்கு கசிந்துள்ளது.இதை உறுதிப்படுத்தம் வகையில், டில்லியில்கடந்த, மூன்று வாரங்களாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.தி.மு.க.,- எம்.பி.,க்கள் பலரும், இரவு நேரங்களில், பா.ஜ., மூத்த அமைச்சர்களை வீடுகளுக்கு போய் சந்திக்கின்றனர்.
அதிரடி நடவடிக்கை
ஒரு எம்.பி., போவது, மற்ற எம்.பி.,க்கு தெரியாது. இச்சந்திப்புகளின் போது, வியாபாரம், வழக்குகள் உட்பட தங்களின் பிரச்னைகளை, மூத்த அமைச்சர்கள் சிலரிடம், அவர்கள் பகிர்ந்துள்ளனர்.இத்தகவல்கள், அரசல் புரசலாக தி.மு.க., தலைமைக்கும் தெரிந்து, 'கிராஸ் செக்' செய்த கதையும் நடந்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியை, இதுவரையில், மூன்று தி.மு.க., எம்.பி.,க்களும், இரண்டு காங்கிரஸ் எம்.பி.,க்களும்,சந்தித்திருப்பதாக சொல்லப்படுகிறது.முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்துமே, சைலண்ட் மோடுக்கு' சென்றுவிட்ட நிலையில், அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பாகவே, தி.மு.க.,- எம்.பி.,க்கள், பார்லிமென்ட்டில் பம்முவதற்கு, இந்த பின்னணிதான் காரணம் என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...