Tuesday, July 23, 2019

விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம்.திட்டக்குடி வட்டம்.எறையூர் கிராமத்தில் இருக்கும் ‌அம்பிகா சர்க்கரை ஆலை கடந்த 2017-18 கரும்பு அரவை பருவத்திற்கு விவசாயிகள் அனுப்பிய கரும்பிற்கு இன்றைய தேதி 21.07.2019 வரை பணத்தினை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
2018-19 கரும்பு அரவையை அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் நிறுத்தி விட்டது.பல லட்சம் டன் கரும்புகளை விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வெவ்வேறு கரும்பு ஆலைகளுக்கு புரோக்கர்கள் மூலம் அனுப்பியுள்ளார்கள்.இதனால் ஒரு டன்னுக்கு ரூபாய்.300.00 வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் 2017-18 அரவை பருவத்திற்கு உன்டான கரும்பிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் வட்டியில்லா கரும்பு பயிர் கடன் டைஅப் லோன் வாங்கியதையும் அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் பணத்தினை அனுப்பி கடன் கணக்கை முடிக்காததால் தவனை தவறிய கடனாகிவிட்டது.அதனால் விவசாயிகள் வட்டி கட்ட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 15 மாதத்திற்குள் கடன் தொகையை கட்டியிருந்தால் வட்டி கிடையாது.
தற்பொழுது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் இருந்து அசல் +வட்டி சேர்த்து பணத்தினை திருப்பி கட்ட சொல்லி சம்மன் அனுப்பியுள்ளனர்.அப்படி கடன் தொகையை கட்ட தவறினால் நீதி மன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.
மத்திய அரசு.மாநில அரசு.மாவட்ட நிர்வாகம் அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்.கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடன் விவசாயிகளை நம்பி கொடுக்கவில்லை.சர்க்கரை ஆலை விவசாயிகளின் கரும்பு பணத்தில் இருந்து பிடித்து அனுப்ப உத்திரவாதத்தின் (டைஅப் லோனா )பேரில் தான் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...