Monday, July 22, 2019

ரஜினி அவர்கள் சூர்யாவின் கருத்தை ஆதரித்துள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன மாரிதாஸ்? {கேள்வி : வெங்கட்}

"சூரியா அவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பின் வருவன மட்டுமே"
1.நீட் தேர்வு தேர்வாகவில்லை என்றால் கல்வித் தரம் தாழ்ந்துள்ளது என்று பொருளா ? தரம் இல்லாத கல்விக்கு என்ன செய்ய போகிறோம்?
கடந்த 2006-20011 வரை திமுக ஆட்சியில் கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியால் சுமார் 25,00,000குழந்தைகள் கல்வித் தரம் மோசமாகப் பாதிப்பை அடைந்தது. அதைப் பற்றி ஏன் எவரும் பேசுவது இல்லை என்று புரியவில்லை. இதை நான் சொல்லவில்லை ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் ANNUAL STATUS OF EDUCATION REPORT கூறுகிறது.
நீங்கள் எவர் வேண்டுமானாலும் ANNUAL STATUS OF EDUCATION REPORT 2006 - 2011 எடுத்து ஒப்பிட்டுப் பாருங்கள். எந்த அளவிற்கு தென்னிந்தியாவில் கேரளா , கர்நாடகா , ஆந்திர மூன்று மாநிலங்களை விடத் தமிழகம் மோசமான தரத்துடன் கல்வி இருந்தது என்பதை உணர முடியும். அந்த ஆய்வு அறிக்கை கூறும் சில விவரங்கள் கூறுகிறேன்
1.ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையிடம் இரண்டாம் வகுப்பு பாடத்தைக் கொடுத்துப் படிக்கக் கூறினால் தமிழகத்தில் 60% குழந்தைகளுக்குப் படிக்கத் தெரியாது. ஆனால் அருகே இருந்த கேரளா , கர்நாடகா , ஆந்திர மாநிலத்துக் குழந்தைகள் 40%க்கும் குறைவான குழந்தைகளுக்குத் தான் இந்த பிரச்சனை உண்டு.
2.ஒரு மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் இரண்டு எண்களைக் கழித்தல் கேட்டால் தமிழக குழந்தைகள் 75% குழந்தைகளுக்குத் தெரியாது. ஆனால் அருகே இருக்கும் கேரளா குழந்தைகள் 60% அளவிற்கு அந்த கணக்கைச் செய்வர். அதே போல் ஆந்திராவும் கர்நாடகா மாநில குழந்தைகள் நிலை தரமாகவே இருந்தது.
நன்கு புரிந்து கொள்ளுங்கள் இந்த நிலை அதற்கு முன் நன்கு இருந்தது - ஆனால் என்று கருணாநிதி அவர்கள் சமச்சீர்க் கல்வி அறிவித்தாரோ அந்த ஆண்டு முதல் அதலபாதாளத்தில் கல்வி நாசம் ஆனது. அதற்கு ஆதாரம்
2006ல் எடுத்த ஆய்வு தகவலில் ஒரு 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை மூன்றாம் வகுப்பு படிக்கு குழந்தைக்குக்காணக் கணக்கு பாடத்திட்டத்தில் இருக்கும் ஒரு கழித்தல் கணக்கை 53% குழந்தைகள் எளிமையாகச் செய்தார்கள். ஆனால் அதே ஆய்வு 2011ல் எடுத்த போது 41% குழந்தைகளுக்குத் தான் அந்த கணக்கைச் செய்யத் தெரிந்தது. கொடுமை என்னவென்றால் சமச்சீர்க் கல்வி அறிமுகம் ஆனா ஆண்டுகளில் இது மிக மிக மோசம். 2008ஆம் ஆண்டு 32% குழந்தைகளுக்குத் தான் அந்த திறன் இருந்தது.
ஆக அப்பட்டமாகக் கல்வியை நாசம் செய்தது சமச்சீர்க் கல்வி தான் என்பதை இதிலிருந்து நம்மால் 100% உறுதியாகக் கூற முடியும். இதனால் என்ன பெரிய பாதிப்பு என்று நினைக்கக் கூடாது. அடிப்படையில் வலுவான தரமான கல்வி கிடைக்கவில்லை என்றால் எப்படி குழந்தை எதிர்காலம் வலுவானதாக இருக்கும்???? 3, 5 , 8 ஆம் வகுப்பு குழந்தைகள் கல்வித் தரத்தை ஆய்வு செய்து அதன் தரத்தை முன்னேற்ற நினைக்காமல் வெறும் பள்ளியில் தேர்வானால் போதுமா???
இதன் மூலம் 25லட்சம் குழந்தைகள் வாழ்வை நாசம் செய்தவர்கள் திமுக ஆட்சியாளர்கள்.
இப்போ சூரியா புரிந்து கொள்ள வேண்டிய விசயம் மிக எளிது "எது தரமான கல்வி??????". இந்த கேள்விக்குத் தான் சூர்யாவிடம் சரியான பதில் இல்லை. அவர் மட்டும் இல்லை இதை எதோ உணர்வுப்பூர்வமான விவகாரமாக அணுகும் எவரிடமும் இல்லை.
உண்மையில் மனசாட்சி கொண்டு சூரியா சிந்திக்க வேண்டியது
1.தன் மகள் மகன் படிக்கும் ICSE கல்வித் தரமானதா ?? இல்லை அரசு ஆசிரியராக வேலை செய்து கொண்டு தன் பிள்ளைகளை CBSE பள்ளியில் சேர்க்கிறார்கள் என்றால் அது தரமான கல்வியா?? இல்லை இந்த 25லஞ்சம் குழந்தைகள் வாழ்வைக் காவு வாங்கிய திமுக கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர்க் கல்வித் தரமான கல்வியா???
எது தரமான கல்வி??? இதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அந்த கல்வி அனைத்து குழந்தைகளுக்கு கிடைக்க என்ன வழி என்று பேச வேண்டும். ஆனால் அதைப் பேசாமல் சூரியா வெறும் வசனம் பேசுவது ஏன்? என்பது தான் கேள்வி.
2.அவர் உதவி செய்யும் குழந்தைகள் மருத்துவர் ஆகவில்லை காரணம் நீட் தேர்வு என்பது சரியா???
அதுவும் தவறு.. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்கள் வாழ்வினை பாதிக்கிறது என்பதை தைவிட தவறு. நவோதயா பள்ளிகளில் படித்த கிராமத்து மாணவர்கள் நீட் தேர்வைச் சந்தித்ததில் சுமார் 83% மாணவர்கள் தேர்வாகிவிடுகிறார்கள். இவர்களுக்கும் கிரமானத்து மாணவர்கள் தானே???? ஆக பிரச்சனை மாணவர்களுக்குத் தரமான கல்வியைக் கொடுக்கவில்லையே என்றும், தரமில்லாத கலவியால் நீட் தேர்வாக முடியவில்லை என்பதையும் பற்றி கவலை கொள்ள வேண்டிய நாம் தரத்தை உறுதி செய்ய வந்த நீட் தேர்வை எதற்கெடுத்தாலும் குறை சொல்வது என்ன அறிவார்ந்த செயல்????
அது வெறும் quality test... அந்த தரத்தை மேம்படுத்தி இருந்தால் கட்டாயம் வெற்றி உறுதி. NCERT சிலபஸ் நீங்கள் நடத்திவிட்டுப் போக வேண்டியது தானே.
இங்கே எழும் துணை கேள்வி என்னவென்றால் கிராமத்து மாணவர்களுக்கு முழுவதும் இலவசமான CBSE கல்வி கிடைக்க மத்திய அரசு கொண்டுவந்த நவோதய பள்ளிகளை வேண்டாம் என்று சொன்ன திமுக செய்த அரசியலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவரும் குரல் இதுவரை கொடுக்கவில்லை? அது ஏன்??? இதற்குப் பெயர் என்ன???? சாமர்த்தியமாகப் பிழைத்துக் கொள்வதா??
நவோதயா பள்ளிகளில் இன்றும் நாடுமுழுவதும் 12,00,000குழந்தைகள் படித்து இலவசமாகப் பயன்பெறும் போது, அதில் ஒரு குழந்தை கூட தமிழகத்தில் இல்லை என்பது ஒரு பெரும் வேதனை என்றால் - அதே CBSE பள்ளியை திமுக ஆதரவாளர்கள் நடத்திப் பல லட்சம் நன்கொடை வாங்கி கல்வியை வியாபாரம் செய்து வருகிறார்களே இதை விட ஒரு அயோக்கியத்தனம் உண்டோ????
இன்னும் தெளிவாகக் கூறினால் 2006 கருணாநிதி பதவிக்கு வரும் போது 150பள்ளிகள் கூட CBSE கிடையாது. ஆனால் அவர் என்று சமச்சீர்க் கல்வி கொண்டு வந்து கல்வியைக் கொலை செய்தாரோ அடுத்த சில ஆண்டுகளில் 550 CBSE பள்ளிகள் மாநிலத்தில் உருவாகின. இன்று 800பள்ளிகள் வரை உள்ளது. அனைத்தும் வசதியானவருக்கான பள்ளி. ஏழைகளுக்கானது அல்ல.
3.அடுத்துச் சரி அரசி பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பற்றி பெரும் போது சூரியா கூறுகிறார் - ஆசிரியரே இல்லை பின்ன என்ன ம.... க்கு நீட் தேர்வு என்று.
