கர்நாடகாவில், குமாரசாமி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, அங்கு விரைவில், பா.ஜ.,ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வராக எடியூரப்பா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.
கவர்னரை சந்திக்கிறார்?
கர்நாடகா சட்டசபையில், நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனையடுத்து , மாநிலத்தில் ஆட்சியமைக்க , பா.ஜ., மாநில தலைவர் எடியூரப்பா உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இன்னும் ஓரிரு நாளில், எடியூரப்பா கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் முடிவு
இந்நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு பின்னர் எடியூரப்பா அளித்த பேட்டி: கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியை அமைப்போம். இன்று ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் எனக்கூறினார்.
மக்களுக்கு உறுதி
நம்பிக்கை ஓட்டெடுப்பு தொடர்பாக கர்நாடக மாநில பா.ஜ., வெளியிட்ட அறிக்கை
இது கர்நாடக மக்களின் வெற்றி. ஊழல் மற்றும் நேர்மையற்ற கூட்டணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. நிலையான மற்றும் திறமையான ஆட்சியை அமைப்போம் என கர்நாடக மக்களிடம் உறுதி அளிக்கிறோம். அனைவரும் இணைந்து கர்நாடகாவை வளர்ச்சி பெற செய்வோம் எனக்கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment