Sunday, July 28, 2019

தெளிவான சாஸ்திரமும் அறிவுரையும் அடங்கியிருக்கும்.

ஆசார-நம்பிக்கை ரகசியங்கள் - விடியற்காலையில் எழுந்து நடந்து சென்று நீரில் மூழ்கிக் குளிக்க வேண்டுமென்பது ஏன் ?
பண்டைக்காலத்தவர்கள் ஏதாவது நம்மை நம்பவைத்துள்ளனர் என்றால் அதற்குப் பின்னால் தெளிவான சாஸ்திரமும் அறிவுரையும் அடங்கியிருக்கும்.
காலையில் எழுந்ததும் நெடுதூரம் நடந்து சென்று நீரில் மூழ்கிக்குளிக்க வேண்டும் என்று நம் முதாதையர்கள் போதித்துள்ளனர். பொதுவாக ஓடும் நதிகளிலும், கோயில்க்குளங்களிலும் குளிப்பது தானே வழக்கம். அதிகாலையில் கோயில் குளத்தில் குளிப்பது மிக சிறப்பானதாகக் கருதியிருந்தனர்.
மூழ்கிக் குளிப்பதன் சிறப்பு அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான் ஆனால் நெடுதூரம் நடந்து சென்றுதான் குளிக்க வேண்டும் என்பதன் இரகசியம் என்னவென்பதே கேள்வி.
குளிப்பதற்காக சிறிது நடக்க வேண்டி யிருந்தால் அது ஓர் உடற்பயிற்சியாகவே சிறப்பித்திருந்தனர். இப்படி நடக்கும் போது சுத்த வாயு சுவாசிக்க இயலும். இதனால் மனதுக்கு நிம்மதியும் உடலுக்கு சுகமும் இளைப்பாறுதலும் கிடைக்கின்றது.
கோயில் குளத்தில் முழ்கிக் குளிப்பதனால் நமக்குக் கிடைப்பது உடல் சுத்தி மட்டுமல்ல. இது பிராணயாமத்தின் பயனளிக்கும் என்று மூதாதையர் கூறியுள்ளனர். சுவாசத்தை ஆரோக்கியமாக கட்டுப்படுத்தும் பிராணயாமம் பல வகையிலுண்டு. நீண்ட சுவாசம் இழுத்து, பின் மெதுவாக விடுவதுதான் பிராணயாமத்தின் முறை. இதனால் உடலிலுள்ள கோடானுகோடி கோசங்களுக்கு சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கின்றது. இதன் பயன்கள் எண்ணற்றது. புத்தி கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்க பிராணயாமம் உதவுகின்றது என்று நவீன சாஸ்திரம் அங்கீகரித்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...