அரசுப் பள்ளிக் கல்விக்கு ஆண்டுக்கும் தமிழக அரசு எவ்வளவு செலவு செய்கிறது என்று சூர்யாவுக்குத் தெரியவில்லை போலும். சூரியா அவர்களே அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,00,000 கோடி செலவு செய்கிறது. அதாவது ஒவ்வொரு குழந்தையில் தலைக்கும் சுமார் 45,000ரூபாய் அரசு செலவு செய்கிறது அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் கல்விக்கு. ஆனால் தரம் தான் படும் மோசம்.
அந்த 45,000ரூபாயை நேரடியாக அந்த குழந்தைகளிடம் கொடுத்து எந்த பள்ளியில் வேண்டுமானாலும் போய் படியுங்கள் என்று அரசு சொன்னால் நிச்சயம் அரசுப் பள்ளி பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டார்கள் அந்த குழந்தைகள். இலவச கல்வி கொடுக்க வேண்டும் ஏழை குழந்தைகளுக்கு ஆனால் அதை அரசுப் பள்ளி ஆசிரியர் வைத்துக் கொடுப்பதுதான் வினை தான் இது.
அனைத்து அரசுப் பள்ளியையும் ஏன் ராமகிருஷ்ணா போன்ற சிறந்த பள்ளி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கக் கூடாது???? அந்த அந்த மாவட்டத்தில் இருக்கும் சிறந்த நிர்வாகிகளிடம் கொடுத்தால் அரசுக்கும் தொல்லை இல்லை , மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும் தானே????
எனவே அரசு ஊழியர்கள் தான் பிரச்சனையே தவிர இங்கே வேறு இல்லை பிரச்சனை. செலவும் அதிகமாகவே செய்கிறோம் என்ற உண்மை சூர்யா உணரவேண்டும்.
4.அடுத்து சூரியா மட்டும் அல்ல இன்று வசனம் பேசி திரியும் அனைவரும் உணர வேண்டிய இன்னொரு உண்மை :
கடந்த 2011ஆம் ஆண்டு வரை கூட அரசு பெண்கள் பள்ளியில் 31% கூட கழிப்பறை வசதி கிடையாது. சுமார் 60வருடத் திராவிட ஆட்சியாளர்களின் சாதனையில் நிச்சயம் இதைச் சேர்க்கலாம். ஆனால் மோடி அவர்கள் பதவிக்கு வந்து 5ஆண்டுகளில் 89% பள்ளிகளில் கழிப்பறைகளைக் கட்டினார். இன்று அது 100% நோக்கிச் செல்கிறது. என்றாவது நரேந்திர மோடி முன் வைத்த இந்த விதமாகத் திட்டங்களைச் சூரியா மட்டும் அல்ல எவராது இங்கே பாராட்டியது உண்டோ????
ஆக நல்லதை வெளிவந்து பாராட்டாத உள்ளம் கொண்டவர் - குறை சொல்வதில் அட்டும் கவனம் செலுத்துவதும் அதுவும் முறையாகப் புரிந்து கொள்ளாமல் வசனம் பேசுவது சரியா??? மக்களைத் தூண்டிவிடுவது என்ன சரி????
இறுதியாக :
மதிப்பிற்குரிய ரஜினி அவர்கள் சூரியா அவர்களின் கருத்தை வரவேற்றுப் பேசி இருப்பது எனக்கு ஆச்சரியம் இல்லை, அப்படி தான் பேசுவார்கள் என்று தெரியும். நான் மாரிதாஸ் என் கருத்திலிருந்தும் மாறுவதாக இல்லை. நிச்சயம் அவர் என் பக்கம் உண்மையை ஏற்பார் - அதே போல் சூர்யா அவர்களும் உண்மை உணர்த்தல் ஏற்பார்.
ஆனால் எனக்கு ஒரு விஷயம் நிச்சயம் தெரியும் நான் அறிந்த ரஜினி "எவர் உண்மையை அதரங்களுடன் எடுத்து முன்வைத்து விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்களோ அவர்கள் பேச்சைக் காது கொடுத்துக் கேட்பார் மதிப்பளிப்பார். அதைத் தான் அங்கீகரிக்கவும் செய்வர்". அந்த வகையில் ரஜினி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அனைத்து இடங்களிலும் நவோதயா பள்ளிகளைக் கொண்டுவருவார். அத்தோடு NCERT சிலபஸ் தரத்தை முழுமையாக CBSE போல் ஏழை அரசு குழந்தைகளுக்கும் கிடைக்க ஆவன செய்வார். அவர் அதிமுக்கியமாகக் கருதுவதே கல்வி விவகாரம் தான். எனவே என் உண்மை அவர் அங்கீகரிப்பார்.
-மாரிதாஸ்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